பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை
செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - பெற்றுள்ளது.
மொத்தம் சுமார் 1600 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கைகள் - பல அரிய தகவல்களை வழங்குகின்றன. அவைகளில் உள்ள முக்கியமான தகவல்களை - தொடராக காயல்பட்டணம்.காம் வெளியிட உள்ளது.
அத்தொடரின் மூன்றாம் பாகமான இப்பாகத்தில் - பிளிச்சிங் பவுடர் மற்றும் இதர பொருட்கள் வாங்கியதில் - முறைக்கேடு நடந்ததாக - காயல்பட்டினம் நகராட்சியின் 2009 (ஏப்ரல் - டிசம்பர்) வரவு செலவு தணிக்கை அறிக்கை கூறும் தகவலை காணலாம்.
அவ்வறிக்கையின் பத்தி 45 - ரூபாய் 1,10,455 மதிப்பில் பொருட்கள் வாங்கப்படாமலேயே பொருட்கள் வாங்கப்பட்டதாக
செலவுகாட்டப்பட்டதாக குற்றம்சாட்டுகிறது. அதற்கு பொறுப்பாக நகராட்சியின் அப்போதைய சுகாதார ஆய்வாளர் திரு து.தியாகராஜன் மற்றும் மற்றும் அப்போதைய செயல் அலுவலர் திரு ஜே.எம். அஹமத் ஆரூண் ஆகியோரை அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2009 (ஏப்ரல் - டிசம்பர்) வரவு செலவு தணிக்கை அறிக்கையின் பகுதி 45 ...
பிளிச்சிங் பவுடர் மற்றும் இதர சுகாதாரப் பொருட்கள் வாங்கியது - இருப்பு மற்றும் பயன்பாட்டு விபரம் காண்பிக்கப்படவில்லை - கடுங்குறைப்பாடு - இழப்பு ரூ. 1,10,455/-
தணிக்கையாண்டில் இந்நகராட்சியில் கீழ்க்கண்ட விபரப்படி நாகர்கோயில் ரேவதி டிரேடர்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுகாதாரப் பொருட்கள் வாங்கியதாக தொகை ரூ.1,10,455/- செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரிசை எண் | வங்கி செலவுச் சீட்டு | தொகை ரூ |
1 | 24/22.04.2009 | 70,455 |
2 | 132/04.08.2009 | 40,000 |
| மொத்தம் | 1,10,455 |
இச் செலவீனத்தால் நகராட்சிக்கு நிதி இழப்பினை ஏற்படுத்தக்கூடிய கடுங்குறைபாடுகள் கீழ்க்கண்ட விபரப்படி தணிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.
1. சுகாதார ஆய்வாளரிடமிருந்து தேவைப்பட்டியல் பெறப்படவில்லை
2. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுகாதாரப் பொருட்கள் வாங்கியமைக்கு துணை செலவுச் சீட்டு ஏதும் காண்பிக்கப்படவில்லை
3. என்னென்ன சுகாதாரப் பொருட்கள் வாங்கப்பட்டது என்ற விபரம் இல்லை
4. சுகாதாரப் பொருட்களுக்கான பதிவேட்டில் இவைகள் வரவாக்கப்படவில்லை மற்றும் பயன்பாட்டு விபரம் இல்லை
5. தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமைக்கு ஒப்புகையும் பெறப்படவில்லை
இதிலிருந்து இச்செலவீனம் உண்மையிலேயே மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது. எனவே முறைகேடாக செலவிடப்பட்டு நகராட்சிக்கு இழப்பாகி உள்ள தொகை ரூ. இதற்கு பொறுப்பான அலுவலர்களிடம் ஈடு செய்யப்படவேண்டும். இக்குறைப்பாட்டிற்கு சுகாதார் ஆய்வாளர் திரு து.தியாகராஜன் மற்றும் செயல் அலுவலர் திரு ஜே.எம். அஹமத் ஆரூண் ஆகியோர் பொறுப்பாவார்கள்.
இவ்வாறு அத்தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
[தொடரும்] |