Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:49:22 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8375
#KOTW8375
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 27, 2012
குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி ஷேக் மதார் மறைவுக்கு குவைத் கா.ந.மன்றம் இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3316 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி ஆகிய ஜும்ஆ பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி எஸ்.ஏ.ஷேக் மதார், 26.04.2012 அன்று (நேற்று) இரவு 07.30 மணியளவில் சென்னையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.00 மணியளவில் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குவைத் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.எம்.ஹஸன் மவ்லானாவின் தந்தையான அன்னாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

பழகுதற்கினியவரும், பாசத்திற்குரியவரும், இன்முகத்துக்கு சொந்தக்காரரும், இறைப்பணிகளை தன் வாழ்நாள் முழுதும் நிறைவாகச் செய்தவரும், எங்கள் குவைத் காயல் நல மன்றத்தின் கண்ணியத்திற்குரிய தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹஸன் மவ்லானா அவர்களின் தந்தையுமான அல்ஹாஜ் எஸ்.ஏ.ஷேக் மதார் என்ற மதார் ஹாஜியார் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து நாங்கள் மிகவும் துயருற்றோம்.

அன்னாரின் நல்லறங்கள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் முழுமையாக கபூல் செய்து, அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அன்னாரின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை வெற்றிகரமானதாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியை அவர்களுக்கு நற்கூலியாக ஈந்து, நபிமார்கள், ஷுஹதாக்கள், ஸித்தீக்கீன்கள், ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் ஒன்றிணைத்து வைப்பானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் எம் மன்றத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹஸன் மவ்லானா அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... அவர்கள் யாவருக்கும் எங்கள் மனமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்று எம் மன்றத்தின் நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஸலாமுரைக்கிறோம்.


இவ்வாறு, குவைத் காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. انا لله وانا اليه راجعون
posted by M.S.Kaja Mahlari (Singapore.) [27 April 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 18574

மர்ஹூம் அவர்களின் பிழைகளை ,குற்றம் ,குறைகளை பொறுத்தருளி ,ஜன்னத்துல் பிர்தொவ்செனும் சுவனத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கி அருள்வானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:குத்பா பெரிய - சிறிய பள்ள...
posted by T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244) [28 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18575

அஸ்ஸலாமு அ;லைக்கும்! ஹாஜி எஸ் ஏ ஷெய்ஃக் மதார் அவர்கள் மரணம்.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்

என் அன்பிற்கினிய 5௦ வருடகால நன்பர் ஹாஜி ஷேக் மதார் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து கவலையும் திடுக்கமும் அடைந்தேன் . பழகுவதற்க்கு ள்ள பண்பான ஒரு நல்ல மனிதர். கழா கத்றின் கட்டுப் பாட்டில் சபூற் செய்து துஆ செய்து கொள்கிறேன். அல்லாஹும்மங் ஃபிற் லஹூ வர்ஹம்ஹூ. குடும்பத்தார் களுக்கும் குறிப்பாக தம்பி மத்தீன் அவர்களுக்கும் எனது இரங்கலையும் தெரிவித்து உங்கள் அனைவருக்கும் சபூற் எனும் பொறுமையும் தந்தருள 2 ரகஅத்து நஃபிலும் தொழுது துஆ வும் செய்கிறேன்.. நீங்களும் இவ்விதமே துஆ செய்து கொள்ளுங்கள்.

1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மைய்யித்தின் இஸ்லாமிய சட்ட திட்டங்கள். (நம் தமிழ் நாட்டில் நடப்பவை)

மையித்துக்கு ஃபற்ழ் நாலு. 1. மரணம் உறுதியான உடன் குளிப்பாட்டுவது. 2வது. உடன் கஃபனிடுவது. 3வது. உடன் தொழவைப்பது. 4வது. உடன் அடக்கம் செய்வது. இந்நாலு பர்ழையும் தொடர்ந்து செய்ய வேண்டியதும் ஸுன்னத்தாகும்..

