காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து போட்டி” என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் வரும் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக் குழு (Tournament Committee) பின்வருமாறு:-
தலைவர்:
பி.எம்.எஸ்.உமர் ஒலி
செயலாளர்:
பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா
துணைச் செயலாளர்:
ஏ.எஸ்.புகாரீ
பொருளாளர்:
எம்.எல்.ஹாரூன் ரஷீத்
நடப்பாண்டு அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியில்,
பெங்களூருவிலிருந்து எம்.இ.ஜி., சதர்ன் ப்ளூஸ், கர்நாடகா போஸ்டல்,
திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் கால்பந்துக் கழகம், எஸ்.பி.டி.,
கோழிக்கோட்டிலிருந்து யுனிவர்ஸல் ஸாக்கர்,
கொல்லத்திலிருந்து திருவாங்கூர் கால்பந்துக் கழகம்,
பாலக்காட்டிலிருந்து பாலக்காடு பொலிஸ்,
சென்னையிலிருந்து நேத்தாஜி கால்பந்துக் கழகம், தமிழ்நாடு பொலிஸ், சாய், கஸ்டம்ஸ், இன்கம் டாக்ஸ், சிட்டி பொலிஸ்,
பாண்டிச்சேரியிலிருந்து ஸ்டேட் லெவன்,
மதுரையிலிருந்து மாவட்ட கால்பந்துக் கழகம்,
தூத்துக்குடியிலிருந்து ப்ரெஸிடெண்ட் லெவன்,
திண்டுக்கல்லிலிருந்து மாவட்ட கால்பந்துக் கழகம்,
காரியாப்பட்டியிலிருந்து சேது கால்பந்துக் கழகம்,
காயல்பட்டினத்திலிருந்து ஐக்கிய விளையாட்டு சங்கம்
ஆகிய அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.
இச்சுற்றுப்போட்டிக்கான அனுமதி நுழைவுச் சீட்டு பெற்றிட சர்வதேச பொறுப்பாளர்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்:-
மேலதிக விபரங்களுக்கு, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின்,
+91 4639 284343 (தொலைபேசி),
+91 4639 302595 (தொலைநகல் - ஃபாக்ஸ்) ஆகிய எண்களிலும்,
azadtrophy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக்குழு தலைவர் உமர் ஒலி கேட்டுக்கொண்டுள்ளார். |