ஏப்ரல் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து இரண்டாம் கட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கை வாழ் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ்நாடு 8ஆவது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
"இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்"
இவ்வாறு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. காயல்பட்டினத்தில், அரசு மருத்துவமனை, பொதுநல அமைப்புகளின் வளாகங்களில் நாளை காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. முதற்கட்ட முகாம் 19.02.2012 அன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross