அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலைய நுழைவாயிலில் இன்று காலை 10.30 மணிக்கு தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தண்ணீப் பந்தலை திறந்து வைத்து, அனைவருக்கும் மோர் வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய அவர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்வதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கட்சியின் நகரச் செயலாளர் செய்யது காசிம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். |