இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் பொதுக்குழுக் கூட்டத்தில் அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ச்சியிழந்த மாணவர்களின் நலனுக்காக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் பொதுக்குழுக் கூட்டம், மன்றத் தலைவர் ஜனாப் எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையில், 06.04.2012 அன்று மாலை 05.00 மணியளவில், கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில் நடைபெற்றது. காரீ ஏ.டி.அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
புதிய நிர்வாகக் குழு:
சுமார் 60 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது:-
தலைவர்:
ஜனாப் M.S. ஷாஜஹான் அவர்கள்
துணைத்தலைவர்கள்:
ஜனாப் I.K.ஷாஜஹான் அவர்கள்,
ஜனாப் P. A .M. பல்லாக் லெப்பை அவர்கள்
பொதுச் செயலாளர்:
ஜனாப் B.M.ரபீக் அவர்கள்
துணைப் பொதுச் செயலாளர்:
M.N.முஹம்மது இப்ராகிம் மக்கி (48 ) அவர்கள்
பொருளாளர்:
S.I.அகமத் அவர்கள்
இணைப் பொருளாளர்:
S.S. ஷாகுல் ஹமீது (AKM) அவர்கள்
மக்கள் தொடர்பாளர்:
O.L.M. ஆரிப் அவர்கள்
செயற்குழு உறுப்பினர்கள்:
மாசே அலி அவர்கள்
டூட்டி முஹம்மது மொஹியதீன் அவர்கள்
தங்கள் நூஹு அவர்கள்
S.I.நூஹு அவர்கள்
M.N.முஹம்மது அலி (48 )அவர்கள்
S.M.B.செய்யித் இஸ்மாயில் அவர்கள்
R.ஷேக் அலி அவர்கள்
M.அப்துல்லாஹ் மக்கி ஆலிம் அவர்கள்
M.I.S.நிஜாமுத்தீன் அவர்கள்
M.I.முஹம்மது நூஹு அவர்கள்
M.A.அப்துல் காதர் அவர்கள்
K.M.செய்யித் முஹம்மது(ஹாஜி ) அவர்கள்
M.N.ஆரிப் அவர்கள்
A.செய்யித் உமர் கலாமி அவர்கள்
N.அப்துல் காதர் அவர்கள்
சிறப்பழைப்பாளர் உரை:
மேற்கண்டவாறு மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராக, தாய்லாந்து - பாங்காக் நகரிலுள்ள சின்ஸியர் லங்கா நிறுவனத்தின் அதிபர் ஜனாப் மீரா சாஹிப் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு, காவாலங்காவின் நகர்நலப் பணிகளுக்காக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர் கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான ஜனாப் எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.
தேர்ச்சியிழக்கும் மாணவர் நலனுக்கு புதிய திட்டம்:
அவரது உரையைத் தொடர்ந்து, ஜனாப் எஸ்.ஐ.புகாரீ அவர்களால் கொண்டு வரப்பட்ட செயல்திட்டமான - ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சியை இழக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு - அவர்கள் தேர்ச்சியிழந்த பாடத்தில் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற வழிகாட்டுவதோடு, அதனைத் தொடர்ந்து தொழிற்கல்வி பயில அவருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
உறுப்பினர் கருத்துரை:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கலாமி செய்யித் உமர், மக்கி நூஹுதம்பி, M.M.மஹ்மூத், S.A.ஜவாஹிர், அஹ்மத்
தம்பி ஹாஜி அவர்களும் மற்றும் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, டூட்டி முஹம்மது மொஹிதீன் அவர்கள் கடிதம் மன்றத்தில் வாசிக்கப்பட்டு
சம்பந்தப்பட்டவர்களால் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
மறைந்த துணைத்தலைவர் மஃபிரத்திற்காக துஆ:
காவாலங்காவின் துணைத் தலைவராக இருந்து, நமதூர் மக்களுக்கும் இந்த
மாமன்றத்துக்கும் பெரும் சேவை செய்து மறைந்த ஜனாப் டில்லி முஹியதீன் ஹாஜி அவர்களின் மஃபிரத் - பாவப் பிழைபொறுப்பிற்காகவும், அவர்களுக்கு மேலான சுவர்க்க பதியை அல்லாஹ் அருள வேண்டுமென்றும் துஆ இறைஞ்சப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துஆ இறைஞ்சினார்.
சிறப்புரை:
அதனைத் தொடர்ந்து, “கூட்டாக தர்மம் செய்தல்” என்ற தலைப்பின் கீழ் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கி காஷிபி தேவ்பந்தி என்ற தலைப்பில் மிகவும் நெஞ்சை தொடும் செய்திகளை
திருமறையிலிருந்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
மணிமொழிகளில் இருந்தும் ஆதாரங்கள் காட்டி சிறப்புரையாற்றினார்.
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி & தேநீர் பரிமாறப்பட்டது.
திருமண அழைப்பு:
செயற்குழு உறுப்பினர்கள் என். முஹம்மது அப்துல் காதர் அவர்களுக்கும்,
காரி ஏ.டி.அப்துல் காதர் அவர்களின் இரட்டை புதல்வர்களுக்கும் எதிவரும் மே
மாதம் இறுதியில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் அவற்றுக்கு அனைவரும்
கலந்து சிறப்பித்து தரும்படியும் அழைப்பு விடுத்தார்கள்
மவ்லவீ ஹாஃபிழ் மிஸ்கீன் சாஹிப் ஃபாஸீ மஃரிப் தொழுகையையும், காரீ ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டி.ஹாஜி இஷா தொழுகையையும், கூட்ட நிகழ்விடத்திலேயே கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுவித்தனர். இரவு 08.00 மணியளவில் கூட்டம் இறையருளால் நிறைவுற்றது.
இவ்வாறு, இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா தனதறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவல்:
O.L.M.ஆரிஃப்,
(மக்கள் தொடர்பாளர்)
மற்றும்
N.முஹம்மத் அப்துல் காதிர்,
(செயற்குழு உறுப்பினர்)
இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா,
கொழும்பு, இலங்கை. |