காயல்பட்டினம் தைக்கா தெருவிலியங்கி வரும் கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் மாற்றுடைப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா, 16.04.2012 அன்று நடைபெற்றது. அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியரான மழலையர் பல்வேறு மாற்றுடைகளில் மேடையில் தோன்றினர்.
இப்போட்டியில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நான்காவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்ற நிர்வாகி சாமு நஸீம் ஆகியோர் நடுவராகப் பொறுப்பேற்று, பரிசுக்குரிய மழலையரைத் தேர்வு செய்தனர். கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா மழலையருக்கு பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியில், அன்னை தெரசா போன்று உடையணிந்திருந்த - அஜீபா முஹம்மத் தம்பதியின் மகள் ஃபாத்திமா நாச்சி, இந்திரா காந்தி போன்று உடையணிந்திருந்த - ஷாக்கிரா அலீ தம்பதியின் மகள் பாளையம் கதீஜா, மிஸ் இந்தியா போன்று உடையணிந்திருந்த - தய்யிபா ஹாஷிம் தம்பதியின் மகள் முத்து பீவி ஃபாத்திமா, விமானப் பணிப்பெண் போன்று உடையணிந்திருந்த நஸ் ரீன் என்பவரின் மகள் எம்.ஆர்.ஆயிஷா ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.
தேவதை போன்று உடையணிந்திருந்த - ஃபாத்திமா முஹ்யித்தீன் தம்பதியின் மகள் மர்ஜூனா, ஆசிரியையாக உடையணிந்திருந்த - ஜஹ்ரா என்பவரின் மகள் செய்யித் ராபியா ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர்.
ராஜஸ்தானி பெண் போன்று உடையணிந்திருந்த - ஃபாத்திமா பீவி என்பவரின் மகள் வாவு ருமைஜா மூன்றாம் பரிசைப் பெற்றார்.
இப்போட்டியில் பங்கேற்று, பல விதங்களில் மாற்றுடையணிந்து வந்திருந்த அனைத்து மழலையருக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
தகவல்:
ஃபாத்திமா மாலிக். |