Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:11:16 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8303
#KOTW8303
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 12, 2012
பழுதடைந்த நிலையில் நகர்மன்றத் தலைவருக்கான அறை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5179 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (37) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 15)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் - நகர்மன்றத் தலைவருக்கு என தனி அறை வழங்கப்படுவது உண்டு. நகர்மன்றத்தின் பிரதான கட்டிடத்தில் - நுழைவு வாயிலுக்கு இடது புறத்தில் உள்ள முதல் அறையே நகர்மன்றத் தலைவருக்கு என வழங்கப்படும் அறை.



[கோப்பு படம்]


புதிய நகர்மன்றம் பதவி ஏற்ற அக்டோபர் மாதம் 2011 முதல் நகர்மன்றத் தலைவருக்கான அறை பழுதடைந்த நிலையிலேயே உள்ளது.







நகர்மன்றத்தலைவர் அறையினை சரி செய்யவும், புதிதாக ஊழியர்களுக்கு என கழிவறை கட்டவும் - 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜனவரி மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டது. அந்த டெண்டர் அறிவிப்புக்கு ஒப்பந்தகாரர்கள் யாரும் ஒப்பந்தபுள்ளிகள் சமர்ப்பிக்கவில்லை.

அந்த டெண்டர் (கீழ லட்சுமிபுரம், மங்களவாடி கழிவறைகள் குறித்த டெண்டர்களும் சேர்க்கப்பட்டு) பிப்ரவரி மாதம் 21ம் தேதியினை இறுதி நாளாக கொண்டு மீண்டும் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதமும் ஒப்பந்தகாரர்கள் யாரும் - மூன்று பணிகளுக்கும் - ஒப்பந்தபுள்ளிகள் சமர்ப்பிக்கவில்லை.

சங்கரன்கோவில் தேர்தலினால் அமலில் இருந்த நன்னடத்தை விதிமுறைகள் மார்ச் 25 அன்று முடிவுக்கு வந்தது. அதன் பிறகு இரு டெண்டர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி மாதம் யாரும் ஒப்பந்தபுள்ளிகள் வழங்காத கீழ லட்சுமிபுரம் மற்றும் மங்களவாடி கழிவறைகள் குறித்த டெண்டர் ஏப்ரல் 10 அன்று மீண்டும் விடப்பட்டது. ஆனால் நகர்மன்றத் தலைவருக்கான அறை குறித்த டெண்டர் - மீண்டும் விடப்படவில்லை.

ஏப்ரல் 24 தேதியில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள 7 பணிகளுக்கான புதிய டெண்டர் அறிவிப்பிலும், நகர்மன்றத் தலைவர் அறை குறித்த டெண்டர் வெளியிடப்படவில்லை.

ஏறத்தாழ வேலை தினங்களில் தினமும் நகர்மன்றத்திற்கு வரும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - தனது அலுவல்களை கவனிக்க தனி அறை இல்லாமல், நகர்மன்ற கூட்ட அரங்கில் இருந்து அலுவல்களை கவனித்து வருகிறார். அந்த கூட்ட அறையும் - தற்போது நகர்மன்ற கணக்குகள் குறித்த தணிக்கை நடப்பதால் - உள்ளாட்சி மன்ற கணக்குகளை தணிக்கை செய்யும் அலுவலர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ச்சீ ஏன் இந்த அவலம்... ச்சீ ச்சீ வெட்கக்கேடு...நமது நகராட்சிக்கு...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [12 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18199

ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் குவிக்கும் ஒரு நகராட்சியின் நிலைமை இப்படியா அவல பட வேண்டும்..!

நகர் மன்ற தலைவருக்கு தனியான அலுவலக அறை இல்லாதது மிக பெரிய அவலம்... தலைவர் தனக்குள்ள உரிமையை ஏன் கேட்டு பெறவில்லை...? சும்மா பேருக்கு தான் நகரமன்ற தலைவராக இருக்கிறாரா..?

தலைவர் அவர்கள் பதவி ஏற்று பல மாதங்கள் கடந்து விட்டது தலைவர் அவர்கள் அமர கூட இடம் இல்லையா..?

ச்சீ ஏன் இந்த அவலம்... நமது நகராட்சிக்கு... கேவலமாக நினைப்பார்கள் வருவாய் இல்லாத மற்ற பேரூராட்சிகளும் பஞ்சாயத் மன்றமும்.. ச்சீ ஏன் இந்த அவலம்... ச்சீ ச்சீ வெட்கக்கேடு...நமது நகராட்சிக்கு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by fathimas (kayalpatnam) [12 April 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18201

என்னபா இது நகர்மன்றத்தலைவியின் அறை இன்ன ஒரு அழகு முதலில் இதை சரியாய் செய்யாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். டெண்டர் எதனால் விடப்பட்ட வில்லை முதலில் இது தானே முக்கியமான விஷயம்...

இதை முதலில் அமுல் படுத்துங்கள் தலைவிக்கு ஒரு நல்ல இடத்தை கட்டி கொடுங்கள் இந்த இடத்தில் தலைவி இருக்கும் பொது எதாவது விபரிதம் நடந்தால் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்..

இது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுத்த தலைவி மத்த டெண்டர் ஏதும் இருந்தால் அதை பிறகு கவனித்து முதலில் இந்த டெண்டரை ஒப்புக்கொண்டு இதற்க்கு ஒரு வழி பண்ணவேண்டும் ஒரு நல்ல நகராட்சியை கட்டிக் கொடுக்கவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நில நடுக்கமா? சுனாமியா? த்தூ...தூ...வெட்கக்கேடு. ச்சீ...ச்சீ... மானக்கேடு....!!!
posted by M.N.L. முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [12 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18204

அய்யோ! படங்களைப் பார்த்ததும் நான் முதலில் பதறிவிட்டேன். இந்தொனேஷியாவில் தானே பூகம்பம்! அது காயல்பட்டணம் நகராட்சிக்கு, அதுவும் தலைவி அறைக்குள் மட்டும் எப்படி வந்ததுன்னு ஒரேக் குழப்பம். அப்புறமா நிதானத்தோடு செய்தியைப் படிச்சபோது தான் மேட்டர் என்னன்னு விளங்கிச்சு! இது ஒன்றே போதும் நகராட்சியில் நம்ம தலைவிக்கு எவ்வளவு மரியாதைன்னு?

ஆபிதாவும் இதெக் கண்டு கொள்ளவேயில்லை! இதெ அப்படியே மாநில முதல்வருக்கு ஃபர்வேட் பண்ணனும்! அதுலெ CC போட்டு மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்கணும்.

அதென்ன? காற்றாடியின் ஒரு இறகு நெளிஞ்சு போய் சிறகொடிந்த பறவை போல் பரிதாபமா இருக்கு! தப்பித்தவறி கூட ஆபிதா மேடம் அந்த ரூமுக்குள்ளே போயிடாதீங்க...! அங்கே அத்துக் கொத்து விழுந்து கிடப்பதைப் பார்த்தால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடுமோ? எனும் அச்சம் தான் வருது! எதுக்கும் கொஞ்சம் அலர்ட்டாவே இருங்க...!!!

-ராபியா மணாளன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [12 April 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18207

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னப்பா இது.நமக்கே இது ரொம்பவும் அசிங்கமாக தோன்ற வில்லையா ??? """"" பழுதடைந்த நிலையில் நமது நகர்மன்றத் தலைவி அவர்கள் அறையா ? மிகவும் திறம் பட செயல் பட கூடிய அருமையான நம் நகர்மன்ற தலைவி அவர்களுக்கா இப்படி ??

இப்படி ஓரு சூழ் நிலைமைல் கூட தம் அலுவல்களை கவனிக்க தனி அறை இல்லாமல்.நம் தலைவி அவர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கில் இருந்து அலுவல்களை கவனித்து வருகிறார் என்பதை நாம் அறியும் போது . நம் தலைவி அவர்கள் நம் யாவர்களின் நெஞ்சில் மிகவும் நெருக்கமாக பதிந்து விட்டார்கள்.

உண்மையில் நமக்கு அமைந்த தலைவி மிகவும் பொறுமை சாலி தான் .நாம் பெருமை படவேணும் . மேடம் ப்ளீஸ் நீங்கள் உங்கள் தனி அறையை உடனே சரி பண்ணவும் . காரணம் உங்களை பார்க்க முக்கிய பெற முகர்கள் பலர் வருவார்கள் அல்லவா.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by NOWSHAD (YERCAUD) [13 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18208

பாய் நெய்பவர்களுக்கு படுக்க பாய் இருக்காது என கேள்வி. அவர்களின் அறையை பார்க்கும் போது அதிர்ச்சி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [13 April 2012]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 18209

வாவ் சூப்பர் ......... நியூ மாடல் ரெம்ப சுப்பரா இருக்கு???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by kithuru mohamed abbas (Dammam) [13 April 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18210

அஸ்ஸலாமு அழைக்கும்

என்ன இது நகர்மன்ற தலைவருக்கு இருக்க ஒழுங்கான அலுவலகம் கிடையாது வெளியூர் ஆள்கள் இந்த போட்டோவை பார்த்தால் நமது பஞ்சாயத்தை பற்றி என்ன நினைப்பார்கள்

மிச்செஸ் ஆபிதா அவர்களே உங்கள் ரூமுக்கு எந்த விஷயத்திற்காகவும் போய்விடாதீர்கள் எந்தநேரமும் இந்த ஜிப்சம் உடைய்ந்து விழும் போல் தெரிகிறது

அதே நேரத்தில் உங்களின் விளைமடிக்கமுடியாத புதிய புதிய பணிகளை தொடருந்து செய்யுங்கள் வஸ்ஸலாம் லாத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by S.M.B Faizal (AbuDhabi) [13 April 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18212

எப்படி இருந்த நான் இப்படி ஆய்டான் ........!

நகராச்சி தலைவிக்கு ஒரு நல்ல அறை இல்லையா ?

என்ன கொடுமை சார் இது...........!
சிக்கரம் சரி பண்னுகப்ப.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [13 April 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 18214

பரிதாபம் . தலைவிக்கே இந்த நிலை . மன்ற உறுப்பினர்களின் நிலை எப்படியோ ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [13 April 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 18216

நகர் மன்ற தலைவருக்கான அறையை தலைவியே ஆணையிட்டு சீர் செய்துகொள்ளலாமே.. யார் தடுத்து நிறுத்தப்போகிறார்கள்? தலைவி எழிமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள இது ஒரு புதுவிதமான விளம்பர யுக்தி.

முன்னாள் நகரமன்ற தலைவரின் கோப்பு படத்தை இந்த செய்தியில் வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

அவர் பகட்டாக இருந்ததுபோலவும் ,இவர் எழிமையாக இருப்பதுபோலவும் காட்டிகொள்ளவா?

இந்த செய்தியின்வாயிலாக நாம் அறிவது " தன்னுடைய அலுவலகத்தையே புனரமைக்க முடியாத நமது நகரமன்ற தலைவி , எவ்வாறு நம் நகரை புனரமைகபோகிறார் என்பதுதான்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by NOOHU U (Hongkong) [13 April 2012]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 18218

She is our President for past 7 months
Why President need MEDIA now ?
its seems Kayal Town Panchayat control by MEDIA

U. Noohu
Hongkong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by PROF.DR,MOHAMED YASIN (UNIVERSITY OF DAMMAM) [13 April 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18222

Dear Commentators,

I am Pleased to have an obligation over here .Though the chairman is custom be a relative for anyone who writes the comments here, it is highly appreciated that to use her respected TITLE/POSITION but not to use the name with a void title. Hope it is not professional and mannerism.

Being remote away from the country the necessity of the media is unavoidable to know any information about the home town and especially it’s functioning in municipality.

The recent proceedings of our chairman along with councilors to the secretariat, to the commissionerate of municipalities and to the concerned ministers are highly appreciated.

May the Almighty bless the team work of Kayalpatnam Municipality


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [13 April 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18223

Welldone Kayalpatnam.com.

Can change your ID as www.Kayalpanchayat.com

Really very boring to logon now a days.

அவர் அங்கே போனார்.

அவர் இங்கே போனார்.

அவருக்கு இப்படி எல்லாம் பிரச்சனை.

Exam எழுதுறத மட்டும் போடுறீங்களே Result என்னப்பா?

ஆபீஸ் சரி இல்லன்னா Alter பண்ணுங்கப்பா?

இதெல்லாம் ஒரு நியூஸ்ன்னு......?

இதுக்கு COMMENT எழுத ஒரு கூட்டமா?

யாருப்பா அந்த Moderator?

ரொம்ப நல்லா இருக்குப்பா, நல்லா இருக்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [14 April 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 18224

VD Sadak Thamby காக்கா அவர்களின் கருத்து யதார்த்தமாக இருந்தாலும் , அதற்காக இப்படியா மீடியாவில் எழுதி , தலைவியின் புகழை குறைக்க வேண்டும் ?

அடுத்து ஹாங்காங் Noohu அவர்கள் , நீங்கள் சொல்வது தவறு . தலைவிக்கு வேண்டுமானால் மீடியாவின் உதவி தேவைப்படலாம் . ஆனால் மற்ற மன்ற உறுப்பினர்கள் எனக்கு தெரிந்தவரையில் , மீடியாவின் உதவி இல்லாமலேயே , எந்தவித விளம்பரமும் இல்லாமல் ,மிகவும் சிறப்பாக செயலாற்றுகிறார்கள் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [14 April 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 18225

அஸ்ஸலாமு அழைக்கும்

செய்தி சூப்பரா இருக்கு ,

பாவம் தலைவி , உரலுக்கு ஒருபக்கம் இடி , உலக்கைக்கு இரண்டு பக்கமும் இடி , இதை ஏன் நான் இங்கு சொல்லுகிறேன் என்றால் , பதவி க்கு வந்த உடன் சொகுசாக இருக்கா வேண்டும் என்று தலைவி தன்னுடைய அறையை சரி செய்து விட்டார் , மக்களின் குறையை இவர் எங்கு சரி செய்ய போகிறார் என்று கேள்வி வரும் ,

இது தான் நம் மக்கள், நம் காயல் , தற்போதைய தலைவி மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார், நல்லது செய்ய நினைக்கும் பொழுது நிறைய சோதனை வரும் , பொறுமையாக இருப்பது நல்லது

இப்படிக்கு,

Seyed Mohamed (Sayna)
Kayal Ikiya Mandram (KIM) Bangkok -Thailnad


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by SHAJAHAN (DAMMAM) [14 April 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18226

இந்த செய்தி லேட்டாக வந்து உள்ளதே. நகர் வலம் நகர் வலம் என செய்தி வரும். இந்த முக்கியமான செய்தி வரவில்லையா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [14 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18228

"வேண்டாத மருமகள் கை பட்டாலும் குற்றம்.கால் பட்டாலும் குற்றம் "நண்பர் வி.டி,சதக் தம்பி அவர்களின் வாதம் அத்தகையது. இதற்க்கு தம்பி விளக்கு எஸ்.எம்.எ அவர்களும் பக்கவாத்தியம் வாசிக்கிறார். தலைவியின் அறை பழுதானாலும் கூட அவர் சிமன்ட் சட்டி சுமந்து பூசி சரியாக்கிவிட முடியாது.

நமது அரசு சிவப்புநாடா முறைகளில் எல்லாவற்றுக்கும் விதி முறைகள் சட்ட திட்டங்கள் எல்லாமும் உண்டு யாராக இருந்தாலும் அதன்படிதான் செயல் பட முடியும். அரசின் கையாலாக தனத்தை சுட்டிக்காட்டவே இங்கு செய்திகள் வெளியிடப்படுகின்றனவே தவிர தலைவியை குறை கூறுவதற்காக அல்ல என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நகராட்ச்சி குறித்து சில குறைபாடுகளை ஊடகத்தன்மையில் இங்கு சுட்டி காட்டப்பெறும் போதெல்லாம் தலைவியை குறை கூறுவது இங்கு வழக்கமாகிவிட்டது.

தலைவியிடம் நேரடியாக குற்றம் குறைகள் ஏதாவது இருப்பின் நண்பர்கள் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அதில் நமக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் பழைய தேர்தல் கசடுகளை இன்னும் மனதில் வைத்துக்கொண்டு யூகமாக கருத்துக்கள் கூறுவது முறையல்ல .இதை நண்பர்கள் தவிர்த்துக்கொண்டால் நல்லதாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இங்கே என்னப்பா ஒப்பாரியும், ஒத்து ஊதலும்........!?
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [14 April 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18233

நம் நகரமன்ற தலைவர் மூச்சுக்கு முன்நூருதடவை சொன்னது தானப்பா.......... ஓப்பன் நிர்வாகம் தருவேன் என்று. அதான் எல்லாம் ஓப்பனா திறந்து காட்டுறாங்கப்பா....... இதுக்கு போயி ஒப்பாரியும், ஒத்து ஊதலும் தேவை இல்லை. மேலும் ஓப்பன் நிர்வாகம் தரும் தலைவருக்கு தனி அறை தேவை இல்லைதானே...........?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ந.ம.த.கு.சொ.ப. கள் கவனத்திற்கு....!!!
posted by ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்.) [14 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18234

கருத்தாளர் சகோதரர் முஹம்மது சுஐபு அவர்களின் கருத்தை தொடர்ந்து, நகர் மன்றத்தலைவியைக் குறை சொல்லியே பழக்கப்பட்டுப் போனவர்கள் கவனத்திற்கு:

உங்களில் யாருக்கவது நகர் மன்றத்தலைவி குறித்து, சந்தேகங்கள்.குறை,குற்றம் இருப்பின் http://kayalchairman.com/ எனும் முகவரியில் பக்கம் பக்கமாக எழுதிக் கொள்ளலாம். கொரிக்க கை நிறைய அவல் இருக்கும் போது வெறும் வாயை மெல்ல வேண்டாம். தாராளமாக கொரியுங்கள். நகர் மன்றத்தலைவியைக் குறை சொல்லியே பழக்கப்பட்டுப் போனவர்கள் இனியாவது தலைவியின் பொதுவான இணயதள முகவரியில் தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்யட்டும்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by OMER ANAS (DOHA QATAR.) [14 April 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18236

"வேண்டாத மருமகள் கை பட்டாலும் குற்றம்.கால் பட்டாலும் குற்றம் "நண்பர் வி.டி,சதக் தம்பி அவர்களின் வாதம் அத்தகையது. இதற்க்கு தம்பி விளக்கு எஸ்.எம்.எ அவர்களும் பக்கவாத்தியம் வாசிக்கிறார். தலைவியின் அறை பழுதானாலும் கூட அவர் சிமன்ட் சட்டி சுமந்து பூசி சரியாக்கிவிட முடியாது.

உண்மை !உண்மை! உண்மை!
காகா சுஹைப் அவர்களின் விளக்கமே உண்மை!
அப்புறம் எதற்கு சுஹைப் காக்க இங்கே விளம்பரம்?
அதுதானே காக்கா நமக்கு புரியல்லே!

இப்பல்லாம் பலமொழிகள் மாறிவிட்டது காக்கா. வேண்டாத மாமியார் சுகமா இருக்கிறாயா என்றாலும் குற்றமாம்,சும்மா( முழுகாம) இருக்கிறாயா என்றாலும் குற்றமாம் ஒரு சில(மருமகளா )ருக்கு! அப்புறம் காக்கா சுகமா இருக்கிறீர்களா? உடல் நிலையை கவனிக்கவும்!

அன்புடன் தம்பி.
உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:பலவீனமான் நகரமன்ற தலைவி ...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [15 April 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 18242

தனிப்பட்ட முறையில் யாரும் இங்கு தலைவியின் செயல்களை விமர்சிக்கவில்லை. பொது வலைதளத்தில் வருவதாலும் , பொதுவான் செய்தி என்பதாலும்தான் பொதுவாகத்தான் விமர்சிக்கிறோம். வெளிப்படை நிர்வாகம் என்கிறீர்கள். விமர்சனமும் வெளிப்படைதான்.

நல்லவை நடக்கும்போது எல்லாமே தலைவியின் சொந்த பணத்தில் செய்துபோன்று மிகையான வலைதள விளம்பரமயம்.

அது நடக்காதிருக்கும்போது அரசின் மீது வீண் பழி. இதற்க்கு துதிபாடிகளின் கூக்குரல்வேறு.

பலவீனங்களை விமர்சிக்கும்போது , விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நமக்கு வேண்டும்.

நம் நகராட்சி நிர்வாகம் மிகவும் பலவீனமான் நிலையில் இருப்பதைத்தான் இந்த செய்தி எடுத்துக்காட்டுகிறது .

அதிலும் நகரமன்ற தலைவி மிகவும் பலகீனமானவர். எந்த ஒரு செயலையும் அவரால் துணிச்சலாக நிறைவேற்ற முடியவில்லை. தன்னுடைய அலுவலகத்தையே அவரால் சரிசெய்ய முடியவில்லை என்றால் நாம் வேறென்ன சொல்ல!

ஏனெனில் அவருக்கு போதுமான பக்கபலம் இல்லை. காரணம் எல்லோரும் அறிந்ததே!

நிறைய எடுத்துக்காட்டுகளை சொல்லமுடியும். இந்த இடம் அதற்க்கு போதுமானதாக இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [15 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18245

சகோதரர் சதக்கு தம்பி அவர்களே........

விமர்சனம் வைப்பதை இங்கு யாரும் தவறாக எண்ணவில்லை. பொதுக்காரியங்களில் தங்களது கருத்தை முன் வைப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு.

தயவு செய்து என்னை மன்னிக்கவும் .தங்கள் போன்றவர்கள் வைக்கும் விமர்சனங்களில் ஆக்கபூர்வமான அணுகுமுறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி எதுவும் இருந்திருப்பின் தங்களது விமர்சனம் இந்த ரீதியில் அமைந்திருக்காது.

தலைவி அவர்கள் தனது சொந்த பணத்தில் எதுவும் செய்யவில்லை அதற்க்கான அவசியமும் அவருக்கு இல்லை. பணி நிமித்தமாக அவர் எங்காவது செல்லும் போதோ அல்லது தவிர்க்க முடியாத வேறு சமயங்களிலோ அரசு பில் வரும் வரை யாரும் காத்திருக்க முடியாது அப்போது எல்லோருமே அவரவர்கள் பாக்கெட்டில் கைவிட்டு செலவழிப்பது இயல்புதான். இதை யாரும் விளம்பரபடுத்திக்கொள்வதில்லை

நியாயமாக அவர் செய்வதை அவரது ஆதரவாளர்கள் முறைப்படி மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். இதை நீங்கள்"விளம்பரம்"என்று சொன்னால் நிஜமாகவே விளம்பரம் என்ற வார்த்தையின் பொருள்தான் என்ன ?என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.

தனது அதிகாரத்துக்கு உட்பட்டு தன்னால் இயன்றவரை அவர் நல்லவிதமாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். நகரமன்ற உறுப்பினர்கள் என்ற பெயரில் சில அதிகாரததரகர்கள் அவரை சுற்றி நின்று அவரை செயல்படாத ஒருவராக ஆக்க முயல்கிறார்கள். அதையும் மீறி அவர் தனந்தணியாக சுழன்று கொண்டிருக்கிறார். உங்கள் பதிவில் அதை நீங்களே சுட்டி காட்டியுள்ளீர்கள்.

உங்கள் விமர்சன வாள்கள் அவர்களை நோக்கி திரும்பட்டும். இன்று வெளிப்படையான நிர்வாகம்தான் நடைபெறுகிறது. நகராட்சி நிர்வாக வேலைகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் எந்த காலத்தில் இப்படி இணையதளங்களிலும் பிட் நோட்டிசிலும் மக்களுக்கு அறியத்தரப்பட்டன ..என்பதை நீங்களே சொல்லுங்கள்.

வீண் கசப்புணர்வுகளை களைந்து ஆக்கபூர்வமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நல்லதொரு நகராட்ச்சி நிர்வாகம் நமக்கு கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Muthu Magdoom VSH (Kayalpatnam) [15 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18249

----------------------------

Comment Reference Number: 18216

முன்னாள் நகரமன்ற தலைவரின் கோப்பு படத்தை இந்த செய்தியில் வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

அவர் பகட்டாக இருந்ததுபோலவும் ,இவர் எழிமையாக இருப்பதுபோலவும் காட்டிகொள்ளவா?

--------------------------------------

Kayalpatnam.com should answer this. Not to escape (or) to simply reject this query.

Kayalpatnam.com நடுநிலை தவறி ரொம்ப நாள் ஆகி விட்டதே உண்மை.

Administrator: அந்த செய்தி நகர்மன்றத் தலைவர் அறைக் குறித்தது. அந்த அறை தற்போது பழுதடைந்த காட்சியை தருவதற்கு முன்னர் - எவ்வாறு இருந்தது என உணர்த்துவதற்கே அந்த படம் காண்பிக்கப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Hameed Rifai (Yanbu - KSA) [15 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18251

இங்கு சிலர் - தலைவர் அறை புதுப்பிக்கப்படாதது - தலைவியின் பலவீனத்தை காண்பிக்கிறது என எழுதியுள்ளனர். தலைவி பலமானவரா, பலவீனமானவரா - என்பதை காலம் அனைவருக்கும் உணர்த்தும். தேர்தல் கால்ப்புணர்ச்சி இன்னும் பலர் மனதில் இருந்து இன்னும் போகவில்லை என்பது தெரிகிறது. ஒரு பலவீனமான தலைவியிடம், ஒரு பலமான அணி வேட்பாளர் 4500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஒரு பலமான தலைவியிடம் மோதியிருந்தால் deposit போகியிருக்கும் போல் இருக்குது.

தலைவி நினைத்தால் அவரே உத்தரவிட்டு புதுப்பிக்கலாம் என சிலர் கூறியுள்ளனர். அவர்களுக்கு சட்டம் தெரியாது போலும். இது போன்ற பணிகள் டெண்டர் மூலம் தான் விடப்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியாது போலும்.

ஒரு சிலர் தூண்டுதலில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியை அவமதிக்கவேண்டும் என ஒரு கூட்டம் நகர்மன்றத்தில் செயல்படுகிறது என்பது இந்த அன்பர்களுக்கு தெரியாது. அதனை குடியரசு தின கொடியேற்றத்தில் கண்டோம். அறை டெண்டரை விடாமால் அவமதிக்கும் செயலிலும் காண்கிறோம். அவர்களின் முகம் விரைவில் கிழிக்கப்படும்போது இங்கு கருத்து கூறும் பிறரும் உணர்வார்கள்.

6 மாதங்களில் - புதிய நகர்மன்றத் தலைவர் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்ட, துணை நிற்க, காயல் மண்ணின் மைந்தர்களுக்கு தோன்றவில்லை. காயல்பட்டினம் வந்த மாவட்ட ஆட்சியர் தலைவியை பாராட்டியது அவர்களின் காதை எட்டவில்லை. சென்னையில் அவரின் முயற்சியை பாராட்டும் உயர் அதிகாரிகளின் வார்த்தைகள் இவர்களின் காதில் ஏறவில்லை.

அவர்களின் கனவெல்லாம் - காயல்பட்டினத்தை பல ஆண்டுகளாக ஆட்டிபடைத்த ஆதிக்க வர்க்கத்திடம், தலைவி சரணடைய வேண்டும் என்று. அது இன்ஷா அல்லாஹ் கனவாகவே இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. 7 மாதம் கழித்து இப்பதான் நகர்மன்றத் தலைவர் அறை பக்கம் போறீங்களாக்கும்.
posted by Muthu Magdoom (Jeddah) [15 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18254

Administrator: அந்த செய்தி நகர்மன்றத் தலைவர் அறைக் குறித்தது. அந்த அறை தற்போது பழுதடைந்த காட்சியை தருவதற்கு முன்னர் - எவ்வாறு இருந்தது என உணர்த்துவதற்கே அந்த படம் காண்பிக்கப்பட்டது.

ADMIN அவர்களே,

அப்படின்னா, முன்னர் எவ்வாறு இருந்தது என உணர்த்தினால்தான் எல்லோருக்கும் புரியுமா? என்ன நியாயம் பேசுறீங்க?

7 மாதம் கழித்து இப்பதான் நகர்மன்றத் தலைவர் அறை பக்கம் போறீங்களாக்கும். என்ன ஒரு கடமை உணர்வு? அப்பப்பா

அப்புறம் சுஹைப் காக்கா,

"நியாயமாக அவர் செய்வதை அவரது ஆதரவாளர்கள் முறைப்படி மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்". என்கிறீர்களே?

ஆதரவாளர்கள் சொல்வது மட்டும்தான் இந்த WEBSITE ல வருமா?

சும்மா ஏதாவது எழுதாதீங்க SIR.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [15 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18256

அஸ்ஸலாமு அலைக்கும். அருமை காகா.V.D.SADAK THAMBY. அவர்களின் இந்த விமர்சனம் கண்டிப்பாக சரி இல்லை தான் .மேலும் நம் அருமை தம்பி .V.S.H.MUTHU MAGDOOM அவர்களின் கண்ணோட்டமும் கூட தான் சரி இல்லை . காரணம். முன்னாள் நகரமன்ற தலைவர் அவர்கள் பகட்டாக இல்லை & இப்போதைய நகரமன்ற தலைவி அவர்கள் எளிமையாகவும் இல்லை . அறையின் அவலத்தை காட்ட தான் இந்த போட்டோகள்.

பொதுவாக நாம் நல்ல முறையில் யார் செயல் பட்டாலும் பாராட்டுவது தானே முறை. இந்த நகரமன்ற தலைவி அவர்கள் இதற்கு முன் இருந்த நகரமன்ற தலைவர்களை விட மிக சுறு சுறுப்பாகவும் & திறமையகவும் செயல் படுகிறார்கள் + இளம் வயதானவர் கூட . நாம் மேலும் இவரை ஊக்குவித்து .இவரிடம் நாம் நம் ஊர்க்கு தேவையான நிறையாக நல்ல திட்டங்களை முழு நம்பிக்கையுடன் எதிர் பார்போம் . OK

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [15 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18257

தம்பி முத்து மொஹுதூம் .....உங்களின் இந்த விமர்சனமும் தம்பி விளக்கு எஸ்.எம்.எ அவர்களின் விமர்சனமும் சகோதரர் வி.டி.சதக் தம்பி அவர்களின் விமர்சனமும் கூடத்தான் இதில் வருகிறது.

உங்களின் வாதத்தில் வலு இல்லை என்பதற்காக ஏன் வெப் சைட்டை வம்புக்கு இழுக்கிறீர்கள் ?

"உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும் "எனபது பாரதியார் வாக்கு.

உங்களிடம் எது இல்லை என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 April 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18268

தம்பி முத்து மொஹுதூம் ..... தம்பி விளக்கு எஸ்.எம்.எ... சகோதரர் வி.டி.சதக் தம்பி காக்கா,நீங்கள் எவ்வளவுதான் விவரமாக கேட்டாலும் இந்த மெகா ஜால்ரா கூட்டங்களுக்கு புரியும் போதுதான் புரியும்!

ஆமா...... வாவு S A R ஹாஜியார் இருக்கும் வரை நன்றாகவும்,சுத்தமாகவும் இருந்த இந்த அறை(அப்படி இருந்தது) ஏன் இப்படி ஆகிவிட்டது இந்த குறுகிய மாதத்தில்? உண்மையை சொன்னால் பலருக்கு பழைய தேர்தல் பகை எல்லாம் இப்ப ஞாபகத்திற்கு வரும்! ஒரு சிலருக்கு பழைய பாரதி எல்லாம் இப்ப வேதக்கவியாவார்! இன்னொன்று !

----------------------

வெளிப்படையான பஞ்சாயத்து நடக்கிறது இந்த கால பஞ்சாயத்தில்!அப்படி என்றால் தலைவிக்கு குடைச்சல் குடுப்பவர்களை வெளிப்படையாக இனம் காட்ட ஏன் தயக்கம்?அல்லது,V D S சொன்ன மாதிரி பலவீனமான தலைவியா?இதற்க்கெல்லாமா லியோநியோட பட்டி மன்றம் வைக்க முடியும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [16 April 2012]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 18270

கமெண்ட் 18251 , Mr .Hameed Rifai , நீங்கள் திரும்பத்திரும்ப 4000 திவ்ய பிரபந்தத்தையே பாடிக்கொண்டிருக்கிறீர்கள் . இதையும் சற்று நினைத்து பாருங்கள் . உங்கள் தலைவிக்கு எதிராக பதிவான வாக்குகள் 8192 , வாக்களிக்காதோர் சுமார் 35 சதவீத மக்கள் . இந்த அடிப்படையில் பார்த்தால் உங்கள் தலைவி just pass .

தலைவியை அவமதிக்கிறார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது . நல்லதை பாராட்டுகிறோம் . குறைகளை சுட்டிக்காட்டுகிறோம் .

ஒருசில வாரங்களுக்குமுன் தலைவியுடன் தொலைபேசியில் பேசினேன் . எங்கள் தெருவிலுள்ள குறைகளை சொன்னேன் . அந்த குறைகள் எதனால் ஏற்படுகிறது என்பதை தலைவி சொன்னதில் , எனக்கு அவர்களுடைய பதில் திருப்தியாகவே இருந்தது . மேலும் , நகராட்சியில் வர இருக்கும் ஒருசில திட்டங்கள் பற்றியும் சொன்னார்கள் . அந்த தொலைபேசி உரையாடலிலேயே தலைவியை பாராட்டினேன் . ஆக நல்லதை பாராட்டுகிறோம் , மற்றதை கவனத்தில் கொள்ளும்படி சொல்கிறோம் , இதில் தவறே இல்லை .

6 மாத காலமாக தனக்கென ஒரு அறை இல்லாமல் , அது இப்போதுதான் மீடியா மூலம் வெளியே தெரிகிறது என்றால் , இவ்வளவு நாளாக தலைவி என்ன செய்து கொண்டிருக்கிறார் ? விளம்பரம் கொடுப்பது மட்டும்தான் தலைவியின் வேலையோ என்று எண்ண தோன்றுகிறது .

அடுத்து , K .S . Shuhaib மச்சான் , நாங்கள் யாருக்கும் துதிபாடிகள் இல்லை . நீங்களும் இனிமேலாவது யாருக்கும் ஜால்ரா அடிக்காமல் உண்மையை எழுதுங்கள் . அரசின் சிகப்பு நாடா , கருப்பு நாடா முறைகள் பற்றி அனைவருக்கும் தெரியும் . உங்களுடைய வாதங்களை பார்க்கும்போது இந்த " Of evil seed no good grains can come " என்ற சொல் நினைவுக்கு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Lebbai (Riyadh) [16 April 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18272

தமிழ்நாட்டில் எந்தவொரு நகராட்சியாகட்டும், பேருராட்சியாகட்டும் முறையாக டெண்டர் விடப்பட்டு தான் வேலை நடக்க முடியும். தமிழகத்தில் உள்ள எல்லா நகராட்சிகளின் டெண்டர் காண : (தற்போது காயல்பட்டின டெண்டர் முதலில் உள்ளது.

http://municipality.tn.gov.in/tenders/UserTenderDisplay.aspx

நல்ல வாய்ப்பிருந்தும், தரமான தகுதியான ஒப்பந்தகார்கள் float ஆகிய டெண்டரில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை திறமையற்றவர்கள் ஒப்பந்தம் எடுத்து பயன்படுத்தி கொள்ளுகிறார்கள்.

இந்த அறை பழுதை பொறுத்தவரை, இது ஒரு பெரிய ப்ராஜெக்ட் அல்ல, ஆனால் அவசியமானது. இதை அவசர கால (Emergency basis ) அடிப்படையில் இது போன்ற அசௌகரியங்களை நிவர்த்தி செய்ய சட்டத்தில் வாய்ப்பிருக்கும் என்று எண்ணுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [16 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18273

ஊரில் நடக்கும் விஷயங்களை ஒன்று ஊரில் இருக்கும் நல்லவர்களிடம் கேட்டு அறிந்து கருத்துப் பதிய வேண்டும். அல்லது தான் ஊரில் இருந்து நேரடியாகப் பார்த்து அறிந்து கருத்து கூற வேண்டும்.

நம் மக்களில் சிலருக்கு அதெல்லாம் ஹராமான காரியம். தேர்தல் ஜுரம் இன்னும் தனியவில்லை. ஒன்றாக அமர்ந்துகொண்டு பல பெயர்களில் மாற்றி மாற்றி கருத்துக்களை வெளியிட்டு, பிரச்சினையை கிரியேட் பண்ணி, கடைசியில் இவங்க ஊர் ஒற்றுமைக்கு உலை வச்சிட்டாங்க-ன்னு புலம்புவது.

இது எப்படி இருக்குன்னா, விலை மதிக்க முடியாத தங்க வைர நகைகளை திருடிவிட்டு, கூட்டத்தோடு கூட்டாமாக இவரும் “கள்ளன் கள்ளன்” ன்னு கத்திட்டு போறது மாதிரி இருக்கு.

கரை வேட்டிக்காரர்களிடமும், ஊரைக் காப்பாத்தும் உன்னத மக்களைக் கொண்ட தனியார் நிறுவனத்திடமும், சந்தனம் மலிஞ்சா .... தேய்ப்பது போல பணத்தை வைத்துக்கொண்டு உருப்படியில்லாத காரியங்களை செய்துகொண்டிருக்கும் பண முதலைகளிடமும் இந்த நகர்மன்றத் தலைவி சரணடைந்து ரப்பர் ஸ்டாம்ப் ஆகிவிட்டால் இவரை விட சிறப்பான ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லைன்னு இவங்க சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அடுத்து, விளக்கு செய்யது முஹம்மது அலி காக்கா அவர்கள், குறிப்பிடுவதைப் பார்த்தால், இந்தச் செய்தியை தலைவி சொல்லி இந்த இணையதளம் வெளியிட்டது போல சொல்கிறார். நான் அறிந்த வரை இதற்கென்றே கையில் கேமராவுடன் ஊர் சுற்றி சிலர் படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த செய்தியில் நகர்மன்றத் தலைவரின் அறை இப்படி இருக்கிறது என்று சொல்வதற்காக, தலைவர் விளம்பரத்திற்காக இதை தந்தார் என்று சொன்னால், நாளை நம் ஊரில் ஏதோ ஒரு தெருவில் புதிய ரோடு போட்ட படத்தைப் போட்டால், தலவாணி முத்து (ஒப்பந்தக்காரர்) விளம்பரம் விரும்பி இந்தப் படத்தைத் தந்தார் என்றும் சொல்வார் போலும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. ஓய்...! இது உமக்கே உள்ள குசும்பு தான்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.) [16 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18275

ஹலோ! சைலண்ட்டா ஒரு ஃபோடோ அதுவும் பழைய செய்தி இதைப் போய் இப்ப போட்டு விட்டு கமெண்ட்ஸ் யுத்தத்தை ஆரம்பிச்சு வெச்சுட்டீங்களே? இதுதான் உம்ம குசும்பு என்பது! சும்மா கிடந்த சங்கு கதைதான்.

குறிப்பு: நகர் மன்ரத் தலைவிக்கான அறையை சீர்படுத்த வில்லை என்பதால் செயல் படாத நிர்வாகம், பலம் இழந்த தலைவி, இதெல்லாம் தேவையற்ற் ஒன்று. தலைவியின் செயல்பாடு பற்றி யாவரும் அறிவோம். சும்மா ஓட்டாதீங்கப்பா!

தன் அறையை அழகு படுத்துவதைக் காட்டிலும் ஊர் நலனில் அக்கறை கொண்டு சும்மா பம்மரமா அந்த மனுஷி சுற்றி வர்றாங்க! நீங்க பாட்டுக்கு எது எதையோ எழுதி ஏன் குழப்புறீங்க? இத்துடன் இது பற்றிய கருத்துக்கு வைப்போம் முற்று!!!

-ஹிஜாஸ் மைந்தன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. இன்று வந்தவர்கள் செய்யும் காரியங்கள் முன்னாள் இருந்தவர்கள் செய்த நல்ல நல்ல காரியங்களை அழித்து விடுமா?
posted by Muthu Magdoom VSH (Jeddah) [16 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18282

-----------------------------------------

"அடுத்து, விளக்கு செய்யது முஹம்மது அலி காக்கா அவர்கள், குறிப்பிடுவதைப் பார்த்தால், இந்தச் செய்தியை தலைவி சொல்லி இந்த இணையதளம் வெளியிட்டது போல சொல்கிறார்"

Comment Reference Number: 18273

---------------------------------------

இந்தச் செய்தியை தலைவி சொல்லி இந்த இணையதளம் வெளியிட்டது என்று சொல்வது முட்டாள் தனம்.

தலைவியை விடுங்க சார். அவங்களை புகழ்கிறேன் பேர்வழி என்று மற்றவர்களை மட்டம் தட்டுகிறீர்களே. இது வேண்டாத வேலை இல்லையா? முன்னாள் தலைவர்கள் செய்த நல்ல காரியங்களை எல்லாம் மறந்து விட்டு பேசுகிறீர்களே. இது நியாயமா? இன்று வந்தவர்கள் செய்யும் காரியங்கள் முன்னாள் இருந்தவர்கள் செய்த நல்ல நல்ல காரியங்களை அழித்து விடுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [16 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18285

Comment Ref No. 18282

................தலைவியை விடுங்க சார். அவங்களை புகழ்கிறேன் பேர்வழி என்று மற்றவர்களை மட்டம் தட்டுகிறீர்களே. இது வேண்டாத வேலை இல்லையா? முன்னாள் தலைவர்கள் செய்த நல்ல காரியங்களை எல்லாம் மறந்து விட்டு பேசுகிறீர்களே. இது நியாயமா? இன்று வந்தவர்கள் செய்யும் காரியங்கள் முன்னாள் இருந்தவர்கள் செய்த நல்ல நல்ல காரியங்களை அழித்து விடுமா?
(Copy/Paste)

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசுவதில் மன்னர்களே! இச்செய்தியில் முன்னாள் நகர்மன்றத் தலைவரின் பெயரை வம்புக்கு இழுத்தது யார்? செய்தியை வெளியிட்டவர்களா அல்லது இச்செய்தியை ஆதரித்து கருத்து வெளியிட்டவர்களா? அல்லது எதிர்த்து கருத்து வெளியிட்ட திருவாளர்களாகிய நீங்களா?

கருத்துப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில், கொஞ்சம் கூட பக்குவமின்றி பெரியவர் ஒருவரை வம்புக்கு இழுத்து, தேரை இழுத்து தெருவிலும் விட்டுவிட்டு, சரியான சவுக்கடி விளக்கம் கிடைத்ததும் ஏன் இந்த மீசையில் மண் ஒட்டாத பழக்கம் திருவாளர்களுக்கு? சும்மா இருந்த பெரியவர் பெயரை இங்கே வம்புக்கு இழுத்து இப்போது மீசையில் மண் ஒட்டாமல் கருத்துக்களை வெளியிடும் திருவாளர்களின் நோக்கம்தான் என்ன?

இந்த இணையதளத்தில் வாசகர் கருத்துப் பகுதி இதற்கு முன் இருந்ததில்லை. வாசகர் கருத்துப் பகுதியை அறிமுகப்படுத்தியபோது ஆட்சேபணை செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், “நாங்க வெளியிடும் தகவல்களை பார்ப்பது மட்டும்தான் உங்கள் கடமை என்றில்லாமல், இதுகுறித்து விமர்சிக்க உங்களுக்கும் வாய்ப்புள்ளது என்பதை அறிவிக்கத்தான் இந்த வாசகர் கருத்துப்பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்கள். இப்பகுதி மூலம், செய்தியை வெளியிடும் அவர்களுக்குத் தெரியாத சில தகவல்கள் வாசகர் கருத்து மூலம் இடம்பெறவும்,. செய்தியிலுள்ள கவனக்குறைவான தவறுகள் சுட்டிக்காட்டப்படவும், பொது காரியங்களுக்கு நன்கொடை கேட்கும் செய்திகளில் உடனுக்குடன் தமது விருப்பத்தைத் தெரிவிக்கவும் இதுபோன்ற காரியங்களுக்கு இந்த வாசகர் கருத்துப் பகுதியை பயன்படுத்துவோர் வெகு சிலரே.

ஆனால், ஊர் ஏன் அமைதியாக இருக்கனும்? இங்கே வெளிநாட்டில் இருக்கும் நமக்கு பொழுது போகனும்னா கமெண்ட்ஸ் பகுதியை கலக்கனும் (இதை நான் யூகத்தில் சொல்லவில்லை) என்று கூறிக்கொண்டு, ஒருசிலர் தமக்குள்ளேயே பேசி வைத்துக்கொண்டு இதுபோன்ற ஈன வேலைகளில் ஈடுபடுவது உண்மையிலேயே என்னைப் போன்றவர்களை விட இந்த தளத்தை நடத்துவோரை மிகவும் வருத்தப்படச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [16 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18286

ஜால்ரா அடிப்பதும் சாமரம் வீசுவதும் நமது வேலையல்ல. வயிற்று எரிச்சலில் வம்பாய் கத்துவதும் நாமல்ல. அதற்கெல்லாம் காயல் நகரின் குறிப்பிட்ட ஒரு பகுதியை சேர்ந்த கூட்டம் அரபுநாட்டிலிருந்து அமெரிக்கா வரை தனியாக இயங்கி வருகிறது.

தேர்தலில் தோற்ற பிறகு புள்ளிவிவர கணக்கெல்லாம் எதற்கு?தேர்வில் பாஸே பண்ண முடியாதவர்கள் ஜஸ்ட் பாஸ் ஆனவர்களை பார்த்து முகம் சுழிப்பது நல்ல வேடிக்கை.

தம்பி உமர் அனஸ் ...உங்கள் நான்கு பேரின் வயிற்று எரிச்சல் ஒலியில் எங்கள் ஜால்ரா சப்தமெல்லாம் ஒன்றுமே இல்லை. யானையை பார்த்த குருடர்கள் கதை தெரியுமா ?அதுவும் நான்கு பேர்கள்தான். யானை கம்பீரமானது. குருடர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by Salai.Mohamed Mohideen (USA) [16 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18288

ஒரு சாதாரண (?) செய்திக்கு 45 (33 + 12 நிராகரிக்கப்பட்டது) கருத்துக்கள். நான் இதை 'டைப்' பண்ணி முடிப்பதற்க்குள் இன்னும் இரண்டு கருத்துக்கள் பதிவாகி விட்டது. போகின்ற கருத்து பரிமாற்றங்களை பார்த்தால் 'இது' ஒரு முடிவுக்கு வராது போல் தெரிகின்றது. ஒரு கருத்து பதிவிற்க்கு தோராயமாக 30 நிமிடம் என்று எடுத்து கொண்டால்... மொத்தம் 47 கருத்து பதிவிற்க்கு 23 மணி நேரங்கள் செலவிட்டுள்ளோம். இக்கருத்து பரிமாற்றம்... பிறருக்கு உபயோகமானதாக அல்லது குறைந்த பட்சம் ஆரோக்கியமானதாக இருந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.ஆனால்...

நாம் ஒவ்வொருவரும் நகராட்சி / நகராட்சி தலைவர் /அரசியல் சம்பந்த பட்ட செய்திகளை எப்பவுமே எக்ஸ்ரே கண் கொண்டு ஊடுருவி அலசி, கருத்து பதிவதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டுகின்றோம். இதே போக்கை, நமது இணையதளத்தில் வரும் கான்சர், DCW மற்றும் city of lights போன்ற செய்திகளுக்கும் (நமக்கு தெரிந்த கருத்துகளை / உணர்வுகளை அதிகதிமாக பதிவு செய்வதன் மூலம்) கடை பிடித்தால் நன்மையாக இருக்கும்.

நம்முடைய ஒவ்வொரு நகராட்சி தலைவரும் தங்களுடைய அனுபவதிட்கும், வயதிட்க்கும், சக்திக்கும்.... (இன்னும் என்னவெல்லாம் சேர்த்து கொள்ளனுமோ சேர்த்து கொள்ளவும்) உட்பட்டு தங்களால் முடிந்த நன்மைகளை நமதூருக்கு செவ்வென செய்துள்ளார்கள்... செய்து வருகின்றார்கள்.

மனிதன் என்ற முறையில் அதில் ஒரு சில குறைபாடுகள் கூட இருக்கலாம் / இருந்திருக்கலாம். 'முன்னே' இருந்தவர்களை விட, 'புதிதாக' வருபவர்கள் மிக சிறப்பாக பணியாற்றுவதட்காகத் தான்... அதற்க்கு தகுதியானவர்களை அப்பதவிக்கு நாம் தேர்வு செய்கின்றோம்.

ஆகவே அவர்களின் செயல்பாட்டை / செயல்திறனை 'மற்றவர்களுடன்' ஒப்பிட்டு பார்ப்பதோ அல்லது நாமே விளம்பர யுக்தி / செயல் திறனற்றவர், மீடியா 'ஒத்து' ஊதுகின்றது என்று கற்பனையாக (?) நினைத்து உடனே ஒரு தவறான முடிவுக்கு வருவது... நமக்கும் நமதூருக்கும் எவ்வித பயனும் அளிக்காது.

நமதூர் ஊடகங்கள் (குறிப்பாக KOTW) நகராட்சி அல்லது ஊர் சம்பந்த பட்ட நன்மையான ஏனைய விசயங்களிலும், தங்கள் சக்தியையும் / கடமையையும் தாண்டி, தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு 'அரிய பல' தகவல்களை நமக்காக சேகரித்து தருகின்றார்கள் என்பதனை மட்டும் என்னால் தெள்ளதெளிவாக உணர முடிகின்றது.

நம் தலைவியோ அல்லது நகரமன்ற உறுப்பினர்களோ தங்களுடைய கடமை தவறும் போது வழக்கம் போல் அதையும் எப்பொழுதும் சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நமது சகோதரத்துவ செல்ல சண்டைகளை (கருத்து விவாதத்தை) கொஞ்சம் உறங்க வைத்து விட்டு, ஒற்றுமை என்ற அசூர பலம் கொண்டு நமதூரில் தலை விரித்தாடும் முக்கியமான பிரச்சனைகளை களைந்தெறிவோம். வல்ல ரஹ்மான் தௌபீக் செய்வானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:பழுதடைந்த நிலையில் நகர்மன...
posted by OMER ANAS (DOHA QATAR.) [16 April 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 18291

தம்பி உமர் அனஸ் ...உங்கள் நான்கு பேரின் வயிற்று எரிச்சல் ஒலியில் எங்கள் ஜால்ரா சப்தமெல்லாம் ஒன்றுமே இல்லை. யானையை பார்த்த குருடர்கள் கதை தெரியுமா ?அதுவும் நான்கு பேர்கள்தான். யானை கம்பீரமானது. குருடர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். மூவரோடு என்னையும் இதில் இணைத்தமைக்கு மிக்க நன்றி பாய்!

யானைக்கதை,ஆமைக்கதை அம்புலி மாமா கதையெல்லாம் போகட்டும் காக்கா! உண்மையான இஸ்லாமிய சரித்திரத்தில் நான்கு ஃ கலிபாக்களின் ஒற்றுமையான ஆட்சி நீங்கள் கேள்வி பட்டதில்லையா?அதற்க்கு பெயர் பொன்னான ஆட்சி! இன்று குழப்பவாதிகள் செய்வதோ எட்டப்பர்களின் சூழ்ச்சி! உங்களுக்கு எது புடிக்குமோ எனக்கு தெரியாது!ஆனாலும்,ஒரு குறிப்பிட்ட ஏரியா வாசிகள் அரபு நாடுமுதல் அமெரிக்கா வரை இதற்காகவே ஒன்றிணைந்து செயல் படுகிறார்கள் என்று நீங்கள் எழுதியது எனக்கு ரொம்பவே படித்து விட்டது காக்கா! ஆம்மா காக்கா நீங்கள் எந்தப் பகுதி?

ஒரு குறிப்பிட்ட பகுதி என்று ஒருவர் சுட்டிக்காட்ட அதை எடிட் பண்ணாமல் வெளியிட்ட இந்த இணைய தளத்தை எங்கள் பகுதி ஆட்கள் எல்லோர்க்கும் ரொம்பவே பிடித்துள்ளது! என்னே ஒற்றுமை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (15/4/2012) [Views - 2474; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved