காயல்பட்டினம் நகராட்சியில் புதிதாக துப்புரவு பணிகளுக்கு தேவையான பொருட்களுக்கு டெண்டர் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இப்பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் - ஏப்ரல் 10 வரை பெறப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த டெண்டர் அறிவிப்பில் பல அரசு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என காயல்பட்டணம்.காம் - ஏப்ரல் 2 அன்று - காயல்பட்டினம் நகராட்சியில் தொடர்ந்து மீறப்படும் டெண்டர்கள் குறித்த விதிமுறைகள்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கிடையே - டெண்டர் திறக்கப்பட ஒரு வாரம் இருக்கும் காலகட்டத்தில் - ஏப்ரல் 3 - அன்று தினத்தந்தி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் டெண்டர் குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த டெண்டரை பொறுத்தவரை, விதிகள்படி - இரு தமிழ் நாளிதழ்களில், தமிழகம் முழுவதுமான பதிப்பில், 15 தினங்களுக்கு முன்னர், விளம்பரம் வெளியிட்டிருக்கவேண்டும்.
Dumber Placer Bin, Dumber Placer Vehicle மற்றும் Push and Pull Carts ஆகிய பொருட்களுக்கான அந்த டெண்டர் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான புதிய தேதி - மே மாதம் 3 - என தினத்தந்தி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:
ஒப்பந்தப்புள்ளி தேதி மாற்றம் அறிவிப்பு
காயல்பட்டினம் நகராட்சியிலிருந்து 03.04.2012 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு குழுமம் (ந.க. எண். 1404/2011/அ) டெண்டர் தேதி 10.04.2012 என்பதற்கு பதிலாக சில தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களுக்காக 03.05.2012 என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஆணையாளர்,
காயல்பட்டினம் நகராட்சி.
|