ஒரு நகராட்சியுடன் மற்றொரு நகராட்சியை ஒப்பிடுவது சிரமமான காரியம். இருப்பினும் ஏறத்தாழ ஒரே அம்சங்களை கொண்ட நகராட்சியுடன் ஒப்பிடும்போது - தெளிவான விளக்கங்கள் பெறலாம்.
குழித்துறை - நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள இரண்டாம் நிலை நகராட்சி. அந்த நகராட்சியில் உள்ள தெருவிளக்குகள் எண்ணிக்கையை காண்போம்.
குழித்துறையில் 1174 குழல்விளக்குகள் உள்ளது. காயல்பட்டினம் நகராட்சியில் 1152.
குழித்துறையில் 273 சோடியம் வேபர் விளக்குகள் (250 MW). காயல்பட்டினம் நகராட்சியில் 269.
இவைகள் தவிர குழித்துறையில் 27 - 75MW சோடியம் வேபர் விளக்குகள் மற்றும் 45 - 250MW, Metal Halide பல்புகளும் உள்ளன.
காயல்பட்டினம் நகராட்சியில் - மேலே குறிப்பிடப்பட்டவைகளை தவிர 108 - 100W CFL பல்புகளும் உள்ளன.
இரு நகராட்சிகளின் தெருவிளக்குகள் 100 சதவீதம் - சமம் இல்லை என்றாலும், இரு நகராட்சிகளின் - மின் பொருள் தேவை ஏறத்தாழ ஒன்றாகவே உள்ளது.
2009 - 2010 இல் குழித்துறை நகராட்சி - தெருவிளக்குகளை பராமரிக்க வாங்கிய மின் பொருட்களின் மதிப்பு 7 லட்சம் ரூபாய். 2010 - 2011 இல் குழித்துறை நகராட்சி - தெருவிளக்குகளை பராமரிக்க மதிப்பிடப்பட்ட தொகை 8 லட்சம் ரூபாய்.
குழித்துறை நகராட்சி (2010-11) ...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இரண்டாம் நிலை நகராட்சி - புளியங்குடி. இங்கு -
1255 குழல்விளக்குகள் உள்ளது. காயல்பட்டினம் நகராட்சியில் 1152.
130 சோடியம் வேபர் விளக்குகள் (250 MW). காயல்பட்டினம் நகராட்சியில் 269.
34 சோடியம் வேபர் விளக்குகள் (125 MW) உள்ளது. 1 உயர்மின் கோபுரம் உள்ளது.
புளியங்குடியில் - கடைசியாக தகவல் உள்ள 2008 - 2009 நிதியாண்டில் தெருவிளக்குகளை பராமரிக்க வாங்கிய மின் பொருட்களின் மதிப்பு 4 லட்சம் ரூபாய்.
புளியங்குடி நகராட்சி (2008-09) ...
காயல்பட்டினம் நகராட்சியில் தெரு விளக்குகளுக்கு தேவையான மின் பொருட்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகை?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross