காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியின்போது ஒன்று சேர்க்கப்படும் குப்பை கூளங்களை அந்தந்த இடத்திலேயே எரித்துவிட்டுச் செல்லும் பழக்கம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் காலங்காலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து, காயல்பட்டணம்.காம் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இன்றளவும் இந்நிலை தொடரவே செய்கிறது. ஒருபுறம் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கெதிராக நகராட்சி சுகாதார ஆய்வாளர் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மறுபுறம், ப்ளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை நடுவீதியில் நகராட்சி ஊழியர்களே எரித்துச் செல்வது வேடிக்கையாக உள்ளது.
இன்று காலையில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இது தொடர்பான அலுவலர்களை அழைத்து கண்டித்ததாகவும், இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்றும் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
தகவல் மற்றும் படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன். |