காயல்பட்டினம் 14ஆவது வார்டுக்குட்பட்ட பாஸ் நகர் (முதல் இரண்டு படங்கள்) மற்றும் லெட்சுமிபுரம் (கடைசி படம்) பகுதிகளிலுள்ள ஒரு மின் கம்பத்தின் காட்சிதான் இது! இக்கம்பத்திலுள்ள தெரு விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்றும், அதுகுறித்து மின் வாரியத்திடம் பலமுறை முறையிடப்பட்டுள்ளதாகவும், பழுது நீக்க வரும் அலுவலர்கள், “இந்த ஆபத்தான கம்பத்தில் யார் ஏறுவாங்க?” என்று அச்சத்துடன் கேட்டபடி திரும்பச் செல்வதாகவும், அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காயல்பட்டினம் மின்வாரிய உதவிப் பொறியாளரிடம் வினவியபோது, அக்கம்பம் ஆறுமுகநேரி மின்வாரிய அலுவலகத்தின் கீழுள்ளது என்று தெரிவித்தார். காயல்பட்டினம் மின்வாரிய அலுவலத்தின் கீழுள்ள எந்தக் கம்பத்தையும் இதுபோன்று தாங்கள் விட்டு வைக்கவில்லை என அவர் உறுதிபட தெரிவித்தார்.
1. சரிஞ்சா சங்குதான்! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[23 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18431
இக் கம்பத்தில் மின்வாரியப் பணியாளர்கள் ஏறுவதற்கு கூட அச்சப்படுவார்களே? அரசாங்கம் மின்கம்பங்களை செய்ய தனியாருக்கு தாரிவார்த்து தரம் குன்றிய சிமெண்ட், உப்புத் தண்ணீர்க் கலவை வலுவிழந்த கான்க்ரீட் கம்பிகள் என சும்மா ஒப்புதலுக்கு வாங்கி வருவதாலேயே இக்கம்பங்கள் சதையும், தோலுமின்றி வெறும் எலும்புக்கூடுகளாய்க் காட்சியளிக்கின்றன.
உண்மையில் அந்த புவனம் எனும் பவனம் ஆபத்தை எதிர் நோக்கிய கேள்விக்குறியேதான்!
2. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (... posted byM.S.ABDULAZEEZ (Guangzhou)[23 April 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 18433
அப்படியே பழுது நீக்கிடாலும் பளிச்சுன்னு எறியத்தான் போகுது....??? உள்ளத்துக்க பவர் இல்லை இதுல இது வேற...... ராஊத்தர கொக்கா பறக்குறாரு இதுல குதிரைக்கு கொள்ளும் கம்பும் வேணுமாம்.
இது போன்ற ஆபதனா காட்சி கலை படம் எடுத்து
வலயதலத்தில் இட்டு கமெண்ட்ஸ் போட்டு சும்மா இருந்து விடாதீர்கள் ,
கரண்ட் இருகின்றது இல்லை என்பது இங்கு வாதம் இல்லை
இந்த போஸ்ட் என்றாவது ஒரு நாள் சாய்வது உறுதி அதற்கு முன்னால் உரிய நடவடிக்கை எடுங்கள். இந்த படத்தை எடுத்து மின்வாரிய அதிகரி களிடம் ஒப்படையுங்கள் ,
போஸ்ட் கீழே விழுந்து கரண்ட் அடித்து பல உயிர்கள் மாய்வதை பார்க்க நினைகதீர்கள்,
ஒவருவரும் நம் வீட்டுக்கு முன்னால் இப்படி இருந்தால் என்ன செய்ய நினை போமோ அதை செய்து காட்டுங்கள்
அலலாஹ் உங்கள் அனைவர்க்கும் ரஹ்மது செய்வானாக
இப்படிக்கு
4. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[23 April 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18439
ஒரு இல்லத்தின் அருகே இருக்கும் விளக்கு கம்பத்துக்கு "புவனா ஒரு கேள்விக்குறி "என்று பெயர் வைத்தது போல் இன்னொரு இல்லத்தின் அருகே உள்ள கம்பத்துக்கு "சங்கர் சலீம் சைமன்"என்று பெயர் வைத்திருக்கலாம்.
ரஜனியின் ஒரு நல்ல படத்தின் பெயரை நினைவு படுத்தியதற்கு நன்றி...!
6. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (... posted byKader K.M (Dubai)[23 April 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18444
X-RAY எடுத்து பார்த்திருப்பார்களோ ? முறுக்கு கம்பி தயாரிப்பாளர்களே உங்கள் விளம்பரத்திற்கு இதோ ஒரு போட்டோ! கால சீற்றத்தால் சிமெண்டே போனாலும் எங்கள் கம்பி சரியாது! வாங்கிடுவீர் சுருட்டுமார்க் முறுக்கு கம்பிகள் !
நமது EB க்கு உட்பட்டது இல்லையெனினும் சம்பந்தப்பட்ட EB க்கு நமது EB தெரிவித்ததா ? இணையதளம் கண்ணில் பட்டுவிட்டது இனி சரியாகிவிடும் !
7. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[23 April 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18445
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த மாதிரி உள்ள மின் கம்பத்தில் யார் தான் ஏறுவாங்க சார் .... இவர்களுக்கும் மனைவி / பிள்ளைகள் உள்ளார்கள் அல்லவா / நம் அருமை தலைவி அவர்களும் & 14 .வது வார்டு கவுன்சிலர் அவர்களும் இந்த வீசியதில் நிச்சயம் தலையிட்டு இந்த பகுதி மக்களின் கஷ்டத்தை நீக்குவார்கள் என்று நாம் நம்புகிறோம்.
ஆமா அது என்ன நம் ஊரு 14ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியாம்?? மின் கம்பம் மட்டும் ஆறுமுகநேரி மின்வாரிய அலுவலகத்தின் கீழ் உள்ளதாம்?? ஒன்றும் புரிய வில்லை .சரி ஹையர் . நம் தலைவி அவர்களும் & கவுன்சிலர் அவர்களும் கவனித்து கொள்வார்கள். நல்லது மக்களுக்கு நடந்தால் சரிதான் .
பொதுவாக மக்கள் நட மாற்றம் உள்ள பகுதிகளில் தெரு விளக்கு கண்டிப்பாக தேவைதான் . தெரு விளக்கு கஷ்டத்தை நாங்களும் எங்கள் பகுதியில் ( மகலரா நகர் ) உணர்ந்து வருகிறோம் .
மேலும் எங்கள் பகுதியில் ( மகலரா நகர் ) ரோடும் போடா பட வில்லை. நாங்கள் எங்கள் கவுன்சிலர் மதிப்பு கூறிய ஐயா சாமி அவர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். நிச்சயம் இந்த இரண்டு விசியத்தையும் கவனிப்பார்கள் ( செயல் படுவார்கள் ) என்றும் நாங்கள் முழு நம்பிகையுடன் காத்து உள்ளோம் .
வயதான பெண்கள் & குழந்தைகள் நட மாட கூடிய பகுதி PLZ ஐயா நீங்கள் வருகிற நகராட்சி கூட்டத்தில் பேசி செயல் படுத்த வேண்டியது .
வஸ்ஸலாம்
9. Re:அட கொப்புரானே!அருண் சங்கரும் (?)குறிதான்! posted byOMER ANAS (DOHA QATAR.)[23 April 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 18456
அட கொப்புரானே !!! புவனா மட்டும் கேள்விக்குரியல்ல.அருண் சங்கரும் ஒரு கேள்விக்குறிதான்.பில்லு கட்டலே என்றால், அங்க பீச புடுங்கிறேன் இங்க பீச புடுங்கிறேன் என்று கேள்வி பட்டு இருக்கிறோம்!
14 ஆவது வார்டு மெம்பர் பார்த்துப்பார், தலைவி பார்த்துப்பார் என்றில்லாமல் இது விசயத்தில் அனைவர்களும் ஒன்று கூடி நடவடிக்கை எடுங்கள்! யார் கண்டா,,,, விபத்து நடக்கும் போது எந்த வார்டை சேர்ந்த மக்களும் அவ்விடத்தில் நிற்க்கலாம்தானே! பீஸ் புடுங்கினதுக்கு அப்புறம் யாரையும் குறை சொல்வதை விட்டுத் தவிர்க்க உடனே துரித நடவடிக்கை எடுங்கள்!
10. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (... posted byVilack SMA (Wu yi , Nanhai.)[24 April 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 18458
வீடு காயல்பட்டினம் நகராட்சியில் வருகிறது . மின்கம்பம் ஆறுமுகநேரி மின்வாரியத்திற்கு சொந்தமானதாம் . அப்போ , தண்ணீர் குழாய் ஆத்தூருக்கு சொந்தமானதா இருக்குமோ ?
பக்கத்து மாநிலத்து காரன் " தவிச்ச வாய்க்கு தண்ணி கூட ஊத்த மாட்டேங்குறான் " . அடுத்த ஊர் நகராட்சிக்குட்பட்ட வீட்டுக்கு , இவங்க எப்படி electric post கொடுப்பாங்க ? இதுபற்றிய சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கி சொன்னால் தெளிவாக இருக்கும் .
11. Re:எங்கே புடுங்குறது..!! posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[24 April 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18461
இந்த புகைப்படமும், செய்தியும் வரக்காரணம் அங்கு நடந்த "உண்ணாவிரதப் போராட்டம்" தான். இது நடக்க வில்லை என்றால் நம்மவர்கள் அங்கு சென்று இருக்க வாய்ப்பு இல்லை. ஆக எந்த நிகழ்விலும் ஒரு நன்மை உண்டு.
** சோ.. சகோ. S.K. ஸாலிஹ் அவர்களே, டைம் கிடைக்கும் போது நம் சுற்றத்தையும் கவனியுங்கள். அப்படியே, எங்கள் பகுதியில் (மஹலரா நகர்) ஒரு சிறு குட்டை கழிவு நீரால் நிரம்பி, கொசுக்களின் சொந்த வீடாக ஆகிவிட்டது. கொசுப்படை என்றால் என்ன? என்பதை அங்கு சென்றால் புரிந்து அறிந்து கொள்ளலாம். அங்கும் செல்லுங்களேன். எங்கள் வார்டு மெம்பர் சாமி சார்.. கொஞ்சம் மேடைக்கு வாருங்கள்... ***
இந்த மின்கம்ப விவகாரம் வெளியில் வந்து விட்டதால் அதற்க்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நம்புவோம்..!!
இதில் ஒரு நன்மை உண்டு, மின் கட்டணம் கட்ட அவசியம் இல்லை. கட்டாவிட்டால் என்ன செய்வார்கள்? கம்பத்தில் ஏறி பியூசை புடுங்குவார்கள்.. அதான் கம்பத்தில் ஏறவே பயப்படுகிறார்களே..!, அப்புறம் எங்கே புடுங்குறது.
** இந்த செய்தியின் தலைப்பு... என்ன ஷாக்கான லேடீஸ் மேட்டர் போல என்று நினைத்து விட்டேன்.. ஆம்.. ஷாக்கான மேட்டர் தான் **
12. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (... posted byI.IMTIAZ AHMED (ABU DHABI - UAE)[24 April 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18470
யுவர் மெசேஜ் இஸ் பெர்பெக்ட்.பட் டைட்டில் வித் குச்டின் மார்க்ஸ் இஸ் நாட் அச்செப்டப்ல். சுப்போசே இப் தி நேம் இஸ் பெர்தைன் டு எனி வோமேன் நேம் தென் யுவர் டைட்டில் இஸ் வெரி வ்ரோங். ப்ளீஸ் அவோஇது சுச் திங்க்ஸ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross