காயல்பட்டினம் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் 13ஆம் ஆண்டு விழா, 26.04.2012 அன்று காயல்பட்டினம் துளிர் பள்ளி கேரளங்கில் நடைபெற்றது. மறுநாள் 27.04.2012 அன்று, காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள அப்பள்ளி வளாகத்தில், “பகிர்வு தினம்” மற்றும் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்பள்ளியில் பயின்று, மேற்படிப்பிற்காக (முதல் வகுப்பில் சேர) வெளிச்செல்லும் மழலையரை வாழ்த்தி, அப்பள்ளியின் இயக்குநரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா உரையாற்றினார்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வின்போது, பள்ளியின் அனைத்து மாணவ மழலையரும் தத்தம் வீடுகளிலிருந்து வேறுபட்ட பலவகை தின்பண்டங்களை அனைத்து மாணவர் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு எடுத்து வந்து, அவரவர் பண்டங்களை மற்ற அனைவருக்கும் பகிர்ந்துகொள்வது வழமை. எனவே, இத்தினத்தை “பகிர்வு தினம் - Sharing Day” என்ற பெயரில் அவர்கள் கொண்டாடி விடைபெறுகின்றனர்.
படம்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |