காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், மாதந்தோறும் கடைசி புதன்கிழமைகளில் மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத கூட்டம், 25.04.2012 அன்று (நாளை) மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
1. வேகத்தடை..நினையூட்டல் posted byMohamed Adam Sultan (kayal patnam)[25 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18506
மக்கள் குறை தீர்க்கும் முதல் கூட்டத்திலேயே அலியார் தெரு மக்கள் சார்பாக ,ஆய்ஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி அருகிலுள்ள நான்குதிசைவழிசெல்லும்சந்திப்பில்வேகத்தடைஅமைத்துதரும்படிவிண்ணப்பித்திருந்தேன்.
விண்ணப்பித்த அடுத்த நாளே அச்சந்திப்பில் இரு வாகன விபத்துக்கள் நடைபெற்றன ..ஒரு விபத்து சற்று அபாயகரமாகவே அமைந்தது.
அல்லாஹ் காப்பாற்றினான். உயிருக்கும் உடலுக்கும் பெரும் சேதமில்லாமல் தப்பித்தார்கள்.
இதை அறிந்தும் , அந்த வார்டு உறுப்பினர் முதல் நகராட்சி வரை உடனடியாக வேகத்தடை அமைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.இன்று வரை இல்லை.
ஊரில் ஒன்றிரண்டை தவிர அனைத்து தெருவிலுள்ள அனைத்து வேகத்தடைகளும், அதிகாரிகளின் ஆணையும், அனுமதியும் பெறாமல் அவரவர் விருப்பபடி முறையற்ற முறையில் வேகத்தடை அமைத்திருக்கிறார்கள்.
இதில் சில வேகத்தடை, வேகத்தை குறைப்பது போல் அல்ல, உயிரை பறிப்பது போல் அமைந்து இருக்கிறது. .
இப்படிப்பட்ட முறையற்ற வழியை பின்பற்ற கூடிய சூழ்நிலையைத்தான் நமதூரின் பெரும் பகுதியில் பார்க்க முடிகிறது. .
இப்படிப்பட்ட வழியை நானும் பின்பற்றினால் விதிகளுக்கும் ஒழுக்கத்திற்கும் முரணாக நடக்கும் அவர்களுக்கும் எனக்கும் வித்யாசம் தெரியாமல் ஆகிவிடும்
ஆகவே ,நகராட்சியில் இத்துறை சம்பத்தப்பட்டவர்கள் என்னுடைய அணுகுமுறையை புரிந்துகொண்டு
நினையூட்டல் விண்ணப்பதிற்கு வேலை வைக்காமல்
இம்மக்கள் மன்றத்தில் நான் தரும் இந்த விளக்கத்தையே நினயூட்டலாக எடுத்து கொண்டு உடனடியாக வேகத்தடை அமைத்து தருமாறு வேண்டுகிறேன் .அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
2. Re:ஏப்.25இல் நகராட்சியில் மக... posted byMohamed Adam Sultan (kayal patnam)[26 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18520
என்னுடைய முந்திய கமண்டை எழுதி post செய்த சில மணி நேரத்தில் என்னுடைய 4 வயது தங்கச்சி மகனை ஒரு பைக் வேகமாக வந்து அதே [அலியார் தெரு நார் வழி சந்திப்பு ] இடத்தில் மோதி பையன் தூக்கி எரியபட்டு, விலா எலும்பு பகுதி, கை கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு உடனேயே KMT க்கு தூக்கிசென்றோம். என்ற வருத்தமான செய்தியையும் இங்கு [மக்கள் மன்றத்தில்] பதிவு செய்கிறேன்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
மக்கள் குறை தீர்க்கும் முதல் கூட்டத்திலேயே அலியார் தெரு மக்கள் சார்பாக ,ஆய்ஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி அருகிலுள்ள நான்குதிசைவழிசெல்லும் சந்திப்பில்வேகத்தடை அமைத்துதரும்படி விண்ணப்பித்திருந்தேன் (copy paste)
அங்கு வேகத்தடை மட்டும் போதாது ,
சகோதரர் சொன்னது போல , ஆய்ஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி அருகில் அந்த தெரு மக்கள் குப்பையை கொட்டுகிறார்கள் ,
அங்கு சுகாதார கேடு , அணைத்து பள்ளி கூட பேருந்து மற்றும் பள்ளி சிறுவர்கள் அந்த இடத்தில இருந்து தான் பேருந்தில் ஏறுகிறார்கள்
இரவு நேரத்தில் நாய்களின் தொல்லை அந்த பக்கத்தில் தான்
கமெண்ட்ஸ் குடுத்த சகோதரர் வீட்டுக்கு அருகில் தான் இது எல்லாம் நடகின்றது ,
வேகத்தடை வைக்க நினைக்கும் சகோதரர் ,
தனக்கு சொந்த மான நிலத்தில் குப்பையை கொட்டு கிறார்கள் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம் ,
சுற்றுப்புற சூழலை பேனி பாது காத்து கொள்ளுங்க
நோய் அற்ற வாழ்வே , வாழ எல்லோரும் ஒத்துழையுங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross