இன்று (ஏப்ரல் 11) இந்திய நேரப்படி மதியம் 2:09 மணியளவில்
- இந்தோனேசியாவின் அசே மாநிலத்தின் அருகில் - கடலுக்கு 22 கிலோமீட்டர் ஆழத்தில் - நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.6 என கணக்கிடப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் - இந்தியாவில் சென்னை உட்பட பல இடங்களில் உணர முடிந்தது.
இந்த அளவிலான நில நடுக்கம், சுனாமி எனும் பெரும் அலையினை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் - இந்தியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. |