விவசாயிகள், மீனவர்களுக்கான பயனுள்ள தகவல்களைப் பரிமாறும் நிகழ்ச்சியாக, காயல்பட்டினம் கோமான் தெருவில் இன்று காலை 10.30 மணியளவில் உழவர் பெருவிழா நடைபெற்றது.
நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் விழாவிற்குத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.உத்தண்டராமன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, விழாவின் நோக்கம் குறித்து விளக்கினார்.
மீன் வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, கால்நடை மருத்துவர்களான டாக்டர் ரோஜர், சந்திரா, வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் ஆறுமுகம், வேளாண்மைத் துறை வணிக அலுவலர் மணிகண்டன், திருச்செந்தூர் உதவி வேளான் அலுவலர் சு.சுப்பிரமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்களான எஸ்.ஐ.ரஃபீக், ஹாஜி எல்.எஸ்.அன்வர், நகர்மன்ற உறுப்பினர் சாமு ஷிஹாப்தீன், இல்யாஸ் அஹ்மத், அதிமுக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மு.ராமச்சந்திரன், நகரச் செயலாளர் செய்யது காசிம் ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்விழாவில், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|