| 
 பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5
  
கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி - அக்டோபர் 17 ம் தேதி நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கான   தேர்தல்களுக்கு சில தினங்களுக்கு 
முன்னர்  இத்திஹாதுல் இஹ்வானுல் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) அமைப்பு - காயல்பட்டின நகர்மன்றத்தில் நடந்தவை என்ன? என்ற தலைப்பில், சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு  ஏற்பாடு 
செய்திருந்தது. 
  
 
அக்கூட்டத்தில், கடந்த நகர்மன்றத்தில் - லஞ்சம் வாங்காமல் செயல்புரிந்ததாக கருதப்பட்ட உறுப்பினர்கள் சிலர் அழைக்கப்பட்டு 
கௌரவிக்கப்பட்டனர். கௌரவிக்கப்பட்ட உறுப்பினர்களில்  - அப்போதைய முதலாம் வார்ட் உறுப்பினர் திருத்துவராஜும் ஒருவர். அக்கூட்டத்தில் 
பேசிய திருத்துவராஜ் - முந்தைய ஐந்தாண்டுகளில் (2006 - 2011) நகராட்சியில் அவர் கண்ட பல காட்சிகளை விபரமாக எடுத்துக்கூறினார். அந்த 
உரையினை முழுவதுமாக காண இங்கு அழுத்தவும். 
  
உறுப்பினர் திருத்துவராஜ் - தனது உரையில் - மிகவும் அழுத்தி கூறிய கடந்த நகர்மன்றத்தில் அவர் கண்ட முறைகேடு - தெருவிளக்குகள் பராமரிப்பு 
குறித்ததாகும். தேவைக்கு அதிகமாக ஒவ்வொரு ஆண்டும், பல முறை, பல லட்ச ரூபாய்க்கு தெருவிளக்குகளுக்கான உதிரி பாகங்கள் நகர்மன்றம்  
மூலம் வாங்கப்பட்டதாக  அக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார். 
  
மேலும் - அவர் கூறுகையில், முந்தைய நிர்வாகத்தின் இறுதி நாட்களில், 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் உதிரி பாகங்கள் வாங்க 
பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போதைய தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் - கடுமையாக அதனை எதிர்த்து - 4 லட்சம் ரூபாய்க்கு 
மட்டும் பொருட்களை வாங்க அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்தார். 
  
உறுப்பினர் திருத்துவராஜ்  உடைய உரையில் - அதற்கு முந்தைய  மாதங்களில், உதிரிபாகங்கள் எந்த தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விபரம் 
இடம்பெறவில்லை. அந்த விபரங்களை - வரும் பாகங்களில் காண்போம். 
  
உறுப்பினர் திருத்துவராஜ் குறிப்பிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் வாங்க ஒப்புதல் - ஆகஸ்ட் 8, 2011 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண  கூட்டத்தில் வழங்கப்பட்டது. தீர்மானம் எண் 71 என 
நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மான வாசகங்கள் வருமாறு: 
  
காயல்பட்டணம் நகராட்சியில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள மின்விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை பராமரிக்க 
2011-12-ம் ஆண்டிற்கு (31.03.2012 வரை) தேவையான மின்உதிரிபாகங்கள் வாங்குவதற்கு நகராட்சி பணிமேற்பார்வையாளர் மற்றும் நகராட்சிப் 
பொறியாளர் (பொ)  அவர்களால் தயாரிக்கப்பட்ட உத்தேச மதிப்பீடு ரூ.4.00 இலட்சத்திற்கு  மன்ற அனுமதி வேண்டப்படுகிறது. 
  
அலுவலக குறிப்பு: 
மன்றம் அனுமதி வழங்கலாம் 
  
மன்ற முடிவு: 
மன்றம் அனுமதி வழங்கியுள்ளது
  
இதற்கான டெண்டர் செப்டம்பர் 9, 2011 அன்று விடப்பட்டது. மதிப்பீட்டு தொகையை விட  0.52% குறைவாக ஒப்பந்தபுள்ளி வழங்கி - இந்த டெண்டர் 
மூலம் காயல்பட்டினம் நகராட்சிக்கு மின்சாதன உதிரி பொருட்கள் வழங்க - திருநெல்வேலியை சார்ந்த  ஸ்ரீ கங்கா எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் தேர்வாகியது. 
  
ஒப்பந்தப்புள்ளி வழங்கிய மற்றொரு நிறுவனமான   பாளையங்கோட்டையை சார்ந்த ஸ்ரீ குமார் ஏஜென்சீஸ், மதிப்பீட்டு தொகையை விட  
213.30% (?) கூடுதலாக ஒப்பந்தபுள்ளி வழங்கியதாகவும் செப்டம்பர் 13, 2011 அன்று 
நடந்த காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 
  
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் ஸ்ரீ கங்கா எலக்ட்ரிக்கல்ஸ் மூலம் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மின்விளக்கு உதிரி பொருட்களும் காயல்பட்டினம் 
நகராட்சிக்கு வந்தது. இதில் கவனத்திற்கு கொள்ள வேண்டியது - எத்தனை மாதங்களுக்கு தேவையான பொருட்கள் இவை என்பது. 
  
ஆகஸ்ட் 8, 2011 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  இதற்கான பதிலை தருகிறது. 
நகராட்சி பணிமேற்பார்வையாளர் மற்றும் நகராட்சிப் பொறியாளர் (பொ) மதிப்பீடு தயாரிப்பில்   - டெண்டர் மூலம் பெறப்பட்ட பொருட்கள்  - மார்ச் 31, 2012 வரையிலான தேவைக்கு என 
அத்தீர்மானம் தெளிவாக கூறுகிறது. 
  
மீண்டும் அந்த தீர்மான வாசகங்களை முழுமையாக காண்போம்: 
  
காயல்பட்டணம் நகராட்சியில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள மின்விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை பராமரிக்க 
2011-12-ம் ஆண்டிற்கு (31.03.2012 வரை) தேவையான மின்உதிரிபாகங்கள் வாங்குவதற்கு நகராட்சி பணிமேற்பார்வையாளர் மற்றும் நகராட்சிப் 
பொறியாளர் (பொ)  அவர்களால் தயாரிக்கப்பட்ட உத்தேச மதிப்பீடு ரூ.4.00 இலட்சத்திற்கு  மன்ற அனுமதி ...
  
ஆனால் நடந்தது என்ன?
  
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5
  
[தொடரும்]  |