ஐக்கிய அரபு அமீரகம், துபை காயல் நல மன்றத்தின் சார்பில் விமரிசையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது “காயலர் தினம் 2012”. இதில், அமீரகம்வாழ் காயலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயலர் தினம்:
சுவைமிக்க "காயல் களரி"யுடன் துபையில் "காயலர் தினம் 2012" உற்சாகக் கொண்டாட்டம்!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், துபை காயல் நல மன்றத்தினரின் "காயலர் தினம் 2012" மிகவும் கோலாகலமாக இம்மாதம் 6 ஆம் தேதி ஏற்கனவே அறிவித்திருந்தபடி துபை சத்வாவில் அமைந்துள்ள அல் சஃபா பூங்காவில் நுழைவாயில் 2 டின் அருகாமையில் ஒரு பெருநாள் நிகழ்வு போல் கொண்டாடப்பட்டது.
முன்னேற்பாடுகள்:
வெள்ளிக்கிழமை அன்று வழமை போல் காலை முதலே அமீரக வாழ் காயலர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் சகிதம் பூங்காவில் கூடத்தொடங்கி விட்டனர். வருகை தந்தவர்களுக்கு சிற்றுண்டியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்றத்தின் உறுப்பினர்கள், வரவேற்பு, உறுப்பினர் முகவரிகள் சேகரிப்பு, சந்தா வசூல், சாப்பாடு ஏற்பாடுகள், கூட்ட ஏற்பாடுகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகள் என்று தனித்தனி குழுவாக செயல்பட்டு தத்தம் பணிகளை செவ்வனே செய்திருந்தது கூட்ட நுழைவாயிலேயே தெரிந்துகொள்ள முடிந்தது.
உணவேற்பாடு:
உறுப்பினர்களுக்கும், விருந்தினர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் இவ்வருடம் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக 'ஆக்கிக்காட்ட' வேண்டும் என்ற மும்முரத்தில் சாப்பாடு ஏற்பாட்டுக்குழுவினர் கூட்ட நிகழ்விற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே செயல்பட தொடங்கி, வருகை தந்தோருக்கு "காயல் களரி" விருந்து அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
உறுப்பினர் சங்கமம்:
காலையிலேயே இந்த சிறப்பான நிகழ்விற்கு வருகை தந்த காயலர்கள் ஒருவருக்கொருவர் முகமன்கள் கூறி க்ஷேமங்களை விசாரித்தவண்ணம் இருக்க, ஒவ்வரு குழுவும் அவரவர் பணிகளை செய்துகொண்டிருந்தது. ஆண்கள் பெண்களுக்கென தனிதித்தனியே பாய்கள் விரிக்கப்பட்டு இட நெருக்கடி இல்லாத வண்ணம் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வருகை தந்த காயலர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
விளையாட்டு மாமா...
மன்றத்தின் துணை தலைவர் ஜனாப் சாளை சலீம் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்ததும் சிறார்கள் எல்லோரும் புடை சூழ்ந்து "கேம் அங்கிள், எங்களுக்கு எத்தனை கேம் இருக்கு? எப்போ நடக்கும்? " என்று ஒவ்வொருவராக பேராவலுடன் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.
பொதுக்குழுக் கூட்டம்:
ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் வருகை தந்திருந்தோர் அனைவரும் ஓரிடம் கூட, அல்லாஹ் அருளால் கூட்ட நிகழ்வுகள் மன்றத்தின் தலைவர் J S A புஹாரி அவர்கள் தலைமையில் ஆரம்பித்தது. ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி அவர்கள் இறை மறையை ஓதி கூட்டம் ஆரம்பமானது.
மன்றத்தின் தலைவர் புஹாரி அவர்கள் வந்திருந்த அனைவரையும் மனதார வரவேற்று "நமது மன்றத்தின் வெற்றி நமது ஒற்றுமையின் வெளிப்பாடுதான் என்றும், உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது மன்றம் நமதூருக்கும் நமது சமூகத்தினர்க்கும் மென்மேலும் உதவிகள் செய்து சிறக்க வேணடும் என்று பிரார்த்தித்தவராக தனது தலைமை உரையை முடித்தார்.
வாழ்த்துரை:
காயல் நல மன்றம் அபூதாபி யின் தலைவர் அல்ஹாபிழ் ஹபீப் ரஹ்மான் ஆலிம் அவர்களும், கௌரவத்தலைவர் இம்தியாஸ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களது உரைகளுக்குப் பின் புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
சிறப்புக் காயலர்கள்:
அதேபோல், அமீரகத்திற்கு தத்தம் மக்களை காண வருகைத் தந்திருந்த M. S. முஹம்மத் மரைக்கார், எல்கே பள்ளியின் முதன்மை ஆசிரியர் புஹாரி (ஓய்வு) ஆகியோர், மற்றும் தாய்லாந்து காயல் நல மன்றத்தின் இணை செயலாளர் விளக்கு நூர் முஹம்மது ஆகியோர் மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டி ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள். அவர்களனைவருககும் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றத்தின் தலைவல் JSA புஹாரி அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார்கள். இந்தக் கூட்டத்தை மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஷேக் ஸலீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
விளையாட்டுப் போட்டிகள்:
இந்த ஒன்றுகூடலின் இரண்டாம் பகுதியான கேளிக்கை விளையாட்டுக்களை சாளை ஸலீம் அவர்கள் நெறிப்படுத்தி தந்தார். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (இரண்டு நிமிடம் தமிழில் கொடுக்கப்பட்ட தலைப்பில் உரையாடுவது), விஜய் டிவி புகழ் "மாத்தி யோசி" , மற்றும் வினாடி வினா போன்ற வேடிக்கை விளையாட்டுகள் நடைபெற்று, வந்திருந்தோரின் மனங்களை வென்றது.
பரிசளிப்பு:
வெற்றி பெற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் Fuji Digital Camera, LG dual Sim Mobile with Etisalat Sim Card, melomine dinner set, Prestige non stick cookware, Aftron Rice cooker, Nikai DVD Player, Electric kettle, Mr. Light Emergency Light, Iron Box, Philips hair dryer and Glass water set பரிசுகளாக வழங்கப்பட்டது.
பரிசுகளுக்கு அனுசரணை:
இப்பரிசுகளுக்கு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான
- விளக் ஷேக் தாவூத் - Al Banna Workshop, Dubai
- பால் முஹம்மது - Al Rasafa Building Materials , Dubai
- MKT அபூபக்கர் - Toshiba Elevators LLC, Dubai
- அய்யூப் ஜமீல் – Jameel Jewellers
- A. L. பாக்கர் சாஹிப் - Al Zahra Cargo Services, dubai
- முஹம்மது முஹைதீன் - Best Choice Cafeteria, AbuDhabi
- அப்துல் சுக்கூர் - Pearl Shipping, Dubai
- சேப் காதர் - Golden Automobile & water Services, Kayalpatnam
- சேட் - Moon Trading Packing Materials
ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர்.
காயல் பாரம்பரிய களரி சாப்பாடு:
இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, மணமணக்கும் "காயல் களரி" பரிமாறப்பட்டது. வந்திருந்தோர் அனைவரும் மனதார சாப்பிட்டு உளமார சாப்பாடு ஏற்பாடு குழுவினரை பாராட்டினார்கள். உணவு ஏற்ப்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான துணி உமர் மற்றும் விளக்கு தாவூத் ஹாஜி அவர்களும் இணைந்து மிகவும் சீராக செய்திருந்தனர்.
வெளிநாட்டுத் தம்பதி...
சாப்பாட்டின் போது அமீரகத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஒரு ஹாலந்து நாட்டு தம்பதியினர் நமது ஊர் கூட்டத்தை ரசித்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.
மகளிருக்கான போட்டிகள்:
பெண்கள் பிரிவில் அவர்களுக்கென பொது அறிவுப்போட்டிகள் மார்க்க சம்பந்தமான போட்டிகள் மிகவும் கலகலப்பாக நடைபெற்றன. இந்த விளையாட்டு ஏற்பாடுகளை இஜ்ஜத் கதீப் அவர்களின் தலைமையில் ஜுலைஹா செய்யத் இப்ராஹீம், ஹபீ தாரிக் மற்றும் விளக்கு ராபியா பஹ்மா தாவூத் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதியோர் விளையாட்டுப் போட்டிகள்:
பின்னர் பெரியோர்களுக்கான விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. உரி அடித்தல், ஓட்டப்பந்தயம் மற்றும் சாக்கு ஓட்ட பந்தயம் நடைபெற்றது.
உரி அடித்தல் விளையாட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களும் திசை தெரியாமல் கம்பை கையில் வைத்து சுற்றியது வந்திருந்தோர் அனைவரின் வயிற்றையும் குலுங்க வைத்தது. அஸர் தொழுகைக்குப்பின் தேநீர் வழங்கப்பட்டது.
சிறுவர்-சிறுமியருக்கான போட்டிகள்:
அதற்குப் பிறகு, சிறார்களுக்கு பந்து கடத்தும் விளையாட்டு, பலூன் உடைக்கும் போட்டி, ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. பெற்றோர்களும் உற்றார்களும் இவ்விளையாட்டு நிகழ்சிகளை கவலைகளை மறந்து மனம் விட்டு சிரித்து ரசித்தனர்.
எல்லா விளையாட்டு எற்பாடுகளையும் மன்றத்தின் துணை தலைவர் சாளை ஸலீம் அவர்களும் பாஜுல் ஹமீத் அவர்களும் இணைந்து நடாத்தினர்.
குலுக்கலில் தங்கக் காசு:
மக்ரிப் பாங்கு சொல்வதற்கு முன்னால், பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் கிளைமாக்ஸ் ஆன தங்க காசுகள் குலுக்கல் நடைபெற்றது. வருகைதந்த உருப்பினகளின் பதிவுச்சீட்டுகள் அனைத்தையும் குலுக்கலில் இடம் பெறச்செய்து நடந்த குலுக்கலில் முறையே B. சுகரவர்த்தி (சொளுக்கார் தெரு) மற்றும் துணி அபூபக்கர் (குத்துக்கல் தெரு) அவர்களுக்கு முறையே ஒரு தங்க காசு பரிசாக கிடைத்தது. அதேபோல், மீதம் இருந்த எல்லா பரிசுகளுக்கும் குலுக்கல் நடைபெற்று, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் முறையே வழங்கப்பட்டது.
மக்ரிப் தொழுகைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. மன்றத்தின் தலைவர் அவர்கள் இக்கூட்டம் இனிதே நடைபெற ஒத்துழைத்த அனைத்து நல்ல நெஞ்சங்களுக்கும் மன்றத்தின் சார்பிலும் அவர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள். இக்கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து மண்டலங்களிலும் வாழும் காயலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மகளிர், தமக்கொதுக்கப்பட்ட தனிப்பகுதியிலிருந்தவாறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
பிரியாவிடை:
நிறைந்த மனதுடனும், மறக்கவியலா நினைவுகளுடனும் வந்திருந்தோர் அனைவரும், இந்நிகழ்ச்சியை மிகவும் அருமையாக செய்திருந்த அனைவருக்கும் பாராட்டுதல்களை அறிவித்து விட்டு பிரியாவிடை பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு துபை காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்
துணைத்தலைவர்,
துபை காயல் நல மன்றம்.
படங்கள்:
சாளை ஸலீம்
பாஜுல் ஹமீது
ஸேப் காதர்
பஃயாஸ் ஹுமாயூன் |