செய்தி எண் (ID #) 8393 | | |
வியாழன், மே 3, 2012 |
கி.மு.கச்சேரி தெரு குடிநீர் குழாய் திறப்பு தொட்டி, நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கீர் சொந்த முயற்சியில் சரிசெய்யப்பட்டது! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3504 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் 05ஆவது வார்டுக்குட்பட்ட கி.மு.கச்சேரி தெரு - பிரதான வீதி சந்திப்பிலுள்ள குடிநீர் வினியோகக் குழாய் திறப்புத் தொட்டியின் நடப்பு காட்சிகள்தான் இவை.
பல ஆண்டு காலமாக இவ்விரு தொட்டிகளும், மழை நீர் சேமிப்புத் தளமாகவும், குப்பை கூளங்களை சேகரிக்கும் தொட்டியாகவும் பயன்பட்டு வந்ததை ஏற்கனவே காயல்பட்டணம்.காம் செய்திகளாக வெளியிட்டுள்ளது.
பலரும், பல இடங்களிலும், பல முறைகளிலும் சுட்டிக்காட்டிய பின்பும் இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல், அவ்வப்போது அதற்கு புதுப்புது விளக்கம் மட்டும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தரப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற பின்பு இத்தொட்டி அமைந்துள்ள 05ஆவது வார்டு உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஜஹாங்கீர் பலமுறை இதுகுறித்து நகர்மன்றக் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பி, அக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்ட பின்பும், நகராட்சி நிர்வாகம் இது விஷயத்தில் மந்தப் போக்கையே கடைப்பிடித்து வருவதாகக் கூறிய அவர், தன் சொந்த முயற்சியில் 02.05.2012 அன்று (நேற்று), இத்தொட்டியை பாதுகாப்பான முறையில் செப்பனிடும் பணியை செய்து முடித்துள்ளார்.
|