பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் வரவு செலவு கணக்கினை தணிக்கை செய்யும் பொறுப்பு - உள்ளாட்சி நிதித் தணிக்கை
துறையிடம் அரசினால் வழங்கப்பட்டுள்ளது. காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - இத்துறையிடம் இருந்தே - பெற்றது.
பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் இவ்வுள்ளாட்சி மன்றங்களின் நிதி நிர்வாகம் குறித்த அறிக்கைகள் - மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவ்வறிக்கைகள் - ஒரு நகராட்சியில் காணப்படும் பொருளாதார குறைபாடுகளை மட்டும் அன்றி, இதர நிர்வாக குறைபாடுகள் குறித்தும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைப்பாடுகள் பல வகைப்படும். உதாரணமாக அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ள வரிகள் - வசூலிக்கப்படாமல் இருப்பது (உதாரணமாக காலி மனை
வரி, தொழில் வரி). இது உள்ளாட்சி மன்றத்திற்கு வருவாய் இழப்பு என்பதால் - அவ்வரியினை வசூல் செய்ய வேண்டிய அதிகாரியே அதற்கு
பொறுப்பு என தணிக்கை அறிக்கைகள் தீர்மானிக்கும். இழப்பு தொகை மீது தணிக்கை தடை விதிக்கப்பட்டு - சம்பந்தப்பட்ட அலுவலர் அதற்கான பதிலனை தெரிவிக்க கூறுகிறது. இது ஒரு வகையான குறைப்பாடு.
தேவைப்பட்டியல் இல்லாமல் பொருட்கள் கொள்முதல் செய்வது , பொருள் விநியோக ஆணை இல்லாமல் பொருட்கள் கொள்முதல் செய்வது,
வாங்கப்பட்டதாக கூறப்படும் பொருட்களை பதிவேடுகளில் வரவு வைக்காமல் இருப்பது, வாங்கப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் எவ்வாறு செலவு
செய்யப்பட்டது என்ற குறிப்புகள் பராமரிக்காமல் இருப்பது போன்றவை - கடுங்குறைப்பாடுகள் என கருதப்படுகின்றன. சில நேரங்களில் - அவை
முறைக்கேடுகள் என்றும் - தணிக்கை குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றன. இழப்பு தொகை மீது தணிக்கை தடை விதிக்கப்பட்டு - சம்பந்தப்பட்ட அலுவலர் அதற்கான பதிலனை தெரிவிக்க பணிக்கப்படுகிறார். மேலும் - சில சமயங்களில் இது குறித்து விரிவான ஆய்வு செய்யவும் தணிக்கை அலுவலர்கள் பரிந்துரைப்பதுண்டு.
இது போன்ற பல அம்சங்களை கொண்டதே தணிக்கை அறிக்கைகள்.
ஒவ்வொரு ஆண்டும் - மே மாதம் 15 தேதிக்குள் - ஒரு நகராட்சியின் கடந்த நிதி ஆண்டிற்கான வரவு - செலவு கணக்கு, தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். வரவு செலவு கணக்கு கிடைக்கப்பெற்ற 6 மாதங்களுக்குள் - உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை தனது தணிக்கை அறிக்கையை தயார் செய்து - சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்திற்கு அனுப்பவேண்டும். அவ்வாறு உள்ளாட்சி மன்றங்களுக்கு அனுப்பப்படும் தணிக்கை அறிக்கை - நகர்மன்ற கூட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வுசெயயப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அது குறித்த நகரமன்றத்தின் விளக்கத்துடன் - பதிலாக, தணிக்கைத் துறைக்கு இரு மாதங்களுக்குள் அனுப்பப்படவேண்டும். இது விதி. ஆனால் காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நடப்பது என்ன?
2007 - 2008 வரவு செலவு தணிக்கை அறிக்கையின் பகுதி 93 ...
தணிக்கை அறிக்கைகளுக்கு பதில்கள் பெறப்படாமை
அரசாணை எண் 145 ந.நி.கு.வ. (எம்.சி.உ.) துறை. நாள்: 5.03.02 இன் படி தணிக்கை அறிக்கைக்கான பதில்கள் தணிக்கை அறிக்கை கிடைக்கபெற்ற 2 மாதத்திற்குள் நகர்மன்ற ஒப்புதலுடன், தணிக்கை அலுவலகத்திற்கு அனுப்பப்படவேண்டும். ஆனால் கீழ்க்காணும் தணிக்கை அறிக்கைகளுக்கு மன்ற ஒப்புதலுடன் பதில்கள் பெறப்படாமலுள்ளது. இத்தணிக்கை அறிக்கைக்கான பதில்களை உடன் அனுப்பி வைக்கவேண்டும்.
வ.எண். | ஆண்டு | த/அ வெளியிடப்பட்ட கடிதம் எண் / நாள் |
1 | 1999 - 2000 | ந.க. எண் அ/2/2281/01/18.12.2001 |
2 | 2000 - 2001 | ந.க. எண் அ/2/1793/02/11.11.2002 |
3 | 2001 - 2002 | ந.க. எண் அ/2/1794/02/11.11.2002 |
4 | 2002 - 2003 | ந.க. எண் அ/2/2363/05/25.1.2006 |
5 | 2003 - 2004 | ந.க. எண் அ/2/1927/06/25.1.2006 |
6 | 2004 - 2005 | ந.க. எண் அ/2/1538/07/31.12.2007 |
7 | 2005 - 2006 | ந.க. எண் அ/2/235/09/25.2.2009 |
8 | 2006 - 2007 | ந.க. எண் அ/2/1170/09/27.8.2009 |
9 | 2007 - 2008 | ந.க. எண் அ/2/374/2010/26.3.2010 |
2008 - 2009 வரவு செலவு தணிக்கை அறிக்கையின் பகுதி 109 ...
தணிக்கை அறிக்கைகளுக்கு பதில்கள் பெறப்படாமை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை நாள் 2.10.2002 ன்படி தணிக்கை அறிக்கைகளுக்கான பதில்கள் நகர்மன்ற ஒப்புதல்களுடன் தணிக்கை அறிக்கை பெறப்பட்ட இரண்டு மாத காலத்திற்குள் தணிக்கை துறைக்கு அளிக்கப்படவேண்டும். இந் நகராட்சியால் கீழ்க்காணும் தணிக்கை அறிக்கைகளுக்கு உரிய காலத்திற்குள் பதில்கள் அளிக்கப்படவில்லை.
வ.எண். | ஆண்டு | த/அ வெளியிடப்பட்ட கடிதம் எண் / நாள் |
1 | 2005 - 2006 | ந.க. எண் அ/2/235/09/25.2.2009 |
2 | 2006 - 2007 | ந.க. எண் அ/2/1170/09/27.8.2009 |
3 | 2007 - 2008 | ந.க. எண் அ/2/374/2010/26.3.2010 |
இவ்வாறு காயல்பட்டினம் நகராட்சி குறித்த தணிக்கை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
[தொடரும்] |