காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கியிருக்கும் குப்பைகளுக்கிடையில், தங்குதடையின்றி சுற்றித்திரியும் - உடல் முழுக்க நோய்ப் புண்களைக் கொண்ட நாய்கள் சிலவற்றின் காட்சிகள்தான் இவை.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி காயல்பட்டினம் நகர்மன்றத்தின் பல கூட்டங்களில் பல உறுப்பினர்களும் முறையிட்டுள்ளனர். அரசு விதிகளின்படி நாய்களைக் கொல்ல தடை உள்ளதாகவும், எனினும் அவற்றின் இனப்பெருக்கத்தைக் குறைக்க கருத்தடை செய்ய அனுமதியுள்ளதாகவும், எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யலாம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“கருத்தடை மூலம் நாய்க்குட்டிகள் உருவாகாமல் தடுக்கலாம்... ஆனால், தற்போது சுற்றித் திரியும் இந்த பெரிய நாய்களால் ஏற்படும் தீவினைகளை அக்கருத்தடை மாத்திரைகள் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது குறித்து கருத்தடைக்குப் பின்புதான் தெரிந்துகொள்ள இயலும். (?!)
|