காயல்பட்டினம் தைக்கா தெரு - காட்டு தைக்கா தெரு சந்திப்பில் அமைந்துள்ளது அரூஸிய்யா பள்ளி. மிகவும் குறுகலான அளவில் இடவசதியைக் கொண்டிருந்த இப்பள்ளியில் நாளுக்கு நாள் தொழுகையாளிகளின் வருகை அதிகரித்ததையடுத்தும், வருங்காலத்திற்கான பல்வேறு செயற்திட்டங்களைக் கருத்திற்கொண்டும், பள்ளியின் பழைய கட்டிடம் இடித்தகற்றப்பட்டு, விசாலமான புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும் நிலையிலுள்ளது.
கட்டுமான இறுதிகட்டப் பணிகளுக்கு நிதியுதவி கோரி, பள்ளியின் நிர்வாகக் குழு சார்பாக, எஸ்.ஏ.சுல்தான் (+91 94 86 878 118), ஏ.ஷாஹுல் ஹமீத் (+91 9629 655 780), ஜே.எம்.காதர் (+91 99521 63734) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருளாளன் அல்லாஹ்வின் அளவற்ற கிருபையினால், உங்கள் அனைவரின் உதவி மற்றும் ஓத்துழைப்போடு, நமது காட்டுத்தைக்கா அரூஸிய்யா பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது (அல்ஹம்துலில்லாஹ்).
அதே நேரத்தில், சிறிதும் பெரிதுமாக பல்வேறு வேலைகள் நிதிப்பற்றாக்குறையினால், இன்னும் முடிவுறாத நிலை தொடர்கிறது. இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புனித ரமழானுக்கு முன்பு, கிடப்பில் இருக்கின்ற வேலைகளையும் பூர்த்தி செய்து, அல்லாஹ்வின் ஆலயக் கட்டுமானப் பணியை அழகுற நிறைவு செய்ய நாடியுள்ளோம். இதற்காக அன்பு உள்ளங்கள் அனைவரிடமிருந்தும் நிதி உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம்.
எமது பள்ளியின் முன்னாள் தலைவர் ஜனாப் பி.எஸ்.செய்யது முஹம்மது அவர்கள் தமது உடல்நிலை கருதி, அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதால், பள்ளிவாசல் கட்டிட நிதி, சந்தா, நோன்புக் கஞ்சிக்கான தொகை உட்பட அனைத்தும் நிதி உதவிகளையும்,
ஜனாப் S.M.B.மூஸா நெய்னா
(கைபேசி எண் +91 9443 205 207)
வங்கிக் கணக்கு எண்: 2081 277 350
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,
காயல்பட்டணம் கிளை
என்ற முகவரிக்கு அனுப்பித் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல வளத்தையும், மேலான இஸ்லாமிய சிந்தனைகளையும் தருவானாக! ஆமீன்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |