Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:08:31 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8336
#KOTW8336
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 22, 2012
நகராட்சி தணிக்கை அறிக்கை: குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான உதிரி சாமான்கள் வாங்கியதில் 2.5 லட்சம் ரூபாய் முறைக்கேடு! (பாகம் 1)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3525 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4

காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - பெற்றுள்ளது.

மொத்தம் சுமார் 1600 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கைகள் - பல அரிய தகவல்களை வழங்குகின்றன. அவைகளில் உள்ள முக்கியமான தகவல்களை - தொடராக காயல்பட்டணம்.காம் வெளியிட உள்ளது.

அத்தொடரின் முதல் பாகமான இப்பாகத்தில் - நகரின் குடிநீர் பராமரிப்பு பணிகளில் - முறைக்கேடு நடந்ததாக - காயல்பட்டினம் நகராட்சியின் 2009 (ஏப்ரல் - டிசம்பர்) வரவு செலவு தணிக்கை அறிக்கை கூறும் தகவலை காணலாம்.

அவ்வறிக்கையின் பத்தி 46 மற்றும் 47 ஆகியவை ரூபாய் 2.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் வாங்கப்படாமலேயே பொருட்கள் வாங்கப்பட்டதாக செலவுகாட்டப்பட்டதாக குற்றம்சாட்டுகிறது. அதற்கு பொறுப்பாக நகராட்சியின் பொருத்துநர் திரு நிஜார் அஹமத் மற்றும் அப்போதைய செயல் அலுவலர் திரு ஜே.எம். அஹமத் ஆரூண் ஆகியோரை அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2009 (ஏப்ரல் - டிசம்பர்) வரவு செலவு தணிக்கை அறிக்கையின் பத்தி 46 ...

குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான உதிரி சாமான்கள் வாங்கியதாக செலவீனம் மேற்கொண்டது கடுங்குறைபாடு - இழப்பு ரூபாய் 99,700/-

இந்நகராட்சியில் தணிக்கையாண்டில் வங்கி செலவுச் சீட்டு எண் 215 /20.10.2009 -ன் படி குடிநீர் பராமரிப்பு பணிகளுக்காக தென்காசி கனகசபாபதி முதலியார் & சன்ஸ் நிறுவனத்திடமிருந்து (நிறுவன பட்டியல் எண் 853/ 14.09.2009) ரூபாய் 99,790/- மதிப்பில் கீழ்க்கண்ட விபரப்படியான உதிரி பொருட்கள் வாங்கியதாக செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருட்கள் விபரம்அளவுவிலை வீதம்மதிப்பு ரூ.
4" சுலூயிஸ் வால்வு6710042,600
6" சுலூயிஸ் வால்வு2890017,800
3" பித்தளை கேட் வால்வு6287517250
4-5/8 போல்ட் & நட்200357000
2/2-1/2 போல்ட் & நட்200153000
6" சுலூயிஸ் வால்வுக்குரிய உதிரிகள்413105240
3" பிவிசி கப்லர்100696900
மொத்தம்99,790


இச் செலவீனத்தால் நகராட்சிக்கு நிதி இழப்பினை ஏற்படுத்தக்கூடிய கடுங்குறைபாடுகள் கீழ்க்கண்ட விபரப்படி தணிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

1. பொருத்துனரிடம் இருந்து உரிய தேவைப்பட்டியல் பெறப்படவில்லை

2. செயல் அலுவலரால் தென்காசி கனகசபாபதி முதலியார் & சன்ஸ் நிறுவனத்திற்கு பொருள் விநியோக ஆணை வழங்கப்படவில்லை

3. கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட பதிவேட்டில் வரவாக்கப்பட்ட விபரம் தணிக்கைக்கு காண்பிக்கப்படவில்லை. இது குறித்து கேட்டதில் 2009 - 10 ம் ஆண்டிற்கு குடிநீர் உதிரி பொருட்கள் ஏதும் வாங்காததால் 2009 - 10 ம் ஆண்டிற்கான குடிநீர் உதிரி சாமான்கள் பதிவேடு பராமரிக்கப்படவில்லை என பொருத்துனரால் தணிக்கைக்கு தெரிவிக்கப்பட்டது

4. இப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட விபரம் தணிக்கைக்கு காண்பிக்கப்படவில்லை

5. இப்பொருட்களுக்கான கிரயம் பட்டியலில் ஈடு செய்து நகராட்சி நிதியில் வரவாக்கபடவும் இல்லை

இதிலிருந்து இச்செலவினம் உண்மையிலேயே மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது. எனவே முறைகேடாக செலவிடப்பட்டு நகராட்சிக்கு இழப்பாகி உள்ள தொகை ரூபாய் 99, 790/- இதற்கு பொறுப்பான அலுவலர்களிடம் ஈடு செய்யப்படவேண்டும். இக்குறைப்பாட்டிற்கு பொருத்துநர் திரு நிஜார் அஹமத் மற்றும் செயல் அலுவலர் திரு ஜே.எம். அஹமத் ஆரூண் ஆகியோர் பொறுப்பாவார்கள்.


2009 (ஏப்ரல் - டிசம்பர்) வரவு செலவு தணிக்கை அறிக்கையின் பத்தி 47 ...

குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான உதிரி சாமான்கள் வாங்கியதாக செலவீனம் மேற்கொண்டது கடுங்குறைபாடு - இழப்பு ரூபாய் 1,55,080/-

இந்நகராட்சியில் தணிக்கையாண்டில் வங்கி செலவுச் சீட்டு எண் WS23 /27.11.2009 -ன் படி குடிநீர் பராமரிப்பு பணிகளுக்காக தென்காசி சந்திரா ஏஜென்சீஸ் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 1,55,080/- மதிப்பில் கீழ்க்கண்ட விபரப்படியான உதிரி பொருட்கள் வாங்கியதாக செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரிசை எண்நிறுவன பட்டியல் எண்பொருட்கள் விபரம்அளவுவிலை வீதம்மதிப்பு ரூ.மொத்த மதிப்பு
12686/3.11.20093" சுலூயிஸ் வால்வு12540064,800
3" ஹெவி CI பிலாஞ்2447011,28076,080
22689/5.11.20098" சுலூயிஸ் வால்வு118,40018,400
2" பித்தளை கேட் வால்வு12127515300
3" CID ஜாய்ன்ட்3656020,160
4" CID ஜாய்ன்ட்2471017,040
ரப்பர் சீட்60 கி135810079,000
மொத்தம்1,55,080


இச் செலவீனத்தால் நகராட்சிக்கு நிதி இழப்பினை ஏற்படுத்தக்கூடிய கடுங்குறைபாடுகள் கீழ்க்கண்ட விபரப்படி தணிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

1. கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட பதிவேட்டில் வரவாக்கப்பட்ட விபரம் தணிக்கைக்கு காண்பிக்கப்படவில்லை. இது குறித்து கேட்டதில் 2009 - 10 ம் ஆண்டிற்கு குடிநீர் உதிரி பொருட்கள் ஏதும் வாங்காததால் 2009 - 10 ம் ஆண்டிற்கான குடிநீர் உதிரி சாமான்கள் பதிவேடு பராமரிக்கப்படவில்லை என பொருத்துனரால் தணிக்கைக்கு தெரிவிக்கப்பட்டது

2. இப்பொருட்கள் குடிநீர் விநியோக பழுத்த பார்ப்பு பணிகளில் பயன்படுத்தப்பட்ட விபரம் தணிக்கைக்கு காண்பிக்கப்படவில்லை

3. இப்பொருட்களுக்கான கிரயம் பட்டியலில் ஈடு செய்து நகராட்சி நிதியில் வரவாக்கபடவும் இல்லை

இதிலிருந்து இச்செலவினம் உண்மையிலேயே மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது. எனவே முறைகேடாக செலவிடப்பட்டு நகராட்சிக்கு இழப்பாகி உள்ள தொகை ரூபாய் 1,55, 080/- இதற்கு பொறுப்பான அலுவலர்களிடம் ஈடு செய்யப்படவேண்டும். இக்குறைப்பாட்டிற்கு பொருத்துநர் திரு நிஜார் அஹமத் மற்றும் செயல் அலுவலர் திரு ஜே.எம். அஹமத் ஆரூண் ஆகியோர் பொறுப்பாவார்கள்.


இவ்வாறு அத்தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிடுமே?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.) [22 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18414

முதல் கோணல் முற்றிலும் கோனல் என்பது இது தானோ? சரி இப்படி நகராட்சியின் பழைய குப்பைகளைக் கிளறினால் இனி கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிடுமே? யார்? யாரெல்லாம் மாட்டப் போறாங்களோ? இன்னும் என்னென்ன வெளிவரப் போகுதோ?

இப்பதான் தெரியுது நகராட்சி கவுன்சிலர் ஆவதற்கு இ(அ)வர்கள் ஏன் இவ்வளவு துடிக்கின்றார்கள்? என்று!

தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் போக மாட்டான். நக்கினால் கூடப் பரவாயில்லை! நக்கித் துடைச்சிட்டுல்லெ போயிருக்காங்க! பாவிகள்!

பொது மக்களின் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் நல்லா வாழ்ந்த சரித்திரமே இல்லை!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by amzedmoosa (dammam) [22 April 2012]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18416

இன்னும் நிறைய ஊழல் இருக்குது அது எல்லாவற்றையும் வெளிச்சத்துக்கு கொண்டுவாங்க. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by Kader K.M (Dubai) [22 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18417

துஆ கபூலாகிவிட்டதோ?? ஓகே! ஓகே!! துஆ செய்ய நாங்கள் ரெடி! ஓட நீங்கள் ரெடியா??? பாராட்டுக்கள் இணையதளம்!!! இனி உங்களுக்கு மிரட்டல்கள் கூட வரலாம்! உங்களுக்கு உறுதுணையாக பல்லாயிரம் காயலர்கள் நாங்கள் அரணாக இருப்போம்! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே! தொடரட்டும் உங்கள் புலனாய்வு!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நாய் பிஸ்கட் போடாத்தது இந்த இருவரின் குற்றம் போலும்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [22 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18419

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர ஆராய்வதே.................... மெய். என்பார்கள். ஆனால் அதெல்லாம் சாதாரண நம்முடைய நடைமுறைக்கு தானே.... தவிர அரசுத்துறை அதிகாரிகளுக்கு அல்ல. மெய்யை பொய்யாக்கவும், பொய்யை மெய்யாக்கவும்................ அவர்கள் எதிர்ப்பார்ப்பது மொய்.

தணிக்கை அறிக்கை கொடுத்தவர் சூபி..... சுல்த்தான் அல்லவா....? நாம் நம்புவதற்கு. எல்லாம் ஒரே....கட்டையில் (ஊழலில்) பிளந்த மட்டைகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [22 April 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 18420

இன்றைய அரசியலில் பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் பதவிக்கு வந்து ,அதே மக்களின் பொது சொத்துக்களை கொள்ளை அடிக்கவேண்டும் என்பதே பெரும்பாலான ஆட்களின் போக்காக உள்ளது. விதிவிலக்காக சிலர் இருக்கலாம் அவர்களை குறிப்பிடவில்லை.

ஆக மொத்தத்தில் இதுபோன்ற ஊழலை, கொள்ளையை மொத்தமாகவோ ,சில்லறையாகவோ தடுக்கமுடிகிறதோ,இல்லையோ ,இப்படியெல்லாம் நடக்கிறது என மக்கள் தெரிந்துகொள்ள முடிகிறதே அது நினைத்து சந்தோசம்தான் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [23 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18421

இந்த ஆடிட் ரிப்போர்ட்டில் கடற்க்கரை பூங்கா கட்டப்பட்ட விவகாரம் பற்றி ஏதாவது முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இப்பதான் பூதம் வெளி உலகத்துக்கு வருகிறது... துணை தலைவர் ஏன் (அலுவலர்கள்) இவர்கள் மேல் இரக்க படுகிறார்..?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [23 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18423

சமீபத்தில் நடந்து முடிந்த நகராட்சி கூட்டத்தில் இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகப் போறாங்க...! என்று நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் சொன்னதின் வெளிப்பாடு இப்பதான் பூதம் வெளி உலகத்துக்கு வருகிறது... துணை தலைவர் ஏன் (அலுவலர்கள்) இவர்கள் மேல் இரக்க படுகிறார்..? அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போறவங்க போகவேண்டியது தானே...? யாரு இந்த மாதிரி ஆட்களை இருக்க சொல்லி யாரு கட்டாயபடுதுகிறார்கள்..? போன நகர்மன்றத்தில் இந்த மாதிரி முறைகேடுகள் செய்ய ரெம்ப ரெம்ப வசதியா இருந்திச்சி... இப்ப இருக்கிற நகர்மன்ற தலைவரும் மீடியாவும் ஊர் மக்களும் ரெம்ப ரெம்ப தெளிவா ஆராய்ந்து எதிர் கேள்விகள் கேட்கிறாங்க... அல்லவா..!

நல்ல முறையில் நகர்மன்றத்தில் யோக்கியனாக இருந்து பணி செய்ய முடிந்தால் இருந்து பணி செய்... முடியலையா.. ? இந்த மாதிரி மீடியாவில் பெயர் வந்து கேவலபடு பிண்ணாடி உன் மொத்த சர்விஸ் பணத்தையும் இழந்து நடு ரோடுல நில்லு...

நகர் மன்றத்தின் ஊழல்களை மக்களுக்கு தோல் உரித்து வெளி உலகத்துக்கு காட்டிய வலைதளத்திற்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்...

உங்கள் பின்னால் வாசக மக்கள் இருக்கிறது உள்ளதை உள்ள படி தைரியமாக எழுதுங்கள்... மக்கள் சக்தி உங்கள் கையில்... தொடரட்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [23 April 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18425

முதலில் நம் kayalpatnam.com வலைதளத்திற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். உங்கள் துணிச்சலுக்கு ஒரு சலீயூட். தொடரட்டும்.

நகராட்சி மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில நானும் இருந்தேன்.

ஒரு போட்டியாளர் தோல்வி என்று அறிந்ததும், அவர் அங்கு போட்ட ஆட்டம் இருக்குதே..!! அவரோடு போட்டியிட்ட மற்ற நபர் ஓட்டை பிரித்து விட்டார் என்று கடும் கோபத்தில், தரம் தாழ்ந்த வசவுகள், ஆட்டம் என்று இறுதியில் அடி தடியில் இறங்கி விட்டார்.

நான் நினைத்தேன், "வார்டு மெம்பர் என்பது ஒரு சப்ப மேட்டார்.. இதற்க்கு போயி வாழ்க்கையே போன மாதிரி சப்பாணி அடிக்கின்றார்களே" என்று. இப்போ தான் தெரிகின்றது " இது சப்ப மேட்டர் அல்ல செம மேட்டர் என்று...!!"

பார்ப்போம் இன்னும் என்னன்ன பூதங்கள் எல்லாம் வெளியில் வருகின்றது என்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [23 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18426

முந்தைய நமது நகராசியில் பராமரிப்பு சாமான்கள் வாங்கமலலேயே விலைபட்டியல் வணிகர்களிடம் வந்து ஊழலுக்கு துணையாக இருந்து வந்த வார்டு உறுப்பினர், அலுவலகர் தரகஒப்பந்த அடிப்படையில் செலுத்தி இருப்பார்கள்.

இன்னும் நிறைய ஊழல் பொதுமக்கள் கண்பார்வைக்கு தெரியாமல் இருக்கிறது, இவை அனைத்தையும் நமதூர் இணையதளம் வாயிலாக வெளிச்சத்துக்கு கொண்டுவாங்க என நம்புகிறோம்.

மேலும் ஊழல் செய்த முந்தைய அலுவுளர்கள், வார்டு உறுப்பினர்கள் மீது பொதுமக்கள் ஊழல்வழக்கு போட்டு அடையலாம் காட்ட வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [23 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18429

ஆக்காத சோத்துக்கு பந்தி!

வாங்காத பொருளுக்கு 'மெகா' கணக்கு!!

எவன் எக்கேடு கெட்டால் என்ன? யார் வயித்துல மண் விழுந்தா எனக்கென்ன? என் பொண்டாட்டி - பிள்ளைங்க நல்லா இருந்தா போதும்! -இதுதான் இன்றைய அதிகாரிகள் பலரின் எண்ண ஓட்டம்.

வாழ்க காயல்பட்டணம் நகராட்சியின் ”பொறுப்புள்ள” அலுவலர்களும், அதிகாரிகளும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by ASHIK RAHMAN M.H. (mikhwa via al baha saudi arabia) [23 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18443

ஊழல் புற்று நோய் போன்று பரவி உள்ளது .அதற்கு தக்க மருந்து (நடவடிக்கை ) கண்டு பிடித்து ஊழல் புற்று நோயை வேரோடு அறுத்து எரிய வேண்டும் ?.கஷ்டம் தான்.முயற்ச்சி செய்தால் குறிப்பிட தக்க மாற்றம் கொண்டு வரலாம் நகராட்சியில்.செய்வார்களா ? என்று கேள்வி குறி போட்டு இச்செய்தி குறித்த என் கருத்தை சொல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நகராட்சி தலைவி மட்டும் எடுத்து விட முடியாது அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு இருந்தால் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும் ஊழலை ஓரளவாவது கட்டு படுத்த முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. பதற வைக்கும் பாகம் ஓன்று.
posted by musthak ahamed (goa) [23 April 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 18449

பாகம் ஒன்றே இப்படி பதற வைக்குதே..............
முழு தணிக்கை அறிக்கையும் படித்துமுடித்தால்..........

வாழ்த்துக்கள் காயல்பட்டணம்.காம் ........

அப்படியே அந்த செக் மோசடியையும் ஒரு follow up கட்டுரையாக தந்தால் புண்ணியமாக போகும்...........

முஸ்தாக் அஹ்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நகராட்சி ஊழல்கள்!!
posted by Salai. Mohamed Mohideen (USA) [23 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18453

உங்களுடைய இது தொடர்பான முந்தைய செய்தி (எண் # 8331) படி, கடந்த இரண்டு (?) நகர்மன்ற நிர்வாகத் தலைமையில் (2001 - 2009 ) கிட்டத்தட்ட 6.79 கோடி தணிக்கை தடை (Audit Objection) யில் அதாவது ஊழல் செய்ய பட்டுள்ளது. இதற்கு அதக்கு பொறுப்பான அதிகாரிகள் மட்டும் தான் காரணமா... இவைகளை சரியாக கண்காணிக்க தவறிய நகர்மன்ற நிர்வாகத் தலைமை மற்றும் அப்போதைய உறுப்பினர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரண மில்லையா?

6.79 கோடியை (குறிப்பாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 2.5 லட்சத்தை) இவ்வறிக்கை குறிப்பிடும் 'ஒன்றிரண்டு' பேர் மட்டும் பொறுப்பாளிகளாக இருக்க முடியாது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கூட்டமே நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அவர்களின் ஆதரவு இல்லமால் நிச்சயம் இது போன்ற காரியங்கள் நடந்திருக்காது... தங்களுக்கு ஆதாயம் எதுவும் கிடைவில்லேன்றால் இதனை அவர்கள் நடத்த விட்டிருக்கவும் மாட்டார்கள். ஒருவேளை அப்படி எதுவும் இல்லையென்றால், தன்னை நம்பி ஒப்படைக்க பட்ட நகர்மன்ற நிர்வாகக் கோளாறா??

இது பற்றி நீங்கள் கூறும் 1600 பக்கங்களை கொண்ட அவ்வறிக்கை ஏதாவது சொல்கின்றதா? அப்படி எதுவுமிருந்தால் தெரியப் படுத்தவும். முடிந்தால் 1600 பக்கங்களை கொண்ட அவ்வறிக்கையை வாசகர்கள் பார்வைக்கு தரவும்.

இந்த அறிக்கையே ஆதாரமாக கொண்டு இத்தனை வருடத்தில் அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா அல்லது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை???

முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தற்போதைய நகர் மன்றம், இதனை ஆதாரமாக கொண்டு இதற்க்கு முந்தைய மற்றும் இன்னும் அதே பணியில் இருக்கும் மக்கள் வரிப்பணத்தை சுரண்டி திண்டு கொழுத்தவர்கள் / கொழுப்பவர்கள் (.... அதற்க்கு காரண கர்த்தாக்கள்) தங்கள் வயிற்றை ஹராமான பணத்தை கொண்டு நிரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா???

ஒருவேளை அதற்க்கான வாய்ப்புகள் இருந்தால் நமது நகர் மன்றம் தயங்கு கின்றதா?? ஒரு வேளை அரசாங்கமும் நகர்மன்றதால் முடிய வில்லையென்றால் நமதூரில் உள்ள தன்னார்வ சமூக அமைப்புகளால் முடியுமா என்று பல கேள்விகள் மனதில் எழுகின்றது. இதற்க்கு விடையளிக்க போவது யாரோ???

(தொடரும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நகராட்சி ஊழல்கள் (தொடர்ச்சி)
posted by Salai Mohamed Mohideen (USA) [23 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18457

நமது இணைய தளம் தங்களது சாட்டையை முழுவீச்சில் சுழற்ற ஆரம்பித்து விட்டார்கள் போல் தெரிகிறது. இன்னும் என்னென்ன நாற்றம் எடுக்க போகின்றதோ. இத்தனை வருடத்தில் எவ்வளவோ கோடி ஊழல்கள் நடந்தும் எதுவுமே வெளிவராத நிலையில்... பாவம் ஒருத்தர் மட்டும் ஏதோ 'செக்' மோசடியில் சப்பையாக (?) சிக்கி 'டாக் ஒப் தி டவுன்' ஆக பேசபட்டார்.

இது விசயத்தில் நமது 'மெகா' அமைதி காண்பிக்கிறதே. இவைகளெல்லாம் அவர்கள் எல்லைக்குள் வரவில்லையோ? ஒரு வேளை மெகா மற்றும் மற்றும் தன்னார்வ சமூக நல அமைப்புகள் நம் இணைய தளம் வெளிக்கொணரும் ஊழல்கள் உண்மையாக இருப்பின், அவர்களுடன் சேர்ந்து... நீங்களும் சாட்டையை சுழற்றினால் தான் ஊழல் பெருச்சாளிகளுக்கு சரியான சவுக்கடி கிடைக்கும்.

அதுவரை, நீங்கள் தோண்டித்துருவி வெளிக்கொணரும் ஊழல்கள்... அதனை புரிந்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப் படாதவரை, இவைகளைனைத்தும் 'விழலுக்கு இறைத்த நீர்' மற்றுமன்றி வாசகர்கள் உணர்வுகளைத் தூண்டும் (BP) வெறும் செய்திகள் / தொடர்கள்... அவ்வளவுதான்.

மேலும் இது விசயத்தில் சம்பந்த பட்டவர்கள், என்னதான் நீங்கள் ஊழல் குற்ற சாட்டுகளை வெளிக்கொனர்ந்தாலும், வாசகர்கள் கருத்து என்ற பெயரில் குமுறினாலும்... 'நம் மீது எவர் நடவடிக்கை எடுக்க முடியும் அல்லது எடுக்க போகின்றார்கள்' என்று மிகச்சாதரணமாக இருப்பார்கள் அல்லது இதை பொருட்படுத்தவே மாட்டார்கள்.

ஒருதலை பட்சமின்றி, இது போன்ற சாட்டையை, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நகர்மன்ற தலைமையிலும் ஏதாவது ஊழல்கள் (இது வரை எதுவும் நடந்துள்ளதா???) நடந்தாலும் சுழற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.

"தீயது நடந்தால் கைகளால் தடுங்கள்; இல்லாவிட்டால் வாயால் தடுங்கள்; அதுவும் முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள். இதுதான் ஈமானின் கடைசி நிலை" என்ற நபிமொழிக்கு ஏற்ப செயல்படுங்கள்

தணிக்கை அறிக்கையை ஆதாரமாக கொண்டு, இது போன்றவர்களை அவர்களின் பெயர், வகித்த பதவிகளை தைரியமாக வெளியிட்டு விட்டீர்கள். ஆனால் திரை மறைவில் புது பைப் / கரண்ட் கனக்சன் ரோடு கான்ட்ராக்ட் என்று லஞ்சத்தை அன்பளிப்பாக கேட்க்கும் 'மற்றவர்கள்' மீது சாட்டையை சுழற்ற போவது விக்கி லீக்ஸ் போன்று நமது இணைய தளங்களா அல்லது சமூக அமைப்புகளா அல்லது பொது மக்களா... பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஹிஜாஸ் மைந்தன் பாணியில் ஒரு குசும்பு :- ஏற்க்கனவே சில மணி நேரங்கள் தான் கரண்ட் இருக்கின்றது... எப்பவாவதுதான் தண்ணியும் வருகின்றது. அநேகமாக இளையதள நிர்வாகிகள்/அங்கத்தினர்கள் வீட்டிற்க்கு இவைகள் முற்றிலுமாக இன்று முதல் வராமல் போகலாம் (தடை செய்ய படலாம்). ஏன், தேவையில்லாத சில மெயில்கள் அலைபேசி அழைப்புகள் கூட வரலாம். நீங்கள் உடனே அதற்க்கும் இச்செய்தியின் வெளிப்பாடே என்று தவறாக மட்டும் எண்ணி விடாதீர்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. நாற்காலிக்கு போட்டி போடும், நாங்கெல்லாம்???
posted by Firdous (Colombo) [24 April 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18464

கடந்த நகராட்சியில் தலைவர், உப தலைவர் நகர்மன்றதிற்கு வரவில்லையென்றால், நகரத்தந்தை நாற்காலிக்கு போட்டோ போட்டிதான்! தங்களது வேலையை பார்கிறார்களோ இல்லையோ, அதிகாலையில் வந்து நாற்காலியில் அமர்ந்து கொள்வார்களாம். இப்படி அடித்து கொண்டவர்கள்தான் உறுப்பினராக இருந்துள்ளார்கள். நான் மிகை படுத்தி கூறவில்லை. இதை கண்ணுற்ற எனது நண்பன் மூலம் அறிந்து கொண்டேன்.

மதிப்பிற்குரிய முன்னால் உறுப்பினர் திருதுவராஜின் முயற்சியாலும், தலைவர் அவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்கி திருதுவராஜ் (EB யில் வேலைப்பர்த்தவர்) அவர்கள் தணிக்கை செய்ததாலும் கடந்த நகரமன்றத்தின் இறுதி காலகட்டத்தில் லைட் செலவுகள் 4.5 லட்சமாக குறைக்கப்பட்டது. முன்னால் தலைவர் அப்பழுக்கற்றவர். நகர்மன்றத்தை சூரையாடியவர்களுக்கு மத்தியில் தனது சொந்த பணத்தை நகர்மன்ற செலவுகளுக்காக செலவு செய்தவர். அப்படிப்பட்ட தலைவர் நகர்மன்றத்தில் அதிகமாக வருகை புரிந்திருந்தால் எவ்ளவோ ஊழல்கள் நடக்காது வண்ணம் தடுதிருந்து இருக்கலாம். நமதூர் மக்களின் வரிப்பணம் விரயமானதையும்!

தற்போதைய நகர்மன்ற தலைவர்கோர் வேண்டுகோள். நீங்கள் தவறாது நகர்மன்றதிர்க்கு வருவதை வலை ஊடக மூலமாக அறிகின்றோம். அதேபோன்று ஊழலை ஒழிப்பதில் முனைப்பாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் கொஞ்சம் கண்ணயர்ந்தாலும் November 31, February 30 க்கு பொருள்கள் வாங்கியதாக ஏட்டில் பதியப்படும். கவனம் தேவை! ஏனென்றால் தற்போதைய உறுபினர்களில் பெரும்பாலோர் உப தலைவரை தேர்ந்தேடுப்பதர்க்காக ஜனநாயகத்தை அடகு வைத்தவர்கள் என்பது ஊரறிந்த இரகசியம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகராட்சி தணிக்கை அறிக்கை:...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [24 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18475

தற்போதைய நகர்மன்ற நிகழ்வுகள் வலைத்தளம் மூலம் வெளியிட படுவதால், நகரமன்றத்தின் செயல்பாடுகள் வெளிபடையாக தெரிய வருகின்றது.

கடந்த நகராட்ச்சியில் நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேடுகள் மிகுந்த வருத்தத்தை தருகின்றது.

"முன்னால் தலைவர் அப்பழுக்கற்றவர். நகர்மன்றத்தை சூரையாடியவர்களுக்கு மத்தியில் தனது சொந்த பணத்தை நகர்மன்ற செலவுகளுக்காக செலவு செய்தவர்." இது ஊர் அறிந்த உண்மை, இருப்பினும் ஒரு சில உறுப்பினர்கள் செய்த தவறு, முன்னாள் தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றது.

தற்போதைய நகர்மன்ற தலைவருக்கு ஒரு வேண்டுகோள், "உஷாரா இருங்க........"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் இதமழை!  (24/4/2012) [Views - 2691; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved