காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி ஆகிய ஜும்ஆ பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி எஸ்.ஏ.ஷேக் மதார், 26.04.2012 அன்று இரவு 07.30 மணியளவில் சென்னையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா மறுநாள் 27.04.2012 அன்று காலை 10.00 மணியளவில் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஹாஜி ஷேக் மதார் அவர்களின் மறைவு நமதூருக்கு - குறிப்பாக, குத்பா பெரிய - சிறிய பள்ளிகளுக்கு பேரிழப்பாகும்.
மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப் பிழை பொருப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது.
அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |