புனித உம்ரா கடமையை நிறைவேற்ற குடும்பத்துடன் மக்கா வந்திருந்த அய்க்கியஅரபு அமீரக துபாய் கா.ந.ம.தலைவர் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ.புஹாரீ அவர்கள், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரை சந்திக்கவேண்டுமென்ற அவரது ஆர்வ மேலீட்டால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் அமர்வு சென்ற 27.04.2012 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் மக்காவிலும், 29.04.2012 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் ஜித்தாவிலும் நடந்தேறியது.
மக்கா அமர்வு:
மக்கா வாழ் காயல் சகோதரர்கள் மற்றும் அவர்களில் குடும்பத்தினர் அனைவர்களையும் ஒருசேர சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை பரிமாற வேண்டும் என்ற ஆவலின் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்களின் தனிப்பட்ட ஏற்பாட்டில் மக்கா உம்முல் குரா முகர்ரிம் ஹோட்டல் - கலந்தாய்வரங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் மக்கா வாழ் காயல் சஹோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு சகோ. பொறியாளர் பஷீர் தலைமை தாங்கினார். காயல் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் துணை தலைவர் டாக்டர். ஜியாத் அபூபக்கர் மற்றும் செயலாளர் சகோ. செய்யத் இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சகோ. ஹாஜா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். சகோ. செய்யத் இபுராஹீம் மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆற்றி வரும் பணிகள் குறித்து சுருக்கமாக உரையாற்றினார்.
மதிப்புரை வழங்கிய ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்கள் நம் காயல் மக்களின் ஒற்றுமை, குணநலன்கள் மற்றும் உதவி புரியும் மனப்பான்மை குறித்து அழகாக விளக்கி பேசினார். இந்த பண்பும் எண்ணமும் தொன்று தொட்டு நம் உள்ளங்களின் பல தலைமுறையாய் வேருன்றி துளிர்த்து வருவதாகவும், அதே குணங்களும் வரவேற்று விருந்தோம்பும் பண்பும் இங்குள்ள மக்களின் மனதில் உள்ளதை தான் ஒவ்வொரு மக்கா வருகையின் போதும் காண்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், நமதூர் மக்களின் நம்பிக்கை, நேர்மையான பண்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர் இந்த பண்புகளால் தான் பல நிறுவனங்களில் தலைமை பதவியும், நம்பிக்கைக்குரிய பொறுப்புகளும் நமதூர் மக்களை நாடி வருவதாக எடுத்துரைத்தார். மேலும் நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும், மன்றத்தில் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் நல்ல பல கருத்துகளையும் ஆலோசனைகளையும் சொல்லி தனது உரையை நிறைவு செய்து, இந்த புனித தலத்தில் அனைவர்களையும் ஒருங்கே சந்தித்த மகிழ்ச்சியை பரிமாரிகொண்டார்.
பின்னர் மக்கள் வாழ் கயலர்களின் சார்பின் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்க பட்டு, கப்பாரா உடன் சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது. மக்கா வாழ் சகோதர்கள் சார்பில் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க பட்டது .
பின்னர் வந்திருந்தோர் அனைவருக்கும் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்களின் ஏற்பாட்டில் அருசுவைமிக்க பபே உணவு உம்முல் குரா முகர்ரிம் ஹோட்டல் - உணவகத்தில் பரிமாறப்பட்டது.
ஜித்தா அமர்வு:
இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறிய இச்சந்திப்பு நிகழ்ச்சி ஜித்தா காயல் நற்பணி மன்றத்தலைவர் சகோ,குளம் அஹ்மது முஹ்யித்தீன் தலைமையில், மன்றத் துணைத்தலைவர் மருத்துவர் சகோ,முஹம்மது ஜியாது அவரது புதல்வன் முஹ்லிஸ் ஜியாது இறைமறை ஓத ஆரம்பமானது.
நம் குறுகியகால அழைப்பினை அன்புடன் ஏற்று அலுவல் முடித்து ஓய்வை தவிர்த்து சிரமம் எடுத்து இங்கு வந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் மனதார வரவேற்கிறேன் என்றார் சகோ,குளம் அஹ்மது முஹ்யித்தீன்.மேலும், நம் அமீரக துபாய் கா.ந.ம.தலைவர் சகோ ஆடிட்டர் ஜே.எஸ்.எ.புஹாரீ அவர்கள் நம்மையெல்லாம் சந்திக்க வேண்டும், அமர்ந்து கருத்துக்கள் பரிமாற வேண்டும், மன்றப்பணிகள் குறித்து அறிய வேண்டும், நம் நகர் நலன் குறித்து கலந்துரையாட வேண்டும் என்ற அவரது மேலான ஆவலே இத்திடீர் சந்திப்புக்கு / அமர்வுக்கு காரணமென்றும், ஆகவே நமது கருத்துக்கள், கேள்விகள், செய்திகளை இங்கு சமர்பிக்கலாம் என்றும், அவரது கருத்துக்களையும் நாம் கேட்டறியலாம் என்றும் கூறி அமர்ந்தார்.
தொடர்ந்து, தம் கருத்துக்களை தர வந்த சகோஆடிட்டர் ,ஜே.எஸ்.எ.புஹாரீஅவர்கள், அமீரக காயல் நற்பணி மன்றத்தோற்றம், அது ஆற்றிவரும் தொய்வில்லா சேவை, நம் மக்களின் இன்றையத்தேவை, நாம் இனி முற்படுத்த வேண்டிய பணிகள், நம் நகர் கேட்கும் தொலை நோக்கு திட்டங்கள் எவை? அதன் செயலாக்கங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? போன்ற பல்வேறு செய்திகளை அழகாக எடுத்துச்சொன்னார்.
மேலும், நம் மன்றம் மூலம் நம் நகர் துயர் துடைக்க எவ்வழிகளெல்லாம் உள்ளனவோ அனைத்தையும் ஆராய்ந்து துடிப்புடன் செயல்பட நாம் தயாராக இருக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொண்டார். மேலும், அமீரக மன்றத்தின் மூலம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட சில அறிய சேவைகளை கோடிட்டார்.
ஜித்தா நற்பணி மன்றத்தால் ஆரம்பிக்கப்பட்டு அமைதியாக தனது பணியை செவ்வனே செய்து வரும் "இக்ரஃ" கல்வி அமைப்பை வெகுவாக புகழ்ந்த அவர், அதன் தோற்றம் மற்றும் இயக்கம் பற்றி மேலும் ஆவலுடன் கேட்டு தெரிந்து கொண்டார். அதன் வெற்றிக்கு காரணமான ஜித்தா நற்பணி மன்றத்தையும் அதன் நிர்வாகிகளையும் வெகுவாக பாராட்டினார். அது போன்று மருத்துவத்திற்கும் ஒரு அமைப்பு தேவை என்ற தனது கருத்தையும் ஆழமாக பதித்தார்.
இது குறித்த எம் மன்ற நிலைபாட்டை நாங்கள் ஏற்கனவே தீர்மானமாக அறிவித்துவிட்டோம்; அதாவது, "கல்விக்கென்று ஒரு 'இக்ரஃ' இருப்பது போல் மருத்துவத்திற்கென்று ஒரு அமைப்பு உருவாக்கி அதன் மூலம் மருத்துவ பணிகளை செய்யலாம், அதனால் DUPLICATION வருவதை தவிர்க்கலாம். இன்னும் பல மருத்துவ தேவைகளையும் இணைந்து செய்யலாம் என்றார் சகோ,குளம் அஹ்மது முஹ்யித்தீன்.
தொடர்ந்து பேசிய அமீரக துபாய் கா.ந.ம. தலைவர், நம் மன்றங்கள் மருத்துவ, கல்வி சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும், அதற்காக நாம் நமது பணிகளில் நமது குடும்ப பெண்களுக்கும் பங்களிப்பை கொடுத்து அவர்களையும் நகரில் களப்பணிகளாற்ற ஆர்வமூட்ட வேண்டுமென்றும், மகளிர் கல்லூரி,மகளிர் பள்ளி, துளிர் அரங்கம் போன்ற பொது உள்ளரங்குகளில் நடைபெறும் நகர் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நம் பெண்களையும் கலந்து கொள்ளச்செய்து அவர்களின் கருத்துக்களையும் பெறவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அவர்களிடம் பெறப்படும் செய்திளை ஆய்ந்து அதற்கொரு தெளிவை கொடுத்தால், அவர்கள் மேலும் உற்சாகமாக பணியாற்ற முன்வருவார்கள் என்றும் கூறினார்கள்.
மேலும், நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் சந்தாக்களே முதுகெலும்பு என்ற அவர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சந்தா வரவை உயர்த்தும் வழிகளை தேட வேண்டுமென்றும், அதற்காக நமது சகோதரர்களை நேரில் சென்று சந்தித்து நம் மன்றத்தின் நிறை, குறைகளை கேட்டுத்தெரிவதோடு சந்தாவின் அவசியம் குறித்தும் எடுத்துச்சொல்லி அவர்களின் மனதை வென்றெடுக்க வேண்டுமென்றார். நாம் நல்ல காரியங்களின் பக்கம் எவ்வளவு அதிகமாக பயணிக்கிறோமோ அதை விட அதிக வேகத்தில் அல்லாஹ்வின் உதவியும் நம்மை நோக்கி பயணிக்கும் என்று கூறி தனது சீரிய கருத்துக்களையும், சிறந்த ஆலோசனைகளையும் தந்து அமர்ந்தார்.
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திகொண்டனர். பலர் அருமையான கருத்துக்களையும், அற்புத ஆலோசனைகளையும் எடுத்து வைத்தனர். சில உறுப்பினர்கள் ஐயங்களுக்கு தெளிவையும் பெற்றனர். இந்த சந்திப்பு நல்ல பயனுள்ளதாகவும், இந்தக்கலந்துரையாடல் மூலம் பல அரிய செய்திகள் அறிய முடிந்ததென்றும், இதன் மூலம் தமது கருத்துக்களை தாராளமாக பகிர முடிந்ததென்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டனர்.
இரவு 09:௦௦ மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்வு 10:30 மணிக்கு சகோ.ஹுமாயூன் கபீர் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது. அமீரக கா.ந.ம. தலைவரின் அணுசரனையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை சகோ,சட்னி.செய்யது மீரான் மற்றும் பிரபு நூர்தீன் நெய்னா சிறப்பாக செய்திருந்தார்கள.அல்ஹம்துலில்லாஹ்.
தகவல்,
எஸ்.ஹெச்.அப்துல் காதர்
அரபி ஷுஅய்ப் மற்றும்,
மொகுதூம் முஹம்மது (சீனா),
|