20.04.2012 அன்று, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆறுமுகநேரியில் உள்ள டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு வினைல் குளோரைடு மோனாமர் (விசிஎம்) ஆசிட் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி ஹார்பர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. லாரியை தலைவன் வடலி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சாமிதுரை ஓட்டிச் சென்றார்.
அனல் மின்நிலைய குடியிருப்பு (கேம்ப்1) அருகே சென்று கொண்டிருந்தபோது, டேங்கர் லாரி மீது, துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி பின்னால் மோதியது. இதில் இரண்டு லாரிகளுமே அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. உடனடியாக தகவல் கிடைத்ததும் துறைமுகம், அனல் மின்நிலையம், ஸ்பிக் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தன.
டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டிருந்தால் சுமார் 15 கிமீ சுற்றளவில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்தினறல் மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடக்காததால் அதிகாரிகள், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த டேங்கர் லாரி டிரைவர், கிளீனர் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசிஎம் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும். ஆனால் விபத்துக்குள்ளான டேங்கர் லாரி எவ்விதமான பாதுகாப்புடனும் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் ஆசிட் லாரி விபத்துக்குள்ளானதையொட்டி, அதனை மீட்கும் பணி நடைபெற்றது. லாரியில் உள்ள வினைல் குளோரைடு மோனாமர் ஆசிட் (விசிஎம்) கசிவு ஏற்படாமல் மிகவும் கவனமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
லாரி கவிழ்ந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்ல தடை விதிக்கப்பட்டு, மாற்ற வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய லாரிகள், 5 கிலோ மீட்டர் கூடுதல் தூரத்தைக் கொண்ட மாற்றுப் பாதையில் சென்றன.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |