ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் ஐந்தாவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மூன்றாமாண்டு தொடக்க இம்மாதம் 28ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பின் ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது மன்றத்தின் ஐந்தாவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 28ஆம் தேதி, மில்டன் கெய்ன்ஸ் மாநகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தின் உள்ளரங்கில் (Cricket Pavilion) காலை 11.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
Time:
11.00 A.M to 05.30 P.M.
Venue:
Cricket Pavilion
High Street,
Great Linford
Milton Keynes
MK14 5AX
இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் - பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி‘ மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது. மேலும் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் - முதலுதவி குறித்த பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பொதுக் குழுவின் உள்ளூர் பிரிதிநிதியாக, மன்றத்தின் ஒருக்கிணைப்பாளர் / செயற்குழு உறுப்பினர் ஹாஃபில் அப்துல் மத்தீன் லபிப் அவர்கள் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிருப்பதற்காக, இந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, கூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும், மகிழ்விக்கவும் அன்புடன் அழைக்கிறோம்.
உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |