டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கான மருந்து தெளிப்பு குறித்து, காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு 30.04.2012 அன்று காலை 10.00 மணியளவில் பயிற்சியளிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காயாமொழி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.சுப்பிரமணியன் தலைமையில், சுகதார ஆய்வாளர் எல்.ஆனந்தராஜ், மலேரியா நோய் கண்காணிப்பாளர் சு.துரைப்பாண்டி ஆகியோர் பயிற்சியளித்தனர்.
நோய் பரப்பும் கொசு ஒழிப்பிற்காக தயாரிக்கப்பட்டுள்ள - ஒரு லிட்டர் சுமார் இரண்டாயிரம் ரூபாய் விலை மதிப்பு கொண்ட அபேட் கொசு ஒழிப்பு மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் வீதம் கலந்து, பொதுமக்கள் சேகரித்துப் பயன்படுத்தும் நீர்த்தொட்டிகளில் தெளிக்குமாறும், குடிநீரில் இம்மருந்தைத் தெளிக்கக் கூடாதென்றும், வீடுகள் சிலவற்றில் கிணற்று நீரே குடிநீராகப் பயன்படுத்தப்படும் நிலையுள்ளதால், அக்கிணறுகளிலும் மருந்து தெளிக்கக் கூடாதென்றும் பயிற்சியின்போது துப்புரவுப் பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துவக்கமாகவும், பிற இடங்களில் அடுத்தடுத்தும் மருந்து தெளிக்கப்படும் என, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் தெரிவித்தார்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன். |