காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா - தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் குழு ஏப்ரல் 1 அன்று காலை சென்னை வந்தடைந்தது. அன்று (ஞாயிறு) மதியம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - பிரசித்தி பெற்ற சுற்றுப்புற சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் EXNORA வின் நிறுவனர் M.B. நிர்மலை நேரில் சந்தித்தனர்.
நகராட்சி நிர்வாகத்துறையின் இணை இயக்குனர் (நிர்வாகம்) எஸ்.செபாஸ்டினையும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்தனர்.
உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு அவ்வேளையில் இணை இயக்குனர் விளக்கம் அளித்தார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையின் முதன்மை செயலாளரான ஷீலா பாலகிருஷ்ணன் அலுவலகத்தில் - நகர்மன்றத் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்ட மனுவினை வழங்கினர்.
மேலும் காயல்பட்டினம் அரசு மருத்துவனைக்கு பெண் மருத்துவர் (DGO) தேவைக்குறித்த மனுவினையும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அலுவலகத்தில் வழங்கினர்.
உறுப்பினர்கள் விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்ய நகர்மன்றத் தலைவர் கடந்த மாதம் 21 ம் தேதி சென்னை வந்திருந்தார். மூன்று நாட்கள் சென்னையில் இருந்த நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - சென்னை பாலவாக்கத்தில் உள்ள நகர்மன்றத் தலைவரின் கணவர் எம்.எம். சேக் அப்துல் காதரின் குடும்ப இல்லத்தில் தங்கியிருந்தனர்.
ஏப்ரல் 3 (செவ்வாய்) அன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு ஏப்ரல் 4 (புதன்) அன்று காயல்பட்டினம் திரும்பினர்.
1. Re: காயல்பட்டினம் நகர்மன்றத்... posted byVilack SMA (Hong Shen , Siacun)[07 April 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 18106
தலைவி மற்றும் உறுப்பினர்களின் சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவ்வப்போது அறியத்தந்தமைக்கு kayalpatnam .com க்கு மிக்க நன்றி . இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தலைவி மற்றும் உறுப்பினர்களின் அனுபவங்களை , அவர்களை பேட்டி கண்டு , அதையும் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் .
2. Re: காயல்பட்டினம் நகர்மன்றத்... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 April 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18109
அல்ஹம்து லில்லாஹ்...
மன நிறைவுடன் திரும்பி வந்தீர்களா.. தங்களின் பயணங்களின் நோக்கங்கள் வெற்றிகரமாக அமையும்... இன்ஷா அல்லாஹ்..
உங்கள் அனைவர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
கூடவே இன்னும் ஒருவரையும் எங்கள் நன்றிகளிலும், பாராட்டுக்களிலும், துஆவிலும் சேர்ப்பது கடமையும் கூட.
அவர் தான் நகராட்சி மன்ற தலைவி உடைய கணவர், சகோ. எம்.எம். சேக் அப்துல் காதர். ஒவ்வொரு நிமிடமும் தலைவி அவர்களுக்கு உறுதுணையாகவும், அரணாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருகிறார்கள். தேங்க்ஸ் காக்கா..
இப்படி ஒரு பெண் சாதனை புரியணும் என்றால், கணவனின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். இந்த ஒத்துழைப்பு நம் தலைவிக்கு கிடைத்ததற்கு வல்ல ரஹ்மானுக்கு நன்றிகள்.
3. Re: காயல்பட்டினம் நகர்மன்றத்... posted byA.LUKMAN (kayalpatnam)[08 April 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 18115
சகோதரர் சாளை ziaudeen அவர்கள் சொன்னது போல் நகரமன்றதலைவி அவர்களின் கணவர் ஜனாப் ஷேக் அவர்கள்
மிகவும் பாராட்டுக்குரியவர்.
சென்னையில் எங்களுக்கு மிகவும்
உதவியாக இருந்து அன்புடன் உபசரித்தார். எந்த நேரத்திலும்
எல்லா வேளையிலும் புன்சிரிப்புடனும் பொறுமையிடுடனும்
காணப்பட்டார்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலும்
ஒரு பெண் இருப்பதாக சொல்வார்கள். இந்த பெண்ணின்
வெற்றிக்குப்பின்னால் அவருடைய கணவரான இந்த ஆண்
இருக்கிறார். ஷேக் ஒரு ஜென்டில்மேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross