எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 15 முதல் விநியோகிக்கப்படும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை வருமாறு:
2012-2013ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாம் ஆண்டு படிப்பிற்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2012-2013ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை பின்வருமாறு:-
1. விண்ணப்பங்கள் வழங்குதல் குறித்த செய்தித்தாள்களில் அறிவிப்பு - 13.5.2012
2. விண்ணப்பங்கள் வழங்குதல் மற்றும் இணையதளம் மூலம் இறக்கம் செய்தல் - 15.5.2012
3. விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் - 30.5.2012 மாலை 3.00 மணி முடிய
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்படும் நாள் - 2.6.2012 மாலை 5.00 மணி முடிய
5. சுழற்சி (Random) எண் வழங்குதல் - 15.6.2012
6. மாணவர்கள் மதிப்பெண் தகுதி அறிவித்தல் - 20.6.2012
7. முதற்கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தல் - 2.7.2012 முதல்
8. இரண்டாம் கட்ட கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு அகில இந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுற்ற பின்னர் இணையதளம் மூலமே
வெளியிடப்படும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross