இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழு இம்மாதம் 28ஆம் தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் (பொறுப்பு) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் 28.04.2012 சனிக்கிழமை (நாளை) மாலை 04.30 மணியளவில், நகர தலைவர் (பொறுப்பு) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் நகர கவுரவ தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் ஆகியோர் முன்னிலையில், தாய்லாந்து காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்களின் வாவு நகர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
நகர கிளை நிர்வாகிகள் தேர்தல்,
நகர கிளைக்கு சொந்தமான சீதக்காதி நகரிலுள்ள கட்டிடத்தை விற்று, கட்சி அலுவலகத்திற்காக சதுக்கைத் தெருவில் புதிய கட்டிடம் வாங்கிட ஒப்புதல் பெறல்,
சதுக்கைத் தெருவில் புதிதாக அமையவுள்ள “மர்ஹூம் பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில்” என்ற பெயரிலான - முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை அலுவலகத்தை, மே மாதம் 23ஆம் தேதியன்று, கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களைக் கொண்டு திறந்து வைத்தல்,
கட்சியின் தேசிய செயலாளரும், கேரள மாநில சட்டமன்ற உறுப்பினருமான அப்துஸ்ஸமத் ஸமதானீ அவர்களை மே மாத இறுதியில் காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தல்
உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளக் கோரி, கட்சியின் நகர உறுப்பினர்களுக்கு, நகர தலைவர் (பொறுப்பு) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் முறைப்படி அழைப்பு அனுப்பியுள்ளார்.
இவ்வாறு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |