தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளில் - சாதாரண தார் சாலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் - உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் 90 சதவீதம் பிடுமெனும், 10 சதவீதம் பிளாஸ்டிக்கும் கலக்கப்பட்டு, சாலைகள் போடப்படும். இது போன்ற சாலைகள் நீண்ட ஆயுட்காலம் கொண்டதாகவும், மழை நீர் தேக்கத்தால் பாதிப்படையாததாகவும் இருக்கும்.
பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஆர். வாசுதேவன். இதற்கான Patent-யை இவர் பெற்றுள்ளார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை தலைவரான இவர் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா - அழைப்பின் பெயரில் காயல்பட்டினம் வருகிறார்.
நாளை (மே 3; வியாழன்) காலை 10:30 அளவில் - காயல்பட்டினம் நகர்மன்றத்தில் - பிளாஸ்டிக் சாலைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில் டாக்டர் வாசுதேவன் கலந்துக்கொண்டு இத்தொழில்நுட்பம் குறித்த விளக்கம் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள - நகர்மன்ற ஒப்பந்ததாரர்களுக்கும், ஆறுமுகநேரி, ஆத்தூர், திருச்செந்தூர், வீரபாண்டியப்பட்டினம், உடன்குடி ஆகிய உள்ளாட்சிமன்ற தலைவர்களுக்கும் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். |