காயல்பட்டினத்தில், 27.04.2012 அன்று காலையில் பலத்த காற்று வீசியது. திடீரென வீசிய இக்காற்றால், தெருக்களெங்கிலும் புழுதி பறந்தது. மரங்கள் வேகமாக அங்குமிங்கும் அசைந்தன. அவற்றிலிருந்த காய்ந்த இலைகள் மொத்தமாக உதிர்ந்து விழுந்து, தெருவோரங்களில் கூளங்குப்பைகளாக காட்சியளித்தது. பேருந்து நிலைய வளாகம் உட்பட ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளும், இரு சக்கர வாகனங்களும் சரிந்து விழுந்தன. சில குடிசை இந்நிகழ்வின்போது, தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. கோடை காலமாக இருந்தாலும், குற்றால சீசன் காலங்களில் காயல்பட்டினம் உள்ளிட்ட தூத்துக்குடி - நெல்லை மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இதுபோன்று அவ்வப்போது பலத்த காற்று வீசுவதும், மழை பெய்வது வாடிக்கையான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன். |