காயல்பட்டினம் நகராட்சியில் நிறைவேற்றப்படவேண்டிய பணிகள் குறித்தும், தற்போது சேவைகளில் உள்ள குறைகள் குறித்தும் - மக்கள் கருத்துக்கள் பெறவும், கலந்தாலோசனை செய்யவும் - கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதியன்று - ஜமாஅத்துகள் / பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் இது போன்ற சந்திப்பு - நகரின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படவேண்டும் என்று பலரால் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக - நகர்மன்றத் தலைவர் மற்றும் ஜமாஅத் / பொது நல அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை, ஏப்ரல் மாதம் 28 ம் தேதி) - மாலை 4:30 மணி அளவில் - ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் வைத்து நடத்தப்படவுள்ளது. இதற்கான அழைப்பு நகரின் முக்கிய அமைப்புகள் அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இடம்: ரெட் ஸ்டார் சங்கம் நாள்: ஏப்ரல் 28, 2012 சனிக்கிழமை நேரம்: மாலை 4:30 மணி
1. Re:நகர்மன்றத் தலைவர் - ஜமாஅத... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[28 April 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18580
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் நகர்மன்றத் தலைவி அவர்கள் & நமதூர் ஜமாஅத் & நம் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளின் சந்திப்பு கண்டிப்பாக நம் ஊர் பொது மக்களுக்கு அத்தியவசியமான சந்திப்பு தான்.
நம் தலைவியின் முன்ற்றமே நமக்கு மகிழ்சியாக உள்ளது . மேடம் உங்களின் இந்த சந்திப்பின் போது நம் கவுன்சிளர்
அவர்களும் ஒன்றாக இருப்பின் இன்னும் நல்லது தானே .
மேடம் நீங்கள் மக்களுடன் ஓரு நாள் உங்கள் சந்திப்பு . தலைமை இடதில் வைத்தால் இன்னும் சிறப்பு.( மக்கள் குறை தீர்க்கும் நாள் )
2. Re:நகர்மன்றத் தலைவர் - ஜமாஅத... posted byOMER ANAS (DOHA QATAR.)[29 April 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18596
நல்லதோர் திட்டம்! வாழ்த்துவோமே நாமும்!
ஆனாலும் இதில் கலந்து கொள்ளும் (முக்கிய ) ஜமாத்திற்கு முறையான அழைப்பு வேண்டும்.
அது போல்,மரியாதையான அழைப்பு என்றால், நம் ஊர் நன்மை கருதி (மரியாதைக்கு உரியோர்) எல்லோரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் .( முறையோடு அழைப்பு இருந்தால் மட்டும்) துஆச் செய்வோம்! ( )க்கட்டை பிரச்சினையாக்க வேண்டாம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross