காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில், வரும் மே மாதத்தில், காயல்பட்டினம் நகரின் பள்ளி மாணவ-மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து செயல்திட்டம் வகுத்து, பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம், 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில், KCGC அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நகரில் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, KCGC அமைப்பின் சார்பில், வழக்குரைஞர் அஹ்மத், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கைள் கேட்டறிந்தார்.
பின்னர், நகரின் அனைத்துப் பள்ளிக்கூடங்களைச் சார்ந்த மேனிலைப் பிரிவு மாணவ-மாணவியருக்கு முறைப்படி அழைப்பிதழ் மற்றும் விண்ணப்பங்களை அனுப்புவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. கொமந்தார் இஸ்மாஈல் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், இக்ராஃ கல்விச் சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன். |