அரிமா சங்க தூத்துக்குடி மாவட்ட ஆளுநரின் காயல்பட்டினம் வருகையையொட்டி 02.04.2012 அன்று துளிர் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த மூலிகைத் தோட்டத்தை அரிமா ஆளுநர் திறந்து வைத்தார். நிகழ்ச்சி குறித்த விபரங்கள் பின்வருமாறு:-
அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வருடாந்திர வருகைக் கூட்டம், வரும் 02.04.2012 திங்கட்கிழமையன்று, காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை முன்னிட்டு முன்னதாக, அன்று மாலையில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்களுதவி, ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சாலை வழிகாட்டு பலகைகள் திறப்பு, பயணியர் தரிப்பிடம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காயல்பட்டினம் நகர அரிமா நிர்வாகிகள் முன்னிலையில், அரிமா மாவட்ட ஆளுநர் கே.எஸ்.மணி திறந்து வைத்தார்.
பின்னர், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தை, புதிய செடிகளை நட்டு அவர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் நகர அரிமா சங்க நிர்வாகிகளின் சிறப்பு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இரவு 07.00 மணியளவில் மேடை நிகழ்ச்சிகள், காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது. காயல்பட்டினம் நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அரிமா மாவட்ட ஆளுநரின் மனைவி எம்.சொர்ணம்மாள் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் எம்.ஏ.முஹம்மத் ஃபஹீம் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பின்னர், கொடி வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரிமா பிரார்த்தனை, உலக சமாதானத்தை மனதிலேற்றி ஒரு நிமிட மவுனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எஸ்.எம்.அப்துல் காதிர், எம்.எல்.ஷேக்னா லெப்பை, வி.டி.என்.அன்ஸாரீ ஆகியோர் அரிமா செயல்திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், கொள்கை கோட்பாடுகள் குறித்து உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, அரிமா மாவட்ட ஆளுநர் கே.எஸ்.மணி உரையாற்றினார். காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் சேவைகளை அவர் தனதுரையில் பாராட்டிப் பேசினார்.
பின்னர், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தையல் இயந்திரங்கள், அடுமனைக் கருவிகள், இட்லி பாத்திரங்கள், மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் என பல உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பின்னர், கராத்தே போட்டிகளில் வென்றோருக்கு சான்றிதழ்கள், கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவ-மாணவியருக்கு உதவித்தொகைகள், உயிர் காக்கும் உதவி திட்டத்திற்கு அதிக நிதி சேகரித்துத் தந்த பள்ளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவற்றை அரிமா ஆளுநர் வழங்கினார்.
பின்னர், புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ள ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஹாஜி ஆதம் சுல்தான், ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர், அரிமா நிர்வாகிகளான எம்.குணசேகரன், எல்.ராஜசிவன், பால்ராஜ் மெக்கன்னா, சுயம்புராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அரிமா நகர தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், செயலர்களான வி.டி.என்.அன்ஸாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, பொருளாளர் கே.அப்துர்ரஹ்மான் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
[இச்செய்தில், மூலிகைத் தோட்டம் துளிர் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டது என்பதே சரி! செய்தி திருத்தப்பட்டது @ 12:04/10.04.2012] |