காயல்பட்டினம் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் 13ஆம் ஆண்டு விழா, 26.04.2012 அன்று மாலை 05.00 மணியளவில், துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
அப்பள்ளியின் இயக்குநரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா விழாவிற்குத் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளி மழலையரின் கிராஅத் மற்றும் இறைவாழ்த்துப் பாடலுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில், தொடக்கக் கல்வி உதவி அலுவலர் சுடலை மணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு, போட்டிகளில் வென்ற மழலையருக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, விழாவில் முன்னிலை வகித்த காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், ஜே.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், இ.எம்.சாமி, துளிர் பள்ளி செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர், மாணவ மழலையருக்கு பரிசுகளை வழங்கினர்.
பள்ளி மாணவ மழலையரின் பெற்றோருக்கு நடத்தப்பட்ட சமையல் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற பெண்களுக்கு, வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் ஆகிய நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கினர்.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி மழலையரின் பெற்றோர், உறவினர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ. |