| |
செய்தி எண் (ID #) 8301 | | | வியாழன், ஏப்ரல் 12, 2012 | காயல்பட்டினம் நகராட்சியில் 17.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வால்வு தொட்டி, வேகத்தடைகள் உட்பட 7 பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு! ஏப்ரல் 24 அன்று திறப்பு!! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2690 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் நகராட்சியின் பொது நிதி திட்டத்தின் கீழ் 17 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 வரை வழங்கப்படும். ஏப்ரல் 24 அன்று மாலை 3:30 மணிக்கு நகராட்சி வளாகத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் திறக்கப்படும்.
இது குறித்த விளம்பரம் தினத்தந்தி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் ஏப்ரல் 5 அன்று வெளிவந்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள பணிகளின் சாராம்சம் வருமாறு:-
(1) நகராட்சிப்பகுதிகளில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தல் (மதிப்பு: ரூபாய் 60,000)
(2) தபால் நிலையம் அருகில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றுதல (மதிப்பு: ரூபாய் 3,000)
(3) நகராட்சிப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகளை இடித்துவிட்டு புதிய வால்வுதொட்டிகள் கட்டுதல (மதிப்பு: ரூபாய் 7,00,000)
(4) சிவன்கோயில் தெரு மயான சாலையில் சிறுபாலம் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 4,00,000)
(5) கே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இருபுறமும் (கிழக்கு மற்றும் மேற்கு) தடுப்புச்சுவர் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 2,40,000)
(6) நகராட்சி பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை மேம்பாடு செய்தல் (மதிப்பு: ரூபாய் 1,50,000)
(7) நகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் விநியோகப் பராமரிப்பு பணிக்குத் தேவையான வால்வுகள் சப்ளை (எண்ணிக்கை - 62) (மதிப்பு: ரூபாய் 2,00,000)
அறிவிக்கப்பட்ட டெண்டர்கள் குறித்த முழு விபரங்கள் காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகராட்சி பிரிவின் டெண்டர்கள் பகுதியில் உள்ளது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|