வரும் மே மாதத்தில் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமையும், ஜூன் மாதத்தில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியையும், ஜூலை மாதத்தில் - நகரில் சுற்றுச்சூழல் மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில், உலக காயல் நல மன்றங்களின் அனுசரணையுடன் குறு நீள் ஓட்ட (மினி மாரத்தான்) நிகழ்ச்சியையும் நடத்திட கத்தர் காயல் நல மன்ற பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றோம்.
அன்புடையீர் அஸ்ஸலாமுஅழைக்கும் (வரஹ்).
பூங்காவில் பொதுக்குழு:
எமது கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர - 14ஆவது பொதுக்குழு கடந்த 13-04-2012 வெள்ளிகிழமை மாலை 04.00 மணி அளவில் wakra parkஇல் கூடியது. மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூட்டதிற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் முஹம்மத் முஹ்யித்தீன் இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் துணை தலைவர் ஹாஜி வி.எம்.டி.அப்துல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் எம்.என்.ஷாஹுல் ஹமீத், மன்றத்தின் 2011ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை தெளிவுற தாக்கல் செய்ய, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
அதனைத் தொடர்ந்து, மன்றச் செயலாளர் செய்யித் முஹ்யித்தீன், மன்றத்தின் ஆண்டறிக்கையை பின்வருமாறு சமர்ப்பித்தார்:-
2011ஆண்டிற்கான ஆண்டறிக்கை:
பள்ளிச் சீருடை இலவச வினியோகம்:
2011ஆம் ஆண்டு 200 ஏழை-எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 84,100 மதிப்பில் பள்ளிச் சீருடைகள், இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய இக்ராஃவின் நிர்வாக அதிகாரி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களுக்கு மன்றம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை:
2011ஆம் ஆண்டு இக்ராஃவின் ஒருங்கிணைத்த sponsorship திட்டத்தின்கீழ் கலை கல்லூரில் பயிலும் 7 மாணவ, மாணவிகளுக்கு ருபாய் 5,000 வீதம் மொத்தம் ருபாய் 35,000 வழங்கப்பட்டது.
இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்கு அனுசரணை:
இக்ராஃவின் நிர்வாக செலவினங்களுக்காக ருபாய் 15,000௦௦௦ வழங்கப்பட்டது.
சாதனை மாணவருக்கான பரிசுத் தொகையில் பங்களிப்பு:
இக்ராஃவின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போது பரிசளிப்பு வகைக்காக +2 வாழ்நாள் சாதனை மதிப்பெண் வகைக்கு ரூ.8,000/-வழங்கப்பட்டது.
CFFCக்கு நிதியளிப்பு:
நமதூரில் புற்று நோயின் காரணிகளை கண்டறிய துவக்கப்பட்ட CFFCக்கு ருபாய் 50,000௦௦௦ முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
புற்றுநோய் பரிசோதனை முகாமுக்கு ஒத்துழைத்தோருக்கு நன்றி:
நமது மன்றத்தின் முக்கிய திட்டமான புற்று நோய் விழ்ப்புணர்வு மற்றும் கண்டறியும் முகாம் தொடர்ந்து மூன்றாம் ஆண்டின் 3ஆவது மற்றும் 4ஆவது முகாம் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து ROSE GARDEN மற்றும் KMT HOSPITAL உதவியுடன் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இக்ராஃ நிர்வாகத்திற்கு மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள்.
CFFCக்கு கூடுதல் அனுசரணை:
மேற்கண்ட முகாமின் முடிவில் கத்தார் காயல் மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் சார்பாக, நகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறியும் செயல்திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் CFFC-க்கு கூடுதல் அனுசரணையாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது.
கே.எம்.டி மருத்துவமனைக்கு தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி:
நமதூர் KMT மருத்துவமனையில் OUT PATIENT WARD ல் நமது மன்றத்தால் வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ( WATER PURIFIER) நல்ல பயனுள்ளதாக இருப்பதால் அதே போன்று ஒன்றை ward பகுதிலும் வைக்கும் படி வந்த கோரிக்கையை அடுத்து ஹாங்காங் ஐக்கிய பேரவையுடன் இணைந்து வார்டு பகுதிலும் WATER PURIFIER வைக்கபட்டது.
மருத்துவ உதவிகள்:
நமது மன்றத்தின் முக்கிய திட்டமானது வரும் முன் காப்போம் என்ற போதிலும் பல்வேறு நபர்களுக்கு அவர்கள் ஏழ்மையைக் கருத்திற்கொண்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது.
கடற்கரை பயனாளிகள் சங்கத்திற்கு அனுசரணை:
நமதூரின் கடற்கரையை சுகாதாரமாகவும், கலாச்சாரத்தினை நிலை நாட்டவும் துவக்கப்பட்ட காயல் கடற்கரை பயனாளிகள் சங்கத்திற்கு உறுதுணையாகவும் அதன் ஆரம்பக்கட்ட பணிகளுக்காக ருபாய் 10,000௦௦௦ எமது மன்றம் ஆரம்பமாக வழங்கியது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் நகராட்சி தலைவி மற்றும் ஆணையரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கடற்கரை பயனாளிகள் சங்கதினறோடு இணைந்து எமது மன்றம் முன் வைத்தது.
வினாடி-வினா போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி:
கடந்த ஆண்டு நமது மன்றத்தால் நடத்தப்பெற்ற 2ஆம் ஆண்டு INTER SCHOOL QUIZ COMPETITION மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதற்க்கு மிகவும் உறுதுணையாக இருந்த KAYAL FIRST TRUST மற்றும் IQRA அமைப்பிற்கும், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தந்த QUIZ MASTER K.M.Z. மொகுதூம் முஹம்மது ஆகியோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
YUF நூலகத்திற்கு அனுசரணை:
நமதூரின், அனைத்துப் பகுதி பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நல்ல முறையில் செயல்பட்டுவரும் YUF நூலகத்திற்கு வேலை வாய்ப்பு மற்றும் கணினி மலர் வாங்குவதற்கு உதவி செய்யப்பட்டு வருகிறது.
காயிதேமில்லத் அமைப்பின் பள்ளி பாடப் புத்தகங்கள் வினியோகத்திற்கு அனுசரணை:
ஏழை-எளிய பள்ளி மாணவ-மாணவியருக்கு பள்ளி பாடப் புத்தகம் வழங்கும் வகைக்காக, காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்புக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
இவ்வாறு, மன்றச் செயலாளரால் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நடப்பு 14ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை வாசித்து, அவற்றை விளக்கி தலைமையுரையாற்றினார். நிறைவில், பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
கடந்த ஆண்டின் செயல்திட்டங்கள் இவ்வாண்டும் தொடரும்!
கடந்த ஆண்டு மன்றத்தால் செயல்படுத்தப்பட்ட,
*** பள்ளிச் சீருடை இலவச வினியோகம்
*** புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறியும் பரிசோதனை இலவச முகாம்
*** கலை கல்லூரியில் பயிலும் 7 மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்
*** இக்ராஃவின் நிர்வாக செலவினங்களுக்காக கடந்த ஆண்டைப் போன்று நிதி வழங்கல்
*** கடந்த ஆண்டைப் போன்று YUF நூலகத்திற்கு, நூற்கள் வாங்கிட அனுசரணையளித்தல்
*** INTER SCHOOL QUIZ COMPETITION - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியை நடத்தல்
உள்ளிட்டவற்றை, நடப்பாண்டிலும் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
மினி மாரத்தான் போட்டி:
புற்று நோய் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை விளக்கி, விழிப்புணர்வு MINI MARATHON - குறு நீள் ஓட்டப் போட்டியை, உலக காயல் நல மன்றங்களோடு இணைந்து நடத்திடவும், அதன் நிறைவில், சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாமை நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இதில் இணைந்து செயலாற்றிட இதுவரை இசைவு தெரிவித்துள்ள காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், காயல் நற்பணி மன்றம் - ரியாத் ஆகிய அமைப்புகளுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. இதில் பங்கு பெறக் கோரி, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி:
புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமை இவ்வாண்டு மே மாதத்திலும், நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியை ஜூன் மாதத்திலும், நகர சுற்றுச்சூழல் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வூட்டும் நோக்குடன் நடத்தப்படும் மினி மாரத்தான் போட்டியை ஜூலை மாதத்திலும் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இக்ராஃவின் பரிசுப் பட்டியலுக்கு பங்களிப்பு:
இக்ராஃவின் - சாதனை மாணவருக்கான பரிசு வழங்கும் திட்டத்தில் இணைவது என்ற செயற்குழு தீர்மானத்திற்கு இக்கூட்டம் ஒப்புதலளிப்பதோடு, அதன் கீழ், பின்வரும் பட்டியல் படி பரிசுகளை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது:-
+2 2nd RANK - RS.3,000
+2 3rd RANK - RS.2,000
10TH 1st RANK - RS 3,000
10TH 2nd RANK - RS 2,000
10TH 3rd RANK - RS 1,000
12th 1st ARABIC - RS 1,000
12TH 1st TAMIL - RS.1000
10th 1st ARABIC - RS 1,000
10TH 1st TAMIL - RS.1000
12th Record Break - RS.5,000௦௦௦
வேலைவாய்ப்பு தகவல் பரிமாற்றம்:
நமது மன்றத்தின் சார்பாக QATAR-இல் வேலை வாய்ப்பு தகவல்களை சென்னை - KCGC அமைப்பின மூலம் வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
B.E. MECHANICAL ENGINEERING , 6 YEARS EXPERIENCE IN SALES & MARKETING FIELD IN HVAC PRODUCTS என்ற விபரப்படியான வேலைவாய்ப்பிற்கு, காயல்பட்டினத்தைச் சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள், kwaqatar@gmail.com என்ற எமது மன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் C.V.யை 05.05.2012 தேதிக்குள் அனுப்பிட கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமண வாழ்த்து:
சமீபத்தில் திருமணம் முடிந்த மன்றத்தின் உறுப்பினர்களான அல்ஹாபில் முஹம்மது முகைதீன் மற்றும் பாதுல் அஷாப்க்கும் மன்றத்தின் சார்பாக இக்கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக, ஹாஃபிழ் நஸ்ருத்தீன் துஆ ஓத, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மழையால் போட்டிகள் நிறுத்தம்:
வழமை போல் சிறுவருக்கான போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |