Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:08:21 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8370
#KOTW8370
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 27, 2012
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முஸ்லிம் சமுதாய பொதுமக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களது பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளி மாநிலத்தவர்கள் குறித்த விபரம், மாற்றுத் திறனாளிகள், வீடில்லாதோர் குறித்த தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, சமூக - பொருளாதார - சாதிவாரி கணக்கெடுப்பை நாடெங்கும் நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு, ஏப்ரல் 23ஆம் தேதி துவங்கி, 40 நாட்கள் நடைபெறவுள்ளது.

இக்கணக்கெடுப்பின்போது செய்ய வேண்டியவை குறித்து முஸ்லிம் சமுதாய பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு! முக்கிய வேண்டுகோள்!!

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளி மாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு 2012 ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி 40 நாட்கள் தமிழகத்தில் நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பில் பெயர், வயது, சாதி, வருமானம், தொழில், வேலை வாய்ப்பு உள்ளிட்ட 24 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கான பதில்கள் கணினியில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். பின்பு இதன் நகலை எடுத்து, குடும்பத் தலைவரிடம் கையெப்பம் பெறப்படும்.

800 வீடுகளுக்கு கணக்கெடுப்பாளர் ஒருவரும், கணினி ஆபரேட்டர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களை சேகரிப்பர். அவை உடனடியாக கணினியில் பதிவு செய்யப்படும்.

பின்னர் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு அடையாளச் சீட்டு வழங்குவதுடன் கதவில் ஒரு ஸ்டிக்கரும் ஒட்டப்படும்.

கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு அதன் பலனை சமுதாயம் முழுமையாக அனுபவிக்க இந்த கணக்கெடுப்பு அவசியப்படும் என்பதால் இதை முஸ்லிம் சமுதாயம் அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

இஸ்லாத்தில் சாதிய பிரிவுகள் இல்லையெனினும், தமிழகத்தில் முஸ்லிம்களை - லெப்பை, (தமிழ்-உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர்) தக்னி, (உர்து பேசுவோர்) தூதே குலா, (தெலுங்கு பேசுவோர்) மாப்பிள்ளா (மலையாளம் பேசுவோர்) அன்சர், ஷேக், சையத் என ஏழு பிரிவுகளாக அரசு வகைப்படுத்தியுள்ளது.

இதில், லெப்பை, தக்னி, தூதே குலா, மாப்பிள்ளா ஆகிய நான்கும் தேசிய அளவில் மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கில் ஒன்றை இடம்பெறச் செய்தால் மட்டுமே மத்திய-மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டுச் சலுகையை பெற முடியும்.

எனவே நமது பகுதியில் கணக்கெடுக்க வரும்போது மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம் என்றும், சாதி என்ற கேள்விக்கு லெப்பை என்றும் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

இந்தப் பதிவின்போது, முஸ்லிம்களின் பெயர் தவறுதலின்றி - மிகச் சரியாக பதிவு செய்யப்பட தாங்களாகவே பெயரை எழுதிக் கொடுக்க வேண்டும். அல்லது, தவறாக எழுதப்படவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அத்துடன் எவர் பெயரும் விடுபடாமல் தங்கள் குடும்பத்தார் பெயர்களை சரியாக பதிவுசெய்யவும் வேண்டுகிறோம்.

இந்தக் கணக்கெடுப்பு முடிந்ததும், தங்களிடத்தில் அடையாள சீட்டு தரப்படுகிறதா? கதவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா? என்பதில் கவனத்தோடு இருக்க வேண்டும்.

இதுபற்றி ஒவ்வொரு பள்ளிவாசல் மஹல்லா ஜமாஅத்திலும், பெண்கள் தைக்காக்களிலும் சமுதாய மக்கள் கூடும் இடங்களிலும் அறிவிப்பு செய்து விழிப்புணர்வோடு இந்த பதிவை முழு அளவில் மேற்கொள்ள வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.


இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சாதிவாரி கணக்கெடுப்பு குற...
posted by samu shihabdeen (colombo) [28 April 2012]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18577

salam dear brothers of muslim leauge are any other social welfare association wich is operating in kayal i request them to kindly take a blue print of this form & issue troughout kayal to all house to infrm how to fill this form either in jumma r in personal so tat people will do it without any defficulty, hope it mite be a easy for all...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved