காயல்பட்டினம் நகர்மன்றத்தின் (ஏப்ரல் மாத) மாதாந்திர கூட்டம் 30.04.2012 திங்கட்கிழமையன்று மதியம் 03.30 மணிக்கு நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக, புதிதாக நகர்மன்றத்தின் நிரந்தர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அஷோக் குமாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அவருக்கு சால்வை வழங்கி வரவேற்றார். ஆணையர் அஷோக் குமார் நகர்மன்றத் தலைவருக்கு சால்வை வழங்கினார்.
பின்னர், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, கே.ஜமால் ஆகிய நகர்மன்ற உறுப்பினர்கள் அவரை வாழ்த்திப் பேசினர். நகர்மன்றத் தலைவர் தலைமையிலான நகர்மன்றமும், ஆணையர் தலைமையிலான நகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு, நகருக்கு நல்ல பல சேவைகள் செய்வோமென அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், கூட்ட நிகழ்வுகள் துவங்கின. நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் கூட்டப் பொருட்களை வாசித்தார்.
இக்கோரிக்கை குறித்து 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா விளக்கிப் பேசினார். விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இக்கோரிக்கை குறித்து 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் எழுந்து பேசி, நகர்மன்றத் தலைவரிடம் சில விளக்கங்களைக் கேட்டார். அப்போது 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் விளக்கமளிக்க குறுக்கிட்டார். தான் நகர்மன்றத் தலைவரிடமே விளக்கம் கேட்பதாகவும், அவர் மட்டுமே விளக்கமளிக்கட்டும் என்றும் உறுப்பினர் கே.ஜமால் தெரிவித்தார். பின்னர், அதுகுறித்த விளக்கத்தை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்தார்.
இக்கோரிக்கை குறித்து 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி விளக்கிப் பேசினார். குடிநீர் வினியோகத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனர் (ஃபிட்டர்) நிஸாரிடம் சில விளக்கங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
நகராட்சியின் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணியாட்களை நியமிப்பதாக இருந்தாலும் கூட, வேலைவாய்ப்பிற்றகாக அரசிடம் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்வதே சிறந்ததாக இருக்கும் என்றும், எனினும் அவ்வாறு பதிவு செய்தவர்களில் - உள்ளூரிலிருந்து பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்றும் ஆணையர் அஷோக் குமார் தெரிவித்தார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பொருள் 07 கூட்டப் பொருள் அச்சுப் பதிவில் பொருள் எண் 07 தவறுதலாக விடுபட்டுள்ளது.
கட்டிட வரைபட வரைவாளராக ஜெ.தங்கலிங்கத்தை நியமிக்க கூட்டம் ஒப்புதலளித்தது. அதனைத் தொடர்ந்து, அவர் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் - தமிழகத்தின் அப்போதைய முதல்வரால் நெல்லையிலிருந்து தொலைக்கட்டு (ரிமோட்) மூலமாகத் திறந்துவைக்கப்பட்டதாகவும், அந்நேரத்தில் பேருந்து நிலையத்தில் கல்வெட்டு எதுவும் வைக்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே காயல்பட்டினம் நகராட்சியில் பணியிலிருந்து வரும் பாஸ்கர் அத்தகவலை உறுதி செய்தார்.
இது அனைத்து வார்டுகளிலுமுள்ள பிரச்சினை என்றும், விரைவில் இக்குறை போக்கப்பட வேண்டுமென்றும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வாங்கப்பட வேண்டிய கருவி குறித்து சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் விளக்கமளித்தார். பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் தேவைக்காக வாங்கப்படும் எந்தவொரு பொருளானாலும், அதுகுறித்த முறையான பதிவுகளுடன் கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டார்.
பழுதடைந்த அந்த வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் கூட இல்லையென்றும், எனவே இதற்கு இவ்வளவு தொகை செலவழிப்பதை விட, புது வாகனம் வாங்கலாம் என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், புது வாகனம் வாங்கிட table agenda மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர்.
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுவதற்காக இடம் கேட்டு நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் மற்றும் புறநகர் ஊர் நலக் கமிட்டிகளுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடையக்குடி, கோமான் தெரு, அப்பா பள்ளி என மூன்றிடங்களிலிருந்து இடம் தருவது குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
பின்னர் அதுகுறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திற்கருகிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை அளிக்கலாம் என 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கருத்து தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், அதற்கு சற்று அருகில்தான் அரசு மருத்துவமனை உள்ளதென்றும், எனவே ஒரே பகுதியில் இரண்டு இடங்களில் மருத்துவ வசதியளிப்பதை விட, அரசு மருத்துவமனைக்கு மிகவும் தொலைவிலுள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உமா தெரிவித்ததாக நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அடுத்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், கடையக்குடியிலிருந்து இடம் பெறப்பட்டால், அது அப்பகுதிக்கு மட்டுமே பயன்படும்... மற்றவர்கள் அங்கு செல்ல வாய்ப்பில்லை என்றும், அதே நேரத்தில் கோமான் தெருவைத் தேர்ந்தெடுத்தால் கடையக்குடி மக்களும், நகரின் இதர பகுதி மக்களும் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு காயல்பட்டினம் நகராட்சி 44 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளதாகவும், புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற பின்னர் 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
நகராட்சி செலுத்த வேண்டிய மாதாந்திர தொகையை மட்டும் செலுத்தலாம் என்றும், நிலுவைத் தொகையை செலுத்த வேண்டாம் என்றும், அதில் அரசிடமிருந்து தள்ளுபடி கேட்கலாம் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
இப்படியான நிலுவைத் தொகையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள்தான் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவை நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் வாசித்து, எனவே முழு தொகையையும் நகராட்சிதான் செலுத்த வேண்டும் என்றும், நமது பொறுப்புக் காலத்தில் இதுபோன்ற நிலுவைத் தொகைகளை முழுமையாக செலுத்தி விடுவோம் என்றும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலிருந்து நகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 57,000 பல ஆண்டு காலமாக செலுத்தப்படாதிருந்ததாகவும், நடப்பு நகர்மன்றத் தலைவரின் அயராத முயற்சியின் பலனாக தற்போது அரசு மருத்துவமனையிடமிருந்து அத்தொகை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவரைப் பாராட்டினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நகர்மன்றத் தலைவர், 2ஆவது பைப்லைன் திட்டம் வரும் வரை நகரில் நிலவும் குடிநீர் வினியோகப் பிரச்சினைகளைப் பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை என்றும், புதிய திட்டம் வந்தாலும் முதலில் செய்யப்பட வேண்டிய இப்பணியை இப்போதே செய்யலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அனைத்து உறுப்பினர்களும் பலத்த கரவொலியுடன் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர்.
இப்பொருள் குறித்து 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் விளக்கம் கேட்டார். அதற்கு விளக்கமளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், நகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் பணியிலிருக்கையிலும், ஓய்வு பெற்ற பின்பும் கூட நிம்மதியுடன் வாழ வேண்டுமென்றும், நகராட்சிக்கும் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலுமே இத்திட்டத்தை தான் முன்வைத்ததாகவும், இதனால் நகராட்சிக்கு ஏற்படும் மறைமுக இழப்புகள் தவிர்க்கப்படுமென்றும் தெரிவித்தார்.
நகராட்சியில் இதுவரை கோப்புகள் (பதிவுகள்) முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், இனி வருங்காலங்களில் இக்குறை முழுமையாக சரி செய்யப்படும் என்றும் அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் தெரிவித்தார்.
95,000 ரூபாய் தொகை ஏன் என கூட்டத்தில் விளக்கம் கேட்கப்பட்டது. அதுகுறித்து விளக்கிய நகர்மன்றத் தலைவர், 1 லட்சம் ரூபாய் - அதற்கு மேலுள்ள தொகை எனில் open tender விடப்பட வேண்டுமென்ற விதி உள்ளதாகவும், எனவே 95,000 ரூபாய் தொகைக்குள் பொருட்களை வாங்கிட நாம் விரும்பிய தரமான நிறுவனங்களை அணுகி பொருட்களை வாங்கலாம் என்றும் தெரிவித்தார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
நகரெங்கும் தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அடுத்து பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, நகராட்சியின் பொறியாளர் பிரிவு சரியாக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டியதோடு, இதற்கான செலவு மதிப்பீட்டை ஒப்பந்தக்காரர்களிடமிருந்து முதலில் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
புதிய ஒப்பந்தக்காரர்கள் வந்தால் சட்ட சிக்கல் வருமா என்பது குறித்து ஆய்ந்தறிந்துகொள்ளுமாறு 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
இத்திட்டங்களுக்கு மற்றவர்களும் தமது கூடுதல் தொகை எதிர்பார்ப்பைத் தெரிவித்திருந்தால் இக்கூட்டம் அதையும் பரிசீலித்திருக்கும் என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்க சட்டத்தில் இடமில்லை என துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார். சட்டத்தில் இடமுள்ளதாக 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகியோர் தெரிவித்தனர்.
பின்னர், இதுகுறித்து சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநரின் அனுமதிக் கடிதத்தை நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் காண்பித்தார்.
ஊருக்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க பணிகள் செய்த பின்னர் வாகனம் வாங்கலாமே என 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
அடுத்து பேசிய நகர்மன்றத் தலைவர், தான் நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இன்று வரை ஒருமுறை கூட தேவையான இடங்களுக்கு செல்லாதிருந்ததில்லை என்றும். பெரும்பாலும் இதுபோன்ற அம்சங்களுக்கு தன் கையிலிருந்தே செலவழித்து ஆட்டோ மற்றும் இதர வாடகை வாகனங்களில் சென்று வருவதாகவும் தெரிவித்தார்.
நகர்மன்றத் தலைவரின் பணிகளுக்கு அவருக்கென பிரத்தியேக வாகனம் அவசியம் தேவை என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கருத்து தெரிவித்தார்.
கூட்டத் துளிகள்...
கருப்புக் கொடியுடன் உறுப்பினர்...
தான் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், இனியும் அவை நிறைவேற்றப்படும் என தான் நம்பி பயனில்லை என்றும் தெரிவித்த 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், இதனைத் தெரிவிப்பதற்காக தான் கருப்புக்கொடி அணிந்து வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் அளித்த கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், நகராட்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு முறையான கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதுவரை பொறுத்திருக்குமாறும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இடையில் எழுந்து சென்ற துணைத்தலைவர்...
கூட்டம் முறைப்படி நிறைவுறும் முன்பே நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் விடைபெற்றுச் சென்றார். கூட்டம் முடிந்த பின்பு எழுந்து செல்லுமாறு அவரை 07ஆவது வார்டு உறுப்பினர் ஜே.அந்தோணி கேட்டுக்கொள்ள அவர் மீண்டும் இருப்பிடம் சென்றார்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை:
நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு கூட்டத்தின் நிறைவில் சீருடை வழங்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சீருடைகளை வழங்கினார்.
புதிய மேஸ்திரி அறிமுகம்:
நகராட்சிக்கு புதிய மேஸ்திரியாக நியமிக்கப்பட்டுள்ள பெண்ணை நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
|