1. மையித்தைக் கஃபனிட்டபின் ” தீதாற் ” என்னும் மக்கள் பார்வைக்காக வைப்பதில் மையித்தை அடக்க சுணக்குவதில் ரெம்ப எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது கண்டிப்பாக இருக்கவேண்டும் . மையித்தை கஃபனிட்ட பின்பு சரீ அத்தில் சொல்லப்பட்ட காரணம் இன்றி “ தீதாற் “ என்ற மக்கள் பார்வைக்காண காரியத்துக்காக சுணக்குபவர்களுக்கும்,அதற்காகப் பொருந்திக் கொள்பவர்களூக்கும் .அதனை தடுக்காதவர் களுக்கும் மிகுந்த குற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

.யாரும் மையித்தைப் பார்த்தால் அதன்பால் ஓத வேண்டிய துஆ. அல்லாஹும்மங்ஃபிற் லி ( மற்ஹூமின் பெயர் -உதாரணம்- லி அப்துல்லாஹ்) வற் ஃப உ தறஜதஹு ஃபில் மஹ்திய்ஈன் வ அஃகுலிஃபுஹு ஃபீ உக்கூலிஹீ ஃபில் ஙாஃபிலீண் வங்ஃபிற் லனா வ லஹூ யா றப்பல் ஆலமீன். . வஃப்தஹ் லஹு ஃபீ கப்றிஹி, வனவ்வற ஃபீஹி-

மற்ஹூமின் வீட்டுக்காறர்கள் முதன் முதலில் மிக முக்கியமாக செய்யவேண்டிய அமல்கள்

ஒருவர் மரணித்தது உறுதியானால் உடனிருப்பவர்கள் 1.உடனடியாக மையித்தின் இருகண்களின் இமைகளையும் கசக்கி மூடவேண்டும்.

2.நாடியைச் சுற்றி தலையையும் சுற்றி ஒரு (நாடிக்கட்டு)கட்டவேண்டும்.

3.கைகால் களை ஓரிரு தரம் நீட்டி, மடக்கி கையை தக்பீற் கட்டுவது போல் தொப்புழின் அடுத்தாற்போல் நெஞ்சுக்குக் கீழ் இருக்கும்படி வைக்க வேண்டும்.

4. கால்களை ஒன்று சேர்த்து இருகால் பெரு விரல்களையும் ஒன்றிணைத்து லேசாக ஒரு கட்டு பக்கம் 2 கட்ட வேண்டும் இப்படி செய்வது மையித்தின் உடல் உரு மாறாமல் அழகாக இருக்கும்.

5. நார் கட்டில் போன்ற உயரமான (கீழே தண்ணீர் வடியும் படியான அதிகமான ஓட்டைகள் உள்ள) ஒரு கண் கட்டிலில் மையித்தை (தலை கிப்லா வுக்கு எதிர் திசையிலும்) கால் கிப்லா பக்கமும் அமையும் படியாக கிடத்தி வைக்கவேண்டும்.

6.கசப்பு மாற்றும் முறைகளை தெரிந்து, அதனை செய்வது மிக மிக நல்லது.

7.ஒரு (வெள்ளைத்) துணியால் உடல் பூரா மூடி, தேவைக்கு மட்டும் திறந்து பார்க்கும் அமைப்பில் வைக்க வேண்டும்.

8.கட்டிலின் கால் களின் வழியே பூச்சி.எறும்புகள் ஏறி மய்யித்துக்கு இடஞசல்வராமல் தடுக்கவேண்டும். அதற்காக நாலு சிறு தட்டைகளில்85 தண்ணீர் ஊற்றி அதினுள் கட்டிலின் கால்களும் உள்ளிலிருக்கும்படியாக அமைக்க வேண்டும். (இக்காலங்களில் டெட்டோல்,டெட்டெர்ஜெண்ட்,கெமிக்கல் மருந்துள்ள- சாக் பீஸ் களும், ப்ரெஷ்ஷர் ஸ்ப்ரேகளும்உள்ளன) .

9.துர்வாடைகளிருந்தால், வரும் மக்களின் வெறுப்பான ,அதிருப்தியினை போக்க மையித்து வீட்டாரின் வசதிப்படி சாம்பிரானி .சந்தனப்புகை ஊதுபத்தி றூம்- ஸ்ப்றே இவைகளை பாவிக்கலாம்.

10.நமக்கு நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு உடனடியாக நேரில் வெப் ஸைட், அல்லது மொபைல்,ஸெல் ,டெலிஃபோன் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.

11.அடக்கும் நேரம், 12.அடக்கும் இடம் 13.தொழ வைக்கும் இமாம்,இவைகளை மஷூறா அடிப்படையில் முடிவெடுத்து. பின் மஹல்லா. ஊர், உலக மக்களுக்கும் அறிவிப்பு செய்யலாம்.

14. அடக்கப்படும் மைய வாடியின் புனிதத் தண்மைகள் அறிந்த பின், அதன் நிர்வாகிகள் அனுமதி பெறவேண்டும்,(இக்காலங்களில் ஹறாமான ஆக்ரமிப்பு செய்யப்பட்ட மையவாடிகளும் ஊரில் காணப்படுகிறது)

15. அனுபவமிக்க கஃபன் உடை கிழிப்பவர்கள்,குறிப்பாக இதற்கென ஏற்பாட்டில் இருக்கும் மு அஸ்தின் மார்கள்,மையித்து தொழுகை தொழவைக்கும் இமாம்கள், குழி வெட்டும் நஃபர்கள் இவர்களுக்கும் முறையானபடி உடனடி முன் அறிவிப்புக்கள் செய்து அழைத்துவிட விடவேண்டும்.

15.A.இக்காலங்களில் பள்ளி லவ்ட் ஸ்பீக்கர், தந்தி.கடிதம்,கேபிள் T.V., இண்டெர்நெட், இவகளை தம் தம் வசதிப்படி அறிவிப்புகள் செய்ய உபயோகம் பண்ணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மையித்துக்கு சம்மந்தப்பட்ட மேற்சொன்ன ஃபற்ழுகளையும் மற்றும் அநேகமான, சுன்னத்தான அமல்களையும் முறையான உலமாக்களிடமோ, முறைப்படி எழுதிய புத்தகங்களைப் பார்த்தோ ஒரு முஸ்லிம் விவரமாக அறிந்து கொள்வது ஃபற்ழ் எனும் கட்டாயக்கடமையாகும்.

1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
156- 2 الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.ِ 4:78 أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ 4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ 20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம், இவ்வண் :;- மர்ஹூம்.தைக்கா முத்துவப்பா ஆலிம் அவர்கள் குமார்ர். தைக்கா மத்துல்லாஹ்/காயல்பட்டணம்.போன்280852=(இதனை காப்பி(ஜெராக்ஸ்)எடுத்து மற்றவர்களுக்கும் விநியோகம் செய்து ஃதவாபை பெறுங்கள்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:குத்பா பெரிய - சிறிய பள்ள...
posted by Mohamed Ali (Kuwait) [28 April 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 18578

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! பொறுமையை தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:குத்பா பெரிய - சிறிய பள்ள...
posted by Lebbai (Riyadh) [28 April 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18579

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து, சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடும் மக்கள், குடும்பத்தார்கள், உற்றார்- உறவினர்கள், அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஷப்ருன் ஜமீல் என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம். துஆ செய்தவனாக,

முஹம்மத் லெப்பை S.M. (சட்னி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:குத்பா பெரிய - சிறிய பள்ள...
posted by SUPE IBRAHIM. S.H. (RIYADH - K.S.A.) [28 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18581

"அஸ்ஸலாமு அலைக்கும்."

அன்னாரின் பிரிவால் வாடும் எங்கள் பாசமிக்க நண்பர். பொறியாளர்,அல்ஹாஜ் எஸ்.எம்.ஹஸன் மவ்லானா, டாக்டர். செயுது அஹமத், தம்பி. மதீன், அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... அவர்கள் யாவருக்கும் எங்கள் குடும்பத்தின் சர்பஹா அஸ்ஸலாமு அலைக்கும்.

அலலாஹ் அவர்களின் பாவப் பிளைஹளை பொருத்து, மேலான சுவன பதியில் இடம் பெற எல்லோர்ஹளும் பிராத்தனை செயோவோமாஹ ஆமீன்!!!]

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பதினர்ஹல்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்.சார்பாக,சட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான் (ஜித்தா,சவுதிஅரேபியா.. ) [28 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18592

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி ஆகிய ஜும்ஆ பள்ளிகளின் முத்தவல்லியும், எங்கள் முஹியதீன் பள்ளியின் முன்னோடியுமான கண்ணியத்திற்குரிய ஹாஜி எஸ்.ஏ.ஷேக் மதார் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இன்னா லில்ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லறங்கள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் முழுமையாக ஏற்று பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அன்னாரின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை வெற்றிகரமானதாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியை அவர்களுக்கு வழங்கிடுவானாக அல்லாஹ் ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் மக்கள் ,மருமக்கள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் வாடும்அனைவருக்கும் எங்கள் பேரியத்தின் சார்பாக ஸலாமுரைக்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும்.

ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் மற்றும் பொதுநல பேரவை. ( உதயம்;1985 ) குத்துக்கல் தெரு,காயல்பட்டினம். சார்பாக,
சட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான்,
ஜித்தா,சவுதிஅரேபியா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved