காயல்பட்டினம் நகராட்சி மூலம் - நகரில் வேகத்தடைகள் அமைக்க தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் வாகன போக்குவரத்து விசயத்தில் பிரதான பிரச்சனைகளில் ஒன்று வேகத்தடைகள் குறித்தது. வேகைத்தடைகள் வேண்டும் என்று கோரிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் - மிகவும் உயரமாகவும் அல்லது மிகவும் தாழ்வாகவும் உள்ளது என்ற அதிருப்தி மறுபக்கம் உள்ளது.
நகரில் உள்ள பெரும்பாலான வேகத்தடைகள் நகராட்சி மூலமாக அமைக்கப்பட்டவை அல்ல. அந்தந்த பகுதிகளில் ஆர்வம் உள்ள சிலரால் - அவர்களின் கணிப்பின் அடிப்படையில் - அமைக்கப்பட்டவை.
நகராட்சி மூலமாக ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளும், அதற்குரிய விதிமுறைகளை பின்பற்றி
அமைக்கப்படவில்லை.
வேகத்தடைகள் குறித்து - INDIAN ROADS CONGRESS அமைப்பு வழிமுறைகளை வகுத்துள்ளது. அந்த வழிமுறைகளை முழுவதுமாக காண இங்கு அழுத்தவும்.
பொதுவாக ஒரு வேகத்தடையின் அகலம் (width) - 3.7 மீட்டர் ஆக இருக்கவேண்டும். உயரம் 10 சென்டிமீட்டர் அளவு இருக்கவேண்டும். வளைவு (radius) - 17 மீட்டருக்கான வட்டம் அளவிற்கு இருக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் வேகத்தடைகள் மூலம் - வாகனங்களின் வேகத்தை மணிக்கு 25 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கலாம்.
மேலும் - அருகாமையில் வேகத்தடைகள் உள்ளன என்ற அறிவிப்பு பலகை முதல் வேகத்தடைக்கு - 40 மீட்டர் முன்னரே - பொருத்தப்பட வேண்டும்.
வாகன ஓட்டுனருக்கு தெளிவாக தெரியும் விதமாக - வேகத்தடைகள் மேல் கருப்பு-வெள்ளை பெயிண்ட் அடிக்கப்படவேண்டும். இரவிலும் தெளிவாக தெரிய உதவும் பெயிண்ட் மற்றும் சாதனங்கள் (cat eyes) பொருத்தலாம்.
தேவைப்பட்டால் தொடர்ந்து பல வேகத்தடைகள் அமைக்கலாம். பொதுவாக ஒரு வேகத்தடைக்கும், அடுத்த வேகத்தடைக்கும் இடையில் 100 - 120 மீட்டர் இடைவெளி தேவை.
வேகத்தடைகளை பொறுத்தவரை - அவைகளை உரித்த காலங்களில் பராமரித்தல் அவசியம். அதிலும் குறிப்பாக - வேகத்தடைகள் மேல் பூசப்பட்ட கருப்பு-வெள்ளை வண்ணங்கள், வண்ணம் மங்குவதற்கு முன், அவ்வப்போது மீண்டும் பூசப்படவேண்டும். |