பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை
செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - பெற்றுள்ளது.
மொத்தம் சுமார் 1600 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கைகள் - பல அரிய தகவல்களை வழங்குகின்றன. அவைகளில் உள்ள முக்கியமான தகவல்களை - தொடராக காயல்பட்டணம்.காம் வெளியிட உள்ளது.
அத்தொடரின் நான்காம் பாகமான இப்பாகத்தில் - 2007 - 2008 நிதியாண்டில் மிகவும் அபரிதமாக (12 லட்ச ரூபாய் அளவில்) எழுதுபொருட்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது குறித்து தணிக்கை அறிக்கை கூறும் தகவலை காணலாம். அதற்கு முந்தைய நிதியாண்டில் (2006 - 2007) - சுமார் 79,000 ரூபாய் அளவிற்கே எழுதுபொருட்கள், கையேடுகள் போன்றவை - காயல்பட்டினம் நகராட்சியில் - வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2007 -2008 தணிக்கை அறிக்கையின் பத்தி எண் 56 ...
காயல்பட்டினம் நகராட்சி 2007 - 08 தணிக்கை பத்தி வருவாய் மூல தன நிதி: நகராட்சிக்கு தேவையான பதிவேடுகள், எழுதுபொருட்கள்
வாங்கியது: பதிவேடுகள் வாங்கப்பட்ட அரசு நிறுவனம் பதிவு பெற்ற கூட்டுறவு சங்கம் என்பதற்கு ஆவணங்கள் காண்பிக்கப்படவில்லை.
ஒப்பந்தபுள்ளிகள் கோரப்படவில்லை. ஆண்டு தேவைப்பட்டியல் பெற்று மன்ற அங்கீகாரம் பெறப்படவில்லை. அபரிதமான அளவிற்கு எழுது
பொருட்கள் வாங்கியது, பொருட்கள் தேவையற்ற அளவில் வாங்கப்பட்டது, மிகவும் கூடுதல் விலைக்கு வாங்கியது, நிர்வாக ஆய்வு தேவை:
கடுங்குறைப்பாடுகள் தொகை ரூ.8,24,285/-
[கோப்பு பராமரிக்கப்படவில்லை]
தணிக்கை காலத்தில் இந்நகராட்சிக்கு ஆண்டுக்கணக்குப்படி ரூ.12,15,408/- பதிவேடுகள் மற்றும் எழுதுபொருட்கள் வருவாய் மூல தணிக்கையில்
வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கப்பட்ட செலவீனத்தில் பின்வரும் கடுங்குறைபாடுகள் காணப்படுகின்றன.
1. நகராட்சியால் பதிவேடுகள்/எழுதுபொருட்கள் வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அரசு அச்சக நடைமுறை பத்தி 62 (ஏ)
தெளிவாக குறிப்பிட்டுள்ளன. நகராட்சி நிர்வாக அதிகாரி ஒப்பந்தபுள்ளி வரவழைத்து இந்த பணியினை வாங்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கவில்லை
2. அரசாணை 617 போக்குவரத்துத்துறை நாள் 29.11.77 ன் படி கூட்டுறவு நிறுவனத்திற்கு 15% விலை சகாயம் மட்டுமே அளிக்க வேண்டும்.
ஒப்பந்த அழைப்பில் கலந்து கொண்ட பின்னரே 15% விலை சகாயம் அளிக்க வேண்டும். ஒப்பந்தபுள்ளியே வரவழைக்காமல் கூட்டுறவு சேவை
சங்கத்திற்கு இந்த பணி வழங்கப்பட்டது. பதிவேடுகள்/பாரங்கள் கூட்டுறவு சங்கத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளது
3. 2007 - 08 ஆண்டு தேவைப்பட்டியல் தயாரிக்கப்படாமலும் மிக அபரிதமான அளவில் எழுதுபொருட்கள் / பதிவேடுகள் கூடுதல் விலைக்கு
வாங்கப்பட்டுள்ளது
4. மொத்த செலவீனம் ரூ. 12 ,15,408/- என்பதால் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கான "தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி
விதிகள் 2000" கடைபிடிக்கபடவில்லை
5. சம்மந்தப்பட்ட பணிக்கு உரிய நடப்பு கோப்பு / குறிப்பு கோப்பு எதுவும் பராமரிக்கப்பட்டு இளநிலை உதவியாளர் / தலைமை எழுத்தர் மற்றும்
நிர்வாக அதிகாரியால் தணிக்கைக்கு காண்பிக்கப்படவில்லை
6. மொத்த செலவீனம் 2007 - 08 ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீட்டின் கீழ் (Approved Budget) செலவு செய்யப்பட்டதா என்பதற்கு உரிய ஆவணங்கள்
எதுவும் தணிக்கைக்கு காண்பிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு நிதி பத்தி 118 ன் படி இது விதிமீரலாகும் (Tamil Nadu Financial Code Vol 1
Article 118)
7. 2006 - 07 ஆம் ஆண்டில் 2018 கணக்கு தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட செலவீனம் ரூ.79,782 மட்டுமே. ஆனால் 2007 - 08 ம் ஆண்டில்
அதுவும் ஜனவரி இறுதி முதல் மார்ச் 2008 க்குள் ரூ. 8,24,285 . எழுது பொருட்கள்/ பதிவேடுகள் வாங்க மிகவும் அபரிதமாக
செலவிடப்பட்டுள்ளது. இது நிர்வாக ரீதியாக ஆய்வு செய்யப்படவேண்டும்
8. நிர்வாக அதிகாரியின் விநியோக உத்திரவு ஏதும் பதிவேடுகள் வாங்கிய கூட்டுறவு சங்க பட்டியலில் (ரசீது) குறிப்பிடப்படவில்லை
9. கூட்டுறவு சங்க பட்டியலில் உள்ள ரசீது எண் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. உதாரணமாக invoice எண் 6 என்பது 4.1.08 லும், எண் 3
நாள் 27.2.08 லும் குறிப்பிடப்பட்டது. இது குறித்து நிர்வாக ஆய்வு தேவை
10. அபரிதமாக அளவிற்கு எழுதுபொருட்கள் / பதிவேடுகள் வாங்கியதற்கு நிர்வாக அதிகாரிகள் எழுத்துமூலமான உத்திரவு எதுவும் இன்றி
பொருட்கள் வாங்கப்பட்டது
11. அரசாணை 2492 உள்ளாட்சி நிர்வாகம் நாள் 11.9.41 ன் படி ஆண்டு தேவைப்பட்டியல் தயாரிக்கப்படவில்லை
12. 1 ஆண்டுக்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி / எழுதுபொருட்கள் மண்டல நகராட்சி நிர்வாக இயக்கத்தால் அளவு நிர்ணயிக்கப்பட்டு காயல்பட்டினம்
நகராட்சியின் தேவை அளவு கோல் நிர்ணயிக்கப்படவில்லை
13. வாங்கப்பட்ட தனியார் கூட்டுறவு சங்கம் விற்பனை வரி, வருமான வரி, அங்கிகாரச் சான்று பெற்ற நிறுவனம் என்ற விபரம் தணிக்கைக்கு
காண்பிக்கவில்லை (Sales tax declarations)
14. எழுதுபொருட்கள் வாங்கப்பட்ட நிறுவனம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், வாங்கப்பட்ட பொருட்களுக்கு
அங்கீகரிக்கப்பட்ட விலை விகிதம் விபரம் எதுவும் இல்லை
15. அரசு கடிதம் 43646 / 3.5 / 92 நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை நாள் 1.9.92 ல் அறிவுறுத்தியவாறு எழுதுபொருட்கள் பதிவேடுகள்
வாங்க அரசானை 1265 நாள் 18.11.86 உள்ள அரசு உத்திரவுகள் பின்பற்றப்படவில்லை
16. வாங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 1/08 முதல் 3/08 வரை - அனைத்தும் விநியோகிக்கப்பட்டு விட்டதாக இருப்பு பதிவேட்டில் இருப்பு
கழிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் செயல் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை
17. மொத்த செலவீனம் மிக அபரிதமாக உள்ளதால் ரூ.12,15,408 குறித்து ஆய்வு தேவை. இதில் ரூ.8,24,285 /- ம்
தணிக்கைத்தடைகுட்படுத்தப்பட்டது.
வ.எண் | கொள்முதல் சீட்டு எண் / நாள் | விபரம்
| தொகை |
1 | 306/3.1.2008 | எழுதுபொருட்கள் வாங்கியது | 210 |
2 | -/27.2.8 | Invoice No.3 / 27.2.08 எழுதுபொருட்கள் / ஸ்டேசனரி
வாங்கியது | 76,939 |
3 | 312/7.1.2008 | 6 / 4.1.08 எழுதுபொருட்கள் / ஸ்டேசனரி | 269,984 |
4 | 395/20.3.08 | 20 / 20.3.08 பதிவேடுகள் / எழுதுபொருட்கள் | 78,697 |
5 | 358/7.2.08 | 9 / 7.2.08 பில் புத்தகங்கள் / பதிவேடுகள் மட்டும்
| 249,246 |
6 | 215/3.1.08 | 5352 / 12.9.07 குடிநீர் ரசீது புத்தகம் | 8,320 |
| | மொத்தம் | 8,24,285 |
வாங்கிய நிறுவனம்:
அஞ்சா நெஞ்சன் அழகிரி கூட்டுறவு சிறுதொழில் சேவை தொழிற்சங்கம்
முகவரி:
119 / 1 எம்.கே.எம். காம்பிளக்ஸ், தெற்கு பஜார், கோவில்பட்டி
இவ்வாறு அத்தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
[தொடரும்] |