நெல்லை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து, காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் நடத்தும் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழான மருத்துவ இலவச முகாம் 08.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடைபெறுகிறது.
இம்முகாமில், நெல்லை ஷிஃபா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கவுள்ளனர்.
முகாமில் தேர்வு செய்யப்படும் நோயாளிகளுக்கு,
இருதய நோய் (ஆஞ்சியோப்ளாஸ்டிக், தற்காலிக மற்றும் நிரந்தர பேஸ் மேக்கர் வால்வு சரிசெய்தல்),
இருதய அறுவை சிகிச்சை (பைபாஸ், வால்வு மாற்று, பலூன் வால்வு ப்ளாஸ்டிக்),
சிறுநீரக கல்லடைப்பு, சதை அடைப்பு,
சிறுநீரக செயலிழப்பு, ஏ.வி.பிஸ்டுலா அறுவை சிகிச்சை, கிட்னி பயாப்ஸி,
டயாலிஸிஸ் சிகிச்சை,
மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை,
குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை,
இடுப்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை,
கால் நரம்பு சுருட்டிற்கு நவீன அறுவை சிகிச்சை,
தேவைப்படுவோருக்கு காது கேட்கும் கருவி,
இரைப்பை - குடல் நோய் அறுவை சிகிச்சை,
கருப்பை புற்றுநோய், புற்றுநோய் கட்டிகளுக்கான அறுவை சிகிச்சை,
தீக்காயம், உதடு பிளவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள், முதலமைச்சரின் விரிவான மருததுவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படவுள்ளது.
தேர்வு செய்யப்படும் நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட பின்னர், மருந்து - மாத்திரைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் குழுவினர் செய்து வருகின்றனர். |