பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5
உலகின் பல நகரங்களுக்கு City of lights என்ற பெயர் உண்டு. பிரதானமாக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் - City of lights என
பலரால் அழைக்கப்படுகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் காயல்பட்டினம் நகராட்சியின் - தெருவிளக்குகளுக்கான மின்பொருட்கள் வகை செலவினை பார்க்கும் போது - தென்னகத்தின்
City of lights என்ற பெயர் காயல்பட்டினத்திற்கு வழங்கப்படவேண்டும். உண்மை நிலை என்னவெனில் நகரின் பல பகுதிகளை பல
ஆண்டுகாலமாக இருளும் , திட்டமிட்டு நிறுவப்படாத விளக்குகளும் தான் அலங்கரித்து கொண்டிருக்கிறது.
முதல் பார்வையில் (Prima Facie) காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக மின்பொருட்கள் கொள்முதலில் முறைக்கேடுகள்
நடந்திருக்கிறது என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. முன்னாள் உறுப்பினரின் கூற்றும் இதனை ஊர்ஜிதம் செய்கிறது.
இதனை கருத்தில் கொண்டு - தற்போதைய நகர்மன்றம் - தமிழக அரசினை - காயல்பட்டினம் நகரமன்றத்தின் கடந்த கால மின்பொருட்கள் கொள்முதல் முறையினை - ஆழமாக விசாரிக்க குழு ஒன்றினை அமைக்க தீர்மானம் நிறைவேற்றி கோரவேண்டும். அந்த குழுவின் அறிக்கை - முறைக்கேடுகள் நடந்ததாக ஊர்ஜிதம் செய்யும் பட்சத்தில் - தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
விசாரணை குழுவினை அமைக்க காயல்பட்டினம் நகர்மன்றம் அரசிடம் கோர மறுக்கும் பட்சத்தில் - சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் - குழு
அமைக்க கோரி - வழக்கு தொடரலாம்.
உண்மையாக தவறு நடந்திருக்கும் பட்சத்தில் - குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் - வருங்காலங்களில் நிர்வாகத்திறமை அற்றவர்களும்,
நகர்மன்றத்தை தங்கள் வாழ்வாதாரமாக ஆக்கி கொள்ள நினைப்பவர்களும் - காயல்பட்டினம் நகராட்சியின் உறுப்பினர்களாக ஆக தயங்குவார்கள்.
மேலும் - காயல்பட்டினம் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களும் - மக்கள் சொத்தை கொள்ளை அடிக்க சிந்திக்கமாட்டார்கள்.
இந்தத் துணிவு, மாற்றம் - காயல்பட்டினம் மக்களுக்கு வராத வரை - எத்தனை மின்விளக்குகள் நகரில் நிறுவப்பட்டாலும், காயல்பட்டினம் - City of lights ஆக முடியாது. இருளில் மூழ்கிய நகராகவே (City of darkness) தொடரும்.
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5
[முற்றும்] |