செய்தி எண் (ID #) 8322 | | |
செவ்வாய், ஏப்ரல் 17, 2012 |
அப்பாபள்ளியின் முன்னாள் மேலாளர் நெய்னா மரைக்கார் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3921 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (32) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் அப்பாபள்ளியின் முன்னாள் மேலாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் பொருளாளருமான நெய்னா மரைக்கார் இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 79.
அன்னார், மர்ஹூம் சேர்மன் மு.க.காதிர் ஸாஹிப் மரைக்கார் என்பவரின் மகனும்,
கே.எம்.ஏ.காதர் (சீகல்), மர்ஹூம் கே.எம்.ஏ.நூருல் ஹக் ஆகியோரின் மச்சானும்,
என்.எம்.அன்வர் ஹுஸைன், என்.எம்.முஹம்மத் இல்யாஸ் ஆகியோரின் தந்தையும், என்.எம்.செய்யித் அஹ்மத் என்பவரின் மாமனாரும்,
மாஸ்டர் பஷீருல்லாஹ்வின் சகலையுமாவார். இவரது மனைவி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 09.00 மணியளவில், அப்பாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |