தமிழக அரசின் வரலாறு காணாத மின் வெட்டு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் 04.04.2012 புதன்கிழமை மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
அக்கட்சியின் நகரச் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான தா.திருத்துவராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், எஸ்.சங்கரசுப்பு, சு.பன்னீர் செல்வம், செ.இரவிச்சந்திரன், ஆ.துரைராஜ், பெ.தமிழ்ச்செல்வன், பொன். கல்யானசுந்தரம், த.கலைச்செல்வி, ச.கண்ணன், த.ஜான் ஸ்டான்லி, ரெ.ராஜேந்திரன், சு.ஜெயபாண்டியன் ஆகிய மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். சு.நடராஜன் நன்றி கூறினார். |