அண்மையில், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை, ’’பச்சைத்தலையும், காங்கிரீட் வழுக்கையும்‘’ என்ற தலைப்பில், சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை எழுதியிருந்தார்.
இக்கட்டுரையைப் படித்த பலர், பயிற்சி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, கட்டுரையாளர் சாளை பஷீர் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டு / மாடித் தோட்டத்தில் காய்கறிச்செடிகளைப் பயிரிடுவதற்கான பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டை வேளாண்மை உதவி மையத்தில், காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெறும். வேளாண் துறை வல்லுநர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சியளிப்பர்.
பயிற்சிக்கான எழுதுபொருட்கள் பயிற்சி மையத்திலேயே தரப்படும். அத்துடன் தேனீர் - சிற்றுண்டியும் வழங்கப்படும். மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் உணவுக் கட்டணம், ஊர்திக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் என அனைத்திற்கும் சேர்த்து ஒரு பங்கேற்பாளருக்கான கட்டணம் 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயிற்சி வகுப்பிற்கு 18 பேர் வரை சேர்த்துக்கொள்ளப்படுவர். இதுவரை 07 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர். இன்னும் 11 இருக்கைகள் மீதமுள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பெயர்கள் பதிவு செய்யப்படும். 18 இருக்கைகளும் நிரம்பியவுடன் பயிற்சி வகுப்பிற்கான தேதி அறிவிக்கப்படும்.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், எழுத்து மேடை கட்டுரையாளர் சாளை பஷீர் அவர்களை +91 99628 41761 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இப்பயிற்சியில் ஆண்களும், பெண்களும் கலந்துகொள்ளலாம். எனினும் காயல்பட்டினத்தைப் பொருத்த வரை பெரும்பாலும் பெண்களே இல்லங்களில் இருப்பதால் அவர்களின் பங்கேற்பு வரவேற்கப்படுகின்றது. வெளிநாடுகளில் உள்ள பசுமையில் ஆர்வமுள்ள காயலர்கள் தங்கள் இல்லப் பெண்மணிகளை இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உற்சாகமூட்டலாம்.
பங்கேற்க வரும் பெண்களுக்காக பெண் துணையாளிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |