செய்தி எண் (ID #) 8363 | | |
வியாழன், ஏப்ரல் 26, 2012 |
குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி ஷேக் மதார் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4167 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி ஆகிய ஜும்ஆ பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி எஸ்.ஏ.ஷேக் மதார் இன்றிரவு 07.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.
அன்னார், மர்ஹூம் டி.எம்.கே.செய்யித் அஹ்மத் என்பவரின் மகனும்,
மர்ஹூம் செய்யித் ஹஸன் மவ்லானா என்பவரின் மருமகனும்,
மர்ஹூம் ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எஸ்.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜ்ஜா உம்முல் ஃகைரி என்பவரின் கணவரும்,
எஸ்.ஏ.ஜெஸீமா, குவைத் காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஹஸன் மவ்லானா, டாக்டர் எஸ்.ஏ.செய்யித் அஹ்மத் (சென்னை), எஸ்.ஏ.மத்தீன் ஃபாரூக் (ஹாங்காங்) ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை காலை 10.00 மணியளவில், சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.M.T.சுலைமான்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம். |