காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - பெற்றுள்ளது.
மொத்தம் சுமார் 1600 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கைகள் - பல அரிய தகவல்களை வழங்குகின்றன. எதிர் வரும் காலங்களில் - அவைகளில் உள்ள முக்கியமான தகவல்கள் செய்திகளாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
தணிக்கை அறிக்கைகள் ஒரு நகராட்சியின் நிதி பராமரிப்பு (Financial Management) முறையினை படம் படித்து காண்பிக்கக்கூடியவை. அவற்றில் - ஒரு நகராட்சியில் நடக்கும் சிறு தவறுகள் முதல் பெரிய தவறுகள் வரை சுட்டிக்காட்டப்படுகின்றன. அந்த குறைகள் (முறைக்கேடு / இழப்பு / தவறுதலாக செலவு / வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை) - அதற்கு காரணமான/பொறுப்பு எடுக்கவேண்டிய அதிகாரிகளின் பெயரோடு பதிவுசெய்யப்படுகின்றன.
சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தவறு மீதும் தணிக்கை தடை (Audit Objection) விதிக்கப்படுகிறது. தடைவிதிப்பது மூலம் - அந்த தொகைக்கான பதில் அளிப்பது, குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளின் பொறுப்பாகிறது.
காயல்பட்டினம் நகராட்சியில் - 1972 - 73 முதல் டிசம்பர் 2009 வரை - சுமார் 8 கோடி ரூபாய் (டிசம்பர் 2009 நிலவரப்படி) அளவில் தணிக்கை தடை நிலுவையில் உள்ளது. இதில் பெரும்பாலானவை - கடந்த 15 ஆண்டுகளுக்குரியது.
1996 - 2001 = 43 லட்சம் ரூபாய்
2001 - 2006 = 3 கோடியே 12 லட்சம் ரூபாய்
2006 - 2009 (December) = 3 கோடியே 67 லட்சம் ரூபாய்
1. Re:காயல்பட்டினம் நகராட்சியில... posted byDeen (Hkg)[19 April 2012] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 18373
.............. - அவைகளில் உள்ள முக்கியமான தகவல்கள் செய்திகளாக இணையதளத்தில் வெளியிடப்படும் ........
விரைவாக செய்தியை போடுங்க அதோடு என்னென்ன நடவடிக்கைகள் அரசாங்கம் எடுத்துள்ளது எந்தெந்த அதிகாரிகள் பொருப்பாகியுள்ளார்கள் என்கின்ற செய்தியையும் கேட்டு அதையும் பதிவு செய்யுங்கள்
- செய்தியோடு நின்றுவிடாமல் மேல் நடவடிக்கை எடுக்க ஏதாவது செய்யுங்கள் - - மக்கள் தெரிந்துகொள்ளட்டும் - வரும் காலாங்களிலாவது நம் நகர்மன்றம் விழிப்புடன் இருக்க வழி செய்யுங்கள் நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